விவசாயத்தில் இறங்கிய மணிமேகலை.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
சென்னை : சின்னத்திரையில் பிரபல சேனல்களில் ஆங்கராக பணியாற்றி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் மணிமேகலை.
குறிப்பாக விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அனைத்து சீசன்களிலும் பங்கேற்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.
இவரது குறும்புத்தனமாக கோமாளித்தனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, நிகழ்ச்சியின் நம்பர் ஒன் கோமாளியாக இவரை நிலைநிறுத்தியது.

ஆங்கர் மணிமேகலை
பிரபல சேனலில் ஆங்கராக இருந்து விஜய் டிவிக்கு தாவியவர் ஆங்கர் மணிமேகலை. அங்கு அவர் ஆங்கராக ஜொலித்ததைக் காட்டிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக ரசிகர்களை கவர்ந்ததுதான் அதிகம். நிகழ்ச்சியின் முதல் சீசனிலிருந்தே இவர் கோமாளியாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

கோமாளியாக கலக்கல்
இந்த நிகழ்ச்சியில் ஷிவாங்கி, பாலா, புகழ், சுனிதா உள்ளிட்டவர்களுடன் இணைந்து மணிமேகலை அடித்த லூட்டிகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ரசிகர்களை கவரும் யுத்திகள் அனைத்தையும் இந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தினார். தொடர்ந்து வித்தியாசமான கெட்டப்புகளையும் போட்டு ரசிகர்களை கவர்ந்தார்.

நிகழ்ச்சியிலிருந்து விலகிய மணிமேகலை
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கிய குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் இவர் வழக்கம்போல உற்சாகத்துடனேயே பங்கேற்றார். ஆனால் கடந்த வாரத்துடன் நிகழ்ச்சியில் இருந்து விலகும் முடிவை அறிவித்தார் மணிமேகலை. இதனால் ரசிகர்கள் மட்டுமில்லாமல் சக கோமாளிகள், குக்குகள், நடுவர்களும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

அதிகமான கமிட்மெண்ட்கள்
மணிமேகலையின் விலகல் முடிவிற்கு காரணம் இதுவரை தெரியவில்லை. அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் ஏற்பட்ட சண்டை ஆகியவை இந்த விலகலுக்கு காரணங்களாக கூறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது மணிமேகலை அதிகமான மற்ற கமிட்மெண்ட்டுகள் காரணமாகவே நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

விவசாயத்தில் இறங்கிய மணிமேகலை
சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நிலத்தை சுத்தம் செய்வதாக போஸ்ட்டை பதிவிட்டிருந்தார். அதனால் மணிமேகலை விவசாயத்தில் இறங்கவுள்ளதாகவும் அதனால்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் தனது யூடியூப் பக்கத்திலும் மிகவும் பிசியாக காணப்படுகிறார்.

காதல் திருமணம்
யூடியூப், ஆங்கரிங் என அடுத்தடுத்த கட்டங்களில் தன்னை உயர்த்திவரும் மணிமேகலை ஹுசைன் என்பவரை தன்னுடைய குடும்பத்தினரை எதிர்த்து காதல் திருமணம் செய்துக் கொண்டார். தற்போது கார், பைக்குகள், சொந்த வீடு என செட்டில் ஆகியுள்ள மணிமேகலை, அடுத்ததாக என்ன திட்டத்துடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











