குட் பாயா... பேட் பாயா... சிம்புவிடம் குழந்தை கேட்ட கேள்வி... வைரலாகும் ப்ரமோ!

சென்னை : நடிகர் சிம்புவின் மாநாடு படம் கொடுத்த வெற்றி அவரை அடுத்தடுத்த தளங்களில் வேலை செய்ய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கி வருகிறார். அடுத்தடுத்த படங்களில் நடித்தும் வருகிறார்.

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு

நடிகர் சிம்புவின் கேரியரில் மாநாடு படம் சிறப்பாக அமைந்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை மட்டுமின்றி வசூலையும் வாரிக் குவித்துள்ளது. இதையடுத்து சிம்புவிற்கு பல்வேறு தளங்களில் வேலை செய்ய வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தை முடித்துக் கொடுத்துள்ள சிம்பு, அடுத்ததாக பத்து தல மற்றும் கொரோனா குமார் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் பத்து தல படத்தின் கிளிம்ப்ஸ் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி

இதனிடையே டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசன்களை முடித்த உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் அல்டிமேட்டிலிருந்து விலகிய நிலையில், சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.

விஜய் மியூசிக் விருதுகள் 2022

விஜய் மியூசிக் விருதுகள் 2022

இதனிடையே விஜய் டிவியின் மிர்ச்சி மியூசிக் விருது வழங்கும் விழாவில் நடிகர் சிம்புவிற்கு சென்ஷேஷனல் ஸ்டார் ஆப் தி டிகேட் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இதன் ப்ரமோவில் இந்த விருதை நடிகர் எஸ்ஜே சூர்யாவிடம் இருந்து சிம்பு பெற்றுக் கொள்கிறார். நிகழ்ச்சியில் கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றுள்ளனர்.

சிம்புவிற்கு விருது

சிம்புவிற்கு விருது

நிகழ்ச்சியில் மேடையில் விருதை வாங்கும் சிம்புவிடம் குழந்தை ஒன்று அவர் குட் பாயா அல்லது பேட் பாயா என்று கேள்வி கேட்கிறது. இதைக் கேட்டு ஆடிப்போகும் சிம்பு, தன்னுடைய நக்கலுடன் கூடிய பதிலை அளிக்கிறார். தெரியலையேம்மா என்பதுதான் அது. இதனால் அரங்கமே கரவொலியால் அதிர்கிறது. இவ்வாறு அந்தப் ப்ரமோவில் காணப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X