Don't Miss!
- News
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு குரங்கு அம்மை பரிசோதனை... விமான நிலையங்களுக்கு உத்தரவு
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Automobiles
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Lifestyle
உடல் எடையை குறைக்கும்போது இரவு உணவிற்கு முட்டை அல்லது கோழி எடுத்துக்கொள்வது நல்லதா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தரமான சம்பவத்திற்கு உத்தரவாதம் தரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி... புதிய பிரமோ வெளியீடு
சென்னை : விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 3 நேற்று முதல் துவங்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் புதிய குக்குகள், கோமாளிகள் அறிமுகம் செய்யும் நிகழ்வுகள் நேற்றைய தினம் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் புதிய பிரமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 3 நேற்று முதல் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் புதிய குக்குகள், கோமாளிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நேற்றைய தினம் நடைபெற்றது. புதிய கோமாளிகளுடன், நிகழ்ச்சி களைகட்டியது.

ரசிகர்கள் கொண்டாட்டம்
முதல் நாளிலேயே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்குரிய நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்தது. மனோபாலா, ரோஷினி, அம்மு அபிராமி, ஷ்ருதிகா, பரத், அந்தோணி தாசன், மூக்குத்தி முருகன், குரேஷி, வெட்டுக்கிளி பாலா, ஷிவாங்கி, மணிமேகலை உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.

உற்சாக துவக்கம்
மொத்தம் 70 எபிசோடுகள் இந்த நிகழ்ச்சியில் திட்டமிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் முதல் எபிசோட் மிகுந்த உற்சாகத்துடன் துவங்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஆட்டம், பாட்டம் என நிகழ்ச்சி களைகட்டியது. ரசிகர்களுக்கு ஃபன் ஃபில்ட் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி துவங்கியுள்ளது.

வேற லெவல் கோமாளிகள்
நிகழ்ச்சியின் கோமாளிகள் வேற லெவலில் காணப்படுகின்றனர். குக்குகளும் தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை முதல் எபிசோடிலேயே நிரூபித்துள்ளனர். என்டர்டெயின்மெண்டில் நாங்களும் கலந்துப்போம்ல என்று வரிந்துக்கட்டிக் கொண்டு செஃப்களும் களமிறங்கியுள்ளனர்.

கத்திரிக்காய் காமெடி
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இன்றைய பிரமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் கத்திரிக்காய் தொக்கை கொக்கு என்று பரத் கூறுவதும் கடுப்பான வெங்கடேஷ் பட் அவரை அடிக்க பாய்வதும் என காட்சிகள் சிறப்பாக காணப்படுகின்றன.

சிறப்பான பிரமோ வெளியீடு
இந்த சீசனில் சிறப்பான என்டர்டெயின்மெண்டை பாலா, பரத் உள்ளிட்டவர்கள் அளிப்பார்கள் என்பது இந்த பிரமோ மூலம் வெளிப்பட்டுள்ளது. கத்திரிக்காயை வைத்தே அவர் இந்த அளவிற்கு ரசிகர்களுக்கு என்டர்டெயின்மெண்ட் கொடுத்துள்ளது பார்ப்பதற்கு சிறப்பாக அமைந்துள்ளது.