வீட்டில் விசேஷம்.. போட்டோவோடு குட் நியூஸ் சொன்ன ஆலியா மானசா.. வாழ்த்தும் பேன்ஸ்!

சென்னை: விஜய் டிவியின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான ஆலியா மானசா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி டிஆர்பி ரேட்டை எகிர வைக்கும் சீரியல்களில் ஒன்றாக இந்த சீரியலை மாற்றி இருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஆலியா மானசா தற்போது மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை தனது ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.

நடிகை ஆலியா மானசா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த தொடரில் இவர் நடித்த செண்பா கதாபாத்திரம் இல்லத்தரசிகள் மனதில் இடம் பிடித்தது. ராஜா ராணி தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவை காதலித்து வந்த நிலையில் 2019ஆம் ஆண்டு இருவரும் திருமணம் கொண்டனர். இவர்களுக்கு 2020ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பிற்கு பிறகு சில மாதங்களிலேயே ஆலியா, ராஜா ராணி 2 தொடரில் லீட் ரோலில் நடித்தார்.

Alya manasa Sanjiv Raja rani

சீரியலில் படுபிஸி: ராஜா ராணி தொடரில் நடித்து வந்த போதே, இரண்டாவதாக ஆலியா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போதே அந்த தொடரில் நடித்து வந்தார். இதையடுத்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு அந்த சீரியலில் இருந்து விலகினார். இரண்டாவது குழந்தை பிறகு கொழு கொழுவென இருந்த ஆலியா மானசா 50 நாளில் 16 கிலோ வரை எடையை குறைத்து, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகிறார்.

ஓ இதுதான் அந்த குட் நியூஸா: இந்நிலையில், ஆலியா மானசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட் நியூஸ் ஒன்று இருக்கு என்று கூறியிருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் மீண்டும் கர்ப்பமா என கேட்டு வந்த நிலையில், ஆல்யா - சஞ்சீவ் ஜோடி, புதிய வீடு ஒன்றை வாங்கி இருப்பதாகவும், அதற்கான வேலைகள் விரைவில் முடிய உள்ளதால், அதன் கிரஹபிரவேசம் நடைபெற உள்ளதாகவும், அதற்கான கிளீனிங் வேளையில் இறங்கி உள்ளதாக கையில் துடப்பத்தோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதோடு, ரசிகர்கள் பலர் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X