ஈரமான ரோஜாவே தொடரில் மாறிய ஜோடி... அடுத்தடுத்த ட்விஸ்ட்களுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!
சென்னை : விஜய் டிவியில் 800 எபிசோட்களை கடந்து ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே தொடரின் வெற்றியை அடுத்து கடந்த சில வாரங்களாக அதன் சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. காதல், திருமணம் என அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில் தற்போதுதான் மெயின் பிக்சருக்கே சீரியல் வந்துள்ளது.

விஜய் டிவி தொடர்கள்
விஜய் டிவியில் சீரியல்களுக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. மற்ற சேனல்களை போலவே இதிலும் சீரியல்களுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் காணப்படுகிறது. பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களை போலவே விஜய் டிவியின் முக்கியமான தொடராக ஈரமான ரோஜாவே காணப்படுகிறது.

ஹிட்டடித்த முதல் சீசன்
இந்தத் தொடரின் சீசன் ஒன் 800 எபிசோட்களுடன் மிகப்பெரிய ஹிட்டடித்தது. ரசிகர்களின் விருப்பத்திற்குரிய இந்த சீரியலில் பவித்ரா, ஜனனி, திரவியம் உள்ளிட்டவர்கள் முன்னணி வேடங்களில் நடித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது இதன் இரண்டாவது பாகம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கியுளளது.

விறுவிறுப்பான கதைக்களம்
கடந்த ஜனவரி 17ம் தேதி முதல் விஜய் டிவியில் தனது பயணத்தை துவங்கியுள்ளது ஈரமான ரோஜாவே தொடர். ஹீரோவாக சித்தார்த், திரவியம் நடித்து வருகின்றனர். ஹீரோயின்களாக ஸ்வாதி, கேப்ரியெல்லா நடித்து வருகின்றனர். இந்தத் தொடர் விறுவிறுப்பான கதைக்களத்துடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

ஜோடி மாற்றம்
இந்தப் படத்தின் ஜோடி மாற்றத்தை வைத்து கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர். திருமணத்தின்போது அக்கா கடத்தப்பட, மணப்பெண்ணாகிறார் தங்கை. அண்ணனை அவர் மணந்த நிலையில், அவரது தம்பிக்கு ஜோடியாகிறார் கடத்தப்பட்ட அக்கா. இப்படி ட்விஸ்டுடன் கதை நகர்கிறது.

மாறிய ஜோடி
கதைப்படி அண்ணன் மற்றும் அக்காவிற்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அதேபோல அவரது தம்பியும் மற்றொரு நாயகியான தங்கையும் காதலிப்பதாக இதுவரை கதை நகர்ந்தது. திருமணத்திற்கு சிறப்பாக தயாரானது மூத்த ஜோடி. ஆனால் கதையில் தற்போது ஜோடி மாற்றம் நிகழ்ந்துள்ளது.

புதிய ப்ரமோ
இரண்டு ஜோடிகளும் சந்தர்ப்பவசத்தால் மாறியுள்ளது. இந்த வாரத்தில் இந்த ஜோடி மாற்றமே கதையாக அமைந்துள்ளது. இரண்டு ஜோடிகளுமே கொஞ்சமும் விருப்பமில்லாமல் சேர்ந்துள்ளது. இதைக் குறிப்பிடும் வகையில் தற்போது விஜய் டிவி ப்ரமோ வெளியிட்டுள்ளது. மணமகனின் தம்பியை மணக்கும்படி தன்னுடைய மூத்த பெண்ணிடம் கெஞ்சுகிறார் அவரது அப்பா.

அடுத்தடுத்த ட்விஸ்ட்கள்
இந்த வாரத்தில் இரண்டு ஜோடியும் மாறி திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து கதையில் அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் காத்திருக்கின்றன. இரண்டு ஜோடிகளும் தங்களது அடுத்தக்கட்ட வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சிறப்பான வாழ்க்கைக்காக காத்திருந்த அவர்களது வாழ்க்கையில் காலம் ஏற்படுத்திய கோலம் கதைக்களமாக அமையவுள்ளது.


Click it and Unblock the Notifications











