அப்பாவுக்கு கேன்சர்.. படிப்பை பாதியிலேயே நிறுத்தினேன்.. ஆல்யா மானசா வாழ்க்கையில் இத்தனை சோகமா?
சென்னை: நடிகை ஆலியா மானசா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த தொடரில் செண்பா என்ற கதாபாத்திரம் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த ஆலியா மானசா தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
ராஜா ராணி தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவை காதலித்து வந்த நிலையில் இருவரும் 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2020ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பிற்கு பிறகு சில மாதங்களிலேயே ஆலியா, ராஜா ராணி 2 தொடரில் லீட் ரோலில் நடித்துக்கொண்டு இருக்கும் போதே, அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்புக்கு பின், விஜய் டிவியில் இருந்து விலகி, சன் டிவியில் இனியா என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

சீரியல் நடிகை ஆல்யா மானசா: இந்த நிலையில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள, ஆல்யா மானசா தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து பேசி உள்ளார். அதில் நான் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தேன். காலையில் எழுந்திருப்பேன், மேக்கப் போட்டுக்கொண்டு ஆடிஷனுக்கு செல்வேன். சிலநேரம் அவர்கள் சொல்லும் விஷயம் எனக்கு செட் ஆகாது, பல நேரம் அவர்களே அழைப்பதாக சொல்லி வெளியில் அனுப்பி விடுவார்கள். அந்த நேரத்தில் குடும்பத்தில் பணத்தேவை இருந்ததால், ஜிம் பயிற்சியாளராகவும், குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக் கொடுப்பவர்களாகவும், பாடலில் பின்னணியில் நடனம் ஆடுவது என பல வேலைகளை செய்தேன்.
அப்பாவுக்கு புற்றுநோய்: ஆனால், அப்போதும், சினிமாவில் முயற்சி செய்துகொண்டே இருந்தேன், அந்த நேரத்தில் தான் சின்னத்திரை வாய்ப்பு வந்தது, அப்போது எனது அப்பாவும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். எனவே எனது அப்பாவை காப்பாற்ற சினிமா கனவை விட்டு சீரியல் நடிக்க வந்தேன். சினிமாவில் நடித்து இருந்தால் தீபாவளி, பொங்கலுக்குத்தான் தியேட்டரில் பார்ப்பார்கள். ஆனால், இப்போது என்னை தினமும் என்னை பார்க்கிறார்கள், என்னை குடும்பத்தில் ஒருத்தியாக பார்க்கிறார்கள் அதை நினைக்கும் போது எனக்கு மகிழ்ச்சிதான் என்றார்.


Click it and Unblock the Notifications











