Vijay Tv Pugazh: மனைவி வளைகாப்பில் ப்ளூ சட்டை மாறனாக மாறிய புகழ்.. எப்படி இருக்காரு பாருங்க!

சென்னை: விஜய் டிவி பிரபலம் புகழின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், வளைகாப்பு விழாவை வெகு விமர்சையாக கொண்டாடி உள்ளார் புகழ். அந்த நிகழ்ச்சியின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த புகழ் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார். ரியாலிட்டி ஷோ மூலமாக கிடைத்த பிரபலத்தை வைத்து புகழ் சினிமாவிலும் காமெடி நடிகராக கலக்கி வருகிறார்.

Vijay Tv Pugazh wife baby shower video trending in social media

பென்ஸி என்பவரை காதலித்து வந்த புகழ் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்ட புகழ் சமீபத்தில் தனது திருமண நாளை கொண்டாடினார். அப்போது, தனது மனைவி பென்ஸி கர்ப்பமாக இருக்கும் சந்தோஷ செய்தியை அறிவித்து ரசிகர்களின் வாழ்த்துக்களை அள்ளி வருகிறார்.

"என்னுடைய வளர்ச்சியில் வழித்துணையாய் வந்தவள், இப்போது என்னை என் வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளாள். இத்தனை நாட்களில் எத்தனையோ பரிசுகளை எனக்கு அளித்தவள், ஆனால் இன்று அவள் அளித்த பரிசிற்கு ஈடு இணையே இல்லை. என் அனைத்து சுக துக்கங்களிலும் என்னுடன் இருந்தவள் நீ, இனி இன்னொரு உயிரும் நம்முடன் இருக்கப்போகிறது என்று நினைக்கும் போது, இதைவிட பெரிய மகிழ்ச்சி இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை.. என்னை தகப்பனாக்கிய என் தாயுமானவளுக்கு அன்பு முத்தங்கள்... இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் பென்ஸி புகழ்" என தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றையும் போட்டிருந்தார்.

கடந்த ஆண்டு தனது காதலியான பென்ஸியை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்ட புகழ் இன்று கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்திய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

விஜய் டிவி புகழின் நண்பரான நாஞ்சில் விஜயன் புகழ் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

அதில், நீல நிற பட்டுச்சட்டை மற்றும் பட்டு வேட்டியை அணிந்துக் கொண்டு புது மாப்பிள்ளை கணக்கா புகழ் இருக்க அவருக்கு சந்தனம் எல்லாம் பூசி நலங்கு வைத்து நாஞ்சில் விஜயன் புகழையும் அவரது மனைவியையும் வாழ்த்தும் வீடியோ ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X