Don't Miss!
- News
பிரதமர் மோடி வருகை.. சென்னைவாசிகளே இந்த பக்கம் போகாதீங்க.. நெரிசலில் சிக்கவேண்டியிருக்கும்
- Sports
நிறைய தப்பு பண்ணிட்டோம்.. தோல்விக்கு பிறகு கலங்கிய ராகுல்.. துள்ளிகுதித்த டுபிளஸிஸ்
- Finance
சென்னை ஐஐடி நிறுவனத்துடன் இந்தியா சிமெண்ட்ஸ் ஒப்பந்தம்.. எதற்காக தெரியுமா..? #3D
- Technology
ரூ.300 விலைக்குள் இத்தனை சிறந்த Airtel, Vi திட்டங்களா? பட்ஜெட் விலையில் பெஸ்டான நன்மைகள்..
- Automobiles
மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல... நடந்தது என்ன?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிரிக்காம சமாளிக்கறது கஷ்டம்தான் போலருக்கே... வித்யூ ராமனின் வேற லெவல் பிரமோ
சென்னை : விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தனது 3வது சீசனை நேற்றைய தினம் துவங்கியுள்ளது.
முந்தைய இரண்டு சீசன்கள் ரசிகர்களிடையே ஏற்படுத்திய உற்சாக வரவேற்பை அடுத்து மிகவும் சிறப்பான எபிசோடுகளுடன் இந்த நிகழ்ச்சி களமிறங்கியுள்ளது.
நிகழ்ச்சியில் புதிய குக்குகள் மற்றும் கோமாளிகள் இணைந்து நிகழ்ச்சிக்கு சிறப்பான கவனத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
யாஷிகாவுடன் பிரேக் அப்… இதுதான் காரணம்… மனம் திறந்த நிரூப் !

குக் வித் கோமாளி நிகழ்ச்சி
விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியாக விளங்கி வருகிறது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கடந்த இரண்டு சீசன்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. கட்டிப் போட்டன. முதல் சீசனில் வனிதாவும் இரண்டாவது சீசனில் கனியும் வெற்றிப் பெற்றனர்.

சினிமா வாய்ப்புக்களை தந்த நிகழ்ச்சி
விஜய் டிவியின் மற்ற நிகழ்ச்சிகளை போலவே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும் சினிமாவில் சிறப்பான வாய்ப்புக்களை பெற்று பிசியாகியுள்ளனர். குறிப்பாக அஸ்வின், ஷிவாங்கி, புகழ் போன்றவர்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் அதிகமான வாய்ப்புக்களை பெற்று வருகின்றனர்.

3வது சீசன் துவக்கம்
இந்நிலையில் நேற்று முதல் இந்த நிகழ்ச்சியின் 3வது சீசன் துவங்கியுள்ளது. இதையொட்டி பல பிரமோஷன் வீடியோக்களை விஜய் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறது. இது குக் வித் கோமாளி... முடிஞ்சா சிரிக்காம சமாளி என்ற வாசகத்தைக் கொண்டு இந்தப் பிரமோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

புதிய போட்டியாளர்கள்
இந்த நிகழ்ச்சியில் புதிய குக்குகள் மற்றும் கோமாளிகள் அறிமுகமாகியுள்ளனர். பாரதி கண்ணாம்மா மூலம் பிரபலமடைந்துள்ள ரோஷினி நிகழ்ச்சியில் குக்காகியுள்ளார். இதேபோல நடிகர் மனோபாலா, வித்யூலேகா ராமன் போன்றவர்களும் நிகழ்ச்சியில் இணைந்துள்ளனர்.

ஏராளமான பிரமோஷன்கள்
முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான பிரமோஷன்களை விஜய் டிவி கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சி வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. வழக்கம்போல தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நிகழ்ச்சியின் நடுவர்களாக செயல்பட உள்ளனர். ரக்ஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

70 எபிசோடுகள்
70 எபிசோட்களுடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. நேற்றைய முதல் எபிசோட்டில் குக்குகள் மற்றும் கோமாளிகளின் அறிமுகம் சிறப்பான வகையில் நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிலும் வெளியிடப்பட்டுள்ளது.

வித்யூலேகா வீடியோ வெளியீடு
இந்நிலையில் விஜய் டிவி வெளியிட்டுள்ள பிரமோ வீடியோவில் பிரபல காமெடி நடிகை வித்யூலேகா ராமன் நிகழ்ச்சி குறித்து உற்சாகத்துடன் பேசியுள்ளார். ஹாய் மக்களே என்று ஆரம்பித்து இந்த நிகழ்ச்சி ராக்கிங்காக இருக்க போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நிகழ்ச்சியை மிஸ் செய்ய வேண்டாம் என்றும் நிகழ்ச்சி வேற மாதிரி இருக்கும் என்றம் அவர் மேலும் கூறியுள்ளார்.