ஸ்ருதிகாவுக்கு செம்ம பல்பு கொடுத்த ராஜு.. ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் கலகலப்பு!

சென்னை : விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவதற்கு காரணம் அதன் வித்தியாசமான மேக்கிங் தான்.

Recommended Video

CWC | சிறப்பாக நடந்து முடிந்த Cook With Comali 3 நிகழ்ச்சி! *TV | Filmibeat Tamil

அந்த வகையில் கடந்த இரு வாரங்களாக ஒளிபரப்பாகிவரும் ராஜு வூட்ல பாட்டி நிகழ்ச்சி சிறப்பான விருந்தினர்களுடன் களைகட்டி வருகிறது.

இதனிடையே இந்த வார நிகழ்ச்சிக்கான புதிய ப்ரமோ வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சி

ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சி

விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சிகளில் பிக்பாஸ், குக் வித் கோமாளி, பிக்பாஸ் ஜோடிகள் போன்றவை அதிகமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. தொடர்ந்து அடுத்தடுத்த நிகழ்ச்சிகளை ரூம் போட்டு யோசித்து தொடர்ந்து கொடுத்து வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் தற்போது ராஜு வூட்ல பார்ட்டி, அண்டாகாகசம் போன்ற புதிய நிகழ்ச்சிகள் களமிறக்கப்பட்டுள்ளன.

 அமலாபாலின் சிறுவயது காதல்

அமலாபாலின் சிறுவயது காதல்

இதில் ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சி சிறப்பான துவக்கத்துடன் பிரம்மாண்டமான ப்ரமோக்கள் உள்ளிட்டவையுடன் ஒளிபரப்பாகின. இதில் இரண்டாவது வாரத்திலேயே நடிகை அமலா பாலை பேட்டி எடுத்து சூப்பராக ஒளிப்பியது இந்த நிகழ்ச்சி. அவரது சிறுவயது காதல் கதைகளை அமலாபால் பகிர்ந்துக் கொண்டது வைரலானது.

புதிய ப்ரமோ வெளியீடு

புதிய ப்ரமோ வெளியீடு

இதையடுத்து ஒவ்வொரு வாரமும் ஒரு கான்செப்டில் விருந்தினர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 3யின் போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் சிறப்பான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. ஸ்ருத்திகா, அம்மு அபிராமி தர்ஷன் உள்ளிட்டவர்களிடம் பல கேள்விகளை தொடர்ந்து கேட்கிறார் ராஜு.

தர்ஷனை பாராட்டிய சிவகார்த்திகேயன்

தர்ஷனை பாராட்டிய சிவகார்த்திகேயன்

குக் வித் கோமாளி சீசன் 3யின் முதல் ரன்னர் அப்பாக வெற்றி பெற்ற தர்ஷன் தனக்கு சிவகார்த்திகேயன் தொலைபேசி மூலம் வாழ்த்துக்களை தெரிவித்ததாக பெருமையுடன் பகிர்ந்துக் கொண்டார். தொடர்ந்து பேசிய அம்மு அபிராமி தான் பல சொதப்பல்களை செய்த நிலையில் வெற்றி பெறுவேன் என்று நினைக்கவே இல்லை என்று கூறினார்.

 ஸ்ருதிகாவிற்கு பல்பு கொடுத்த ராஜு

ஸ்ருதிகாவிற்கு பல்பு கொடுத்த ராஜு

ஸ்ருதிக்காவின் எனர்ஜி அந்த நிகழ்ச்சியில் அதிகமாக இருந்ததாகவும் அவருடைய அழகு வேற லெவலில் இருந்ததாகவும் கூறிய ராஜு, அதற்காக அவருக்கு கைக்கொடுப்பதாக கூறி எழுந்து சென்று குரேஷிக்கு கைக்கொடுக்கிறார். இதனால் பல்பு வாங்குகிறார் ஸ்ருதிகா. இதையடுத்து மற்றவர்கள் அவரை கலாய்க்க, ராஜுவிடம் சண்டைக்கு போகிறார் ஸ்ருத்திகா.

ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி

ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சி தற்போது ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நிகழ்ச்சியில் ராஜு மட்டுமில்லாமல் தீபா, சுனிதா, மதுரை முத்து உள்ளிட்டவர்களும் இணைந்து விருந்தினர்களை கலாய்ப்பது இதன் ஸ்பெஷல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X