For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வெறும் சவுண்டு தான் வருது.. ஆனா டக்கு டக்குனு அதைமட்டும் மாத்துறாரே ரம்யா!

  |

  சென்னை : ஜிம்மு அதேதான்.. ஆனால் போட்டிருக்கிற டிரஸ்தான் வேற என்று படையப்பா ரஜினி கணக்காக கலக்கல் காட்டியுள்ளார் ரம்யா.

  சூப்பரான இசையின் பின்னணியில் டக்கு டக்கென துணிகளை மாற்றி மாற்றிப் போட்டு மேஜிக் காட்டியுள்ளார் ரம்யா.

  ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்’ பாடல் ஆகஸ்டில் ரிலீஸ்… தமிழில் பாடியது யார் தெரியுமா?ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்’ பாடல் ஆகஸ்டில் ரிலீஸ்… தமிழில் பாடியது யார் தெரியுமா?

  ரம்யா உடற்பயிற்சி செய்வதில் கில்லாடி. சாக்ஷி அகர்வாலுக்கும், இவருக்கும் உடற்பயிற்சி என்றால் ரொம்பப் பிடிக்கும். அப்படிப்பட்ட வீடியோதான் இது.

  கலர் கலராகப் பனியன்

  கலர் கலராகப் பனியன்

  ஆப் மூலமாக டக் டக்கென டிரஸ்ஸை மாற்றி மாற்றிக் காட்டி அவர் போட்டுள்ள வீடியோ ரசிக்கும்படியாக உள்ளது. சில குசும்பு பிடித்த ரசிகர்கள், என்னதான் கலர் கலராக டிரெஸ்ஸ கழட்டுனாலும் ஒண்ணும் தெரியலையே என்று ஸ்லோமோஷனில் பார்த்து வருகின்றனர் .மலர்களே மலர்களே பாடலுக்கு மாஸ்டர் நடிகை ரம்யா சுத்தி சுத்தி போட்டுள்ள ஆட்டத்தைப் பார்த்து அவரது பாலோயர்களும் தலைசுத்தி தான் போயிருப்பாங்க.

  பிடுங்குவதில் கெட்டிக்காரர் தான்

  பிடுங்குவதில் கெட்டிக்காரர் தான்

  தொகுப்பாளர்களிலேயே டக்குனு ஞாபகத்திற்கு வருவதில் ரம்யாவும் ஒருவர் . இவருடைய கலகலப்பான பேச்சு அழகால் எந்த நிகழ்ச்சியை கொடுத்தாலும் அதை விறுவிறுப்பானதாக மாற்றிவிடுவார். அடுத்தவர்களின் மனம் கோணாதபடி அவர்களின் வாயிலிருந்து வார்த்தைகளை பெறுவதில் இவர் சகலகலா வல்லவர் தான். அதனால் தான் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் இவரே தொகுப்பாளராக இருந்து வந்துள்ளார்.

  தனி திறமை தான்

  தனி திறமை தான்

  ஆர்ஜே ,விஜே ,நடிகை என பன்முகத்திறமை கொண்ட ரம்யா தான் பங்கெடுத்த அத்தனை துறைகளிலும் நல்ல பெயரை பெற்றுள்ளார்.பேசிக்காக உடற்பயிற்சிக்கான ஆலோசகரான இவர் உடற்பயிற்சிக்கான ஆலோசனை மட்டும் கொடுக்காமல் தாமும் அதை கரெக்டாக பலோ செய்து அவ்வப்போது உடற்பயிற்சி குறித்த வீடியோக்களையும்,தான் உடலை மெயிண்டன் செய்து வருவது குறித்து செய்தியையும் வெளியிட்டு கொண்டே இருக்கிறார்.

  Ramya Pandian அட்டகாசமான Photoshoot | அழகின் ரகசியம் இதுதானா?
  செம பெர்பாமன்ஸ்

  செம பெர்பாமன்ஸ்

  இவர் அப்லோடு செய்த வீடியோக்களை பார்க்கும் பொழுது அனைத்து வீடியோக்களிலும் இருப்பது இவர்தான் என்று சந்தேகப்படும் அளவிற்கு ஒவ்வொரு வீடியோவிலும் வெரைட்டியான பெர்பாமன்ஸ் கொடுத்துள்ளார். தற்பொழுது இவர் ஜிம் அதே தான் டிரஸ் தான் வேற அப்படிங்கிற கேப்சன் போட்டு வீடியோவை போட்டு இருக்கின்றார்.

  அப்படியா தெரியுது

  அப்படியா தெரியுது

  வீடியோவை பார்த்த ரம்யா ரசிகர்கள் ஜிம் எதுவா இருந்தா என்ன டிரஸ் எப்படி இருந்தா என்ன நாங்க என்ன அதையா பாக்க போறோம் என்று அவரிடமே ஜாலியாக கேள்வி கேட்டு வருகின்றனர். ஜிம்முக்கு வரும் மற்ற நபர்கள் ஏதோ வெயிட் லிப்ட் கம்பி தான் என்று நினைத்து ரம்யாவை தூக்காமல் இருந்தால் சரிதான் . ஏனென்றால் ரம்யா போற வேகத்தைப் பார்த்தால் போகப்போக உடற்பயிற்சி செய்தே கம்பிக்கும் ரம்யாவுக்கும் வித்தியாசம் தெரியாத மாதிரி போயிடும் போல.

  English summary
  Vijay TV fame Ramya Subramaniam has put up a video on her doing exercise, and her reel has gone viral among the netizens.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X