Don't Miss!
- Finance
கிஷோர் பியானி ராஜினாமா.. பியூச்சர் ரீடைல் திவால்..!!!
- Sports
கேஎல் ராகுல் திருமணம் - பரிசுகளை அள்ளிக் கொட்டிய தோனி, கோலி.. விலையை கேட்டா "ஆடி" போய்டுவீங்க
- Lifestyle
உங்க முகம் எப்பவும் டல்லா இருக்கா? அப்ப பளபளப்பா ஜொலிக்க பீட்ருட்டை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்!
- News
"ஒன்று கூடுவோம்; வென்று காட்டுவோம்" நன்றி கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில்!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
இனியா விஷயத்தில் சண்டை போடும் கோபி -ராதிகா.. தேர்தலில் நிற்கும் பாக்கியலட்சுமி!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களின் முதன்மையான தொடராக ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி.
இந்தத் தொடரில் அடுத்தடுத்த சுவாரஸ்யங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது சீரியல் குழு.
கோபி -ராதிகா மற்றும் பாக்யாவை சுற்றி இந்தத் தொடரின் கதைக்களம் இருந்தாலும் சீரியலின் மற்ற கேரக்டர்களும் கவனம் ஈர்த்து வருகின்றன.'
ராதிகா
வீட்டில்
இனியா..
கலக்கத்தில்
பாக்கியா
செய்த
செயல்..
பாக்கியலட்சுமி
சீரியலில்
ட்விஸ்ட்!

பாக்கியலட்சுமி தொடர்
விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முதன்மையான தொடராக மாறியுள்ள பாக்கியலட்சுமி தொடர், அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களால் ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது. டிஆர்பியிலும் முதன்மையான இடத்தை பெற்றுள்ளது. இந்தத் தொடரின் அடுத்தடுத்த சுவாரஸ்யங்கள் ரசிகர்களின் நாடித்துடிப்பை எகிற வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

பிரச்சினைகளில் சிக்கும் கோபி
பாக்யாவிடமிருந்து விவாகரத்தை பெறும் கோபி தொடர்ந்து ராதிகாவை மணமுடிக்கிறார். படித்த அழகான பெண்ணை திருமணம் செய்துள்ளதால் தன்னுடைய வாழ்க்கையில் வசந்தம் வீசும் என்று கோபி காணும் கனவு பகல்கனவாக மாறியுள்ளது. தொடர்ந்து இரண்டு குடும்பங்களுக்கிடையில் சிக்கி அவர் அடுத்தடுத்த பிரச்சினைகளை சந்திக்கிறார். இதனால் ஏன் மறுமணம் செய்தோம் என்று எண்ணும் அளவிற்கு அவரது நிலைமை மாறுகிறது.

நிம்மதியில்லாத கோபி
கோபியின் மகள் இனியா மற்றும் அப்பா ராமமூர்த்தி இருவரும் கோபியுடன் தங்கும் நோக்கத்தில் அவரது வீட்டிற்கு வருகின்றனர். இதனால் ராதிகாவிற்கும் கோபிக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. புதிதாக திருமணமாகி மனைவியுடன் ஹனிமூன் சென்ற இடத்திலும் கோபிக்கு நிம்மதி இல்லாத நிலையே காணப்பட்டது. மேலும் பாக்யா கையால் ருசியாக சாப்பிட்டு பழகிய கோபிக்கு ராதிகாவின் சமையலும் அலுப்பை ஏற்படுத்துகிறது.

மகளை காணாத கோபி
இதனிடையே சுற்றுலா சென்ற இடத்தில் இனியாவிற்கு விபத்து ஏற்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து பாக்யா மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகிறார். தனது மகளை பார்க்க தவிக்கிறார். ஆனால் அவரை பாக்யாவிடம் காட்டாமல் கோபி சண்டையிடுகிறார். இதையடுத்து தனது வீட்டிற்கு வருகிறார் இனியா. ஆனால் சில டிரஸ்களை எடுத்துக் கொண்டு மீண்டும் அப்பாவிடமே செல்கிறார்.

ராதிகாவிடம் சண்டைபிடிக்கும் கோபி
அலுவலகத்தைவிட்டு வீட்டிற்கு வரும் கோபி, இனியா இல்லாததால் ராதிகாவிடம் தொடர்ந்து கேள்வி எழுப்புகிறார். ராதிகா இனியாவிடம் சண்டை பிடித்து அனுப்பிவிட்டாரா என்று அவர் கேட்பதால் ராதிகா, தன்னைப் பார்த்தால் அப்படி தெரிகிறதா என்று பதிலுக்கு சண்டை பிடிக்கிறார். தொடர்ந்து மீண்டும் வீட்டிற்கு வரும் இனியாவை பார்த்து அவர் சமாதானமடைகிறார். ஆனால் ராதிகாவின் கோபத்திற்கு ஆளாகிறார்.

செகரட்டரி தேர்தலில் பாக்கியா
இதனிடையே காலனி செகரட்டரி எலெக்ஷனில் பாக்கியலட்சுமி நிற்க அந்த காலனியின் பெண்கள் அனைவரும் இணைந்து முடிவெடுக்கின்றனர். ஆனால் இதை பாக்கியா மறுக்கிறார். ஆனால் செல்வி மற்றும் அவரது மாமனார் இருவரும் அவரை ஊக்குவிக்கின்றனர். அந்த காலனியின் செகரட்டரியாக இருப்பவர் கடந்த 17 ஆண்டுகளாக செகரட்டரியாக இருக்கும் தன்னை எதிர்த்து பாக்கியாவால் ஒன்றும் செய்ய முடியாது என்று சவால் விடுகிறார்.