விஜய் டிவி ரம்யாவுக்கும் அஜீத்துக்கும் கல்யாணம்!
விஜய் டிவியின் அழகுத் தொகுப்பாளின் ரம்யாவிற்கு திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. பிப்ரவரியில் திருமணமாம்.
இது பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்த திருமணம். மாப்பிள்ளை லண்டனில் சட்டமும், பொருளாதாரமும் படித்தவராம்.
விசுவல் மீடியா படித்துவிட்டு விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் ரம்யா, இதுவரை சீரியல் வாய்ப்புகளையும் சினிமா வாய்ப்பினையும் தவிர்த்தே வந்திருக்கிறார்.
இப்போது புதிதாக மணப்பெண்ணிற்குரிய களையும் சேர்ந்து கொண்டிருக்கிறது ரம்யாவின் முகத்தில் அதனால்தான் மேக் அப் இல்லாமலேயே ஜொலிக்கிறார். உங்களில் யார் அடுத்த பிரபுதேவா? நம்ம வீட்டுக் கல்யாணம் என பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ரம்யாவைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

செல்லப்பிள்ளை
அப்பா கே. சுப்ரமணியன், தமிழ்நாட்டின் முன்னாள் அட்வகேட் ஜெனரல். சென்னை ஹை கோர்ட்லயும் சுப்ரீம் கோர்ட்லயும் வொர்க் பண்ணியிருக்கார். அம்மா வசந்தி, ஹோம் மேக்கர் அண்ணன் தீபக் டாக்டர். அப்பா அம்மா இருவருக்கும் செல்லமாம்.

நடனமும் தெரியும்
பரத நாட்டியம் கற்றுக் கொண்டு எட்டாவது படிக்கும்போது அரங்கேற்றம் நடந்துள்ளது. டான்ஸ் ஸ்காலர்ஷிப் வாங்கி இருக்கிறார்.

மிஸ் சென்னை
விஸ்காம் படிச்சு விஜே ஆனாலும் பார்ட்டி, கிளப்னு சுத்தினதில்ல. காலேஜ் முடிஞ்சவுடனே வீட்டுக்கு வந்துவிடுவாராம். மிஸ் சென்னை காம்படீஷன்ல ஃபைனல்ஸ் வரைக்கும் வந்து மிஸ் பியூட்டிஃபுல் ஸ்கின், மிஸ் ஹாட்டஸ்ட் வாய்ஸ், மிஸ் டேலண்ட் ஆப் சென்னை என மூணு சப் டைட்டில்ஸ் ஜெயித்திருக்கிறார்.

முதன் முதலாய்
விஜய் டிவியில் ரம்யாவின் முதல் ப்ரோக்ராம் ஜகன்கூட ‘கிங் க்வீன் ஜாக்'. அடுத்து சேது கூட ‘கலக்கப்போவது யாரு.?' அந்த நிகழ்ச்சியில சிவ கார்த்திகேயன் போட்டியாளர். இப்ப அவர் சினிமா ஹீரோ. அவரும் அவர் மனைவியும் ரம்யாவிற்கு நல்ல நண்பர்களாம்.

சினிமா, சீரியல் நோ
திரைப்பட இயக்குநர் ஆகவேண்டும் என்றுதான் விஸ்காம் படித்தாராம். பிறகு சின்னத்திரை தொகுப்பாளினியாகிவிட்டார். நடிப்பு, ரியாலிட்டி ஷோ, சினிமா, சீரியல் போன்றவைகளை தவிர்த்துவிட்டார்.

திருமண நிச்சயம்
அப்பா, அம்மா பார்த்து வைத்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளப் போகிறார். மாப்பிள்ளை பெயர் அஜீத். லண்டனில் எம்.எஸ் சட்டம் மற்றும் பொருளாதாரத்தில் பட்ட மேற்படிப்பு படித்திருக்கிறாராம்.

சென்னைதான் உயிர்
லண்டன் மாப்பிள்ளையாக இருந்தாலும் சென்னையை விட்டு போகமாட்டாராம். அஜீத்துக்கும் சென்னைதான் ரொம்ப பிடிக்குமாம். அதைவிட ரம்யாவின் நிகழ்ச்சிகள் ரொம்ப ரொம்ப பிடிக்குமாம்.

அஜீத் கொடுத்த பரிசு
பிப்ரவரியில் திருமணம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது. நிச்சய தினத்தன்று அஜீத் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசை நினைத்து அசந்து போய் உள்ளார் ரம்யா.
திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள் ரம்யா!


Click it and Unblock the Notifications











