twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போட்டுக்க நல்ல துணி இல்ல.. யார்க்கர் கிங் நடராஜனின் மறுபக்கம்.. விஜய் டிவி புகழ் வெளியிட்ட வீடியோ!

    |

    சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனை நேரில் சந்தித்து பேசிய வீடியோவை புகழ் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.

    இடதுகை வேகப்பந்து வீச்சாளரான நடராஜனின் யார்க்கர் பந்துகள், பிரெட் லீ உள்ளிட்ட பல கிரிக்கெட் ஜாம்பவான்களின் பாராட்டினையும் பெற்றிருந்தது. தொடர்ந்து, இந்திய அணியிலும் அவர் இடம்பிடித்து ஆடி வந்தார். ஆனால், காயம் காரணமாக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    Vijay tv pugal visit t Natarajan house viral video

    இதையடுத்து, ஐபிஎல் ஏலத்தில் மீண்டும், ஹைதராபாத் அணியே எடுத்துள்ளது. இன்னும் சில தினங்களில் 15வது ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. இதற்காக நடராஜன் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார். ஐபிஎல் போட்டிகளிலும், அவர் மீண்டும் அசத்துவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

    சேலத்திலுள்ள நடராஜனின் வீட்டிற்கு விஜய் டிவி புகழ் அண்மையில் சென்றிருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ஏராளமான லைக்குகளை பெற்றது. தற்போது, புகழ் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ரொம்ப நாளாவே நம்ம நட்ராஜ், உங்கள பாக்கணும் அண்ணா, கண்டிப்பா பாக்கணும்ன்னு கேட்டுட்டே இருந்தாரு. இன்னைக்கு அவர் வீட்டுக்கு போய்ட்டு இருக்கோம் என்கிறார்.

    ப்ரீ ரிலீஸ் வியாபாரத்திலேயே இப்படி ஒரு சாதனையா... சொல்லி அடிக்கும் ஆர்ஆர்ஆர் ப்ரீ ரிலீஸ் வியாபாரத்திலேயே இப்படி ஒரு சாதனையா... சொல்லி அடிக்கும் ஆர்ஆர்ஆர்

    இதையடுத்து பேசிய நட்ராஜ், எங்கப்பா தங்கராசு, அம்மா சாந்தா, எனக்கு 3 தங்கச்சி, 1 தம்பி. எனக்கு நிறைய தடைகள் வந்தது. இங்க இருந்து போறதுக்கு பஸ் கிடையாது. போட்டுக்க நல்ல துணி இருக்காது. முக்கியமா பாத்ரூம் இருக்காது என்கிறார். தான் சர்வதேச அளவில் விளையாடினாலும், உள்ளூரில் இருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்காக சொந்த முயற்சியில் கிரிக்கெட் கிரவுண்ட் ஒன்றையும் தயார் செய்து வருகிறார் நட்ராஜ்.

    English summary
    Vijay tv pugal visit t Natarajan house viral video
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X