அடி பலமோ.. கமலை கலாய்த்த புகழ், குரேஷி.. இப்போ எப்படி மன்னிப்பு கேட்கிறாங்க பாருங்க!

சென்னை: பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் கமல்ஹாசனை கலாய்த்த நிலையில், நாமும் கொஞ்சம் வச்சு செய்யலாம் என நினைத்த விஜய் டிவியின் புகழ் மற்றும் குரேஷிக்கு தற்போது பயங்கர அடி விழுந்துள்ளது போலத் தெரிகிறது. கமல்ஹாசன் ரசிகர்கள் போட்ட போடுல தற்போது இருவரும் மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டது தீயாக பரவி வருகிறது.

இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு டாக்ஸிக் இந்த சீசன் 7ல் இருந்ததாக ரசிகர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கினர். மேலும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் உலக நாயகனை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் முதல் விமர்சகர்கள் வரை இந்த முறை எல்லை மீறி விமர்சிக்கவும் கலாய்க்கவும் செய்தனர்.

Vijay Tv Pugazh and Kureshi asks apology to Kamal Haasan for trolling him with Maya


பிக் பாஸ் பரிதாபங்கள்: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அணிந்து வந்த உடை வரைக்கும் வைத்து பிக் பாஸ் பரிதாபங்கள் நிகழ்ச்சியில் கோபி மற்றும் சுதாகர் பயங்கரமாக ட்ரோல் செய்து வீடியோ போட்டனர். அத்துடன் நிற்காமல் பிரபல யூடியூப் சேனல் நடத்திய விழா மேடையிலும் கமல்ஹாசனையும் மாயாவையும் சேர்த்து வைத்து காமெடி எனும் பெயரில் பண்ண சேட்டைகள் எல்லாம் கமல் ரசிகர்களை கடுப்பாக்கியது.

விஜய் டிவி பிரபலங்களே: அவர்களை போலவே பலரும் இந்த சீசனை வைத்து கமலை கலாய்க்க ஆரம்பித்தனர். அதிலும், விஜய் டிவி பிரபலங்களான புகழ் மற்றும் குரேஷி துபாயில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் மேடையில் கமல்ஹாசனையும் மாயாவையும் சேர்த்து வைத்து பேசி ஜோக் அடித்தது கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

மன்னிப்புக் கேட்டு வீடியோ: வெளிநாட்டில் பேசியது எல்லாம் உள்ளூரில் தெரியாது என நினைத்துக் கொண்ட இருவருக்கும் அந்த வீடியோவை மொபைலில் எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு கமல் ரசிகர்கள் கன்னா பின்னாவென திட்டி வருகின்றனர். டிவி சேனலில் இருந்தும் பிரஷர் வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், உடனடியாக புகழ் மற்றும் குரேஷி இருவரும் மன்னிப்புக் கேட்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.

கமல் மீது மரியாதை அதிகம்: தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான கமல் சார் மீது மரியாதை அதிகமாகவே உள்ளது. அந்த நிகழ்ச்சியில் எழுதிக் கொடுத்த ஸ்க்ரிப்ட்டை படித்தோம். அது இந்த அளவுக்கு பெரிய சர்ச்சையை கிளப்பும் என எதிர்பார்க்கவில்லை. கமல் ரசிகர்கள் மனம் புண்பட்டு இருந்தால் எங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என இருவரும் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X