Sathish :ராதிகாவும் வேணாம்.. இனியாவும் வேணாம்.. கோபிக்கு இதுமட்டும் போதுமாம்!

சென்னை : பாக்கியலட்சுமி தொடரின் முக்கியமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகர் சதீஷ்.

இவர் ஏற்று நடித்துவரும் கேரக்டர் நெகட்டிவ் ஷேடில் அமைந்திருந்தாலும் ரசிகர்களின் பேவரைட்டாக அமைந்துள்ளது.

இவர் சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்த வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial Actor Sathish says that he dont want Radhika and Iniya

ராதிகாவும் இனியாவும் வேண்டாம் என்று சொன்ன சதீஷ் : விஜய் டிவியில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து மிகவும் பரபரப்பான எபிசோட்களை வழங்கி வருகிறது. பெங்காலி மொழியில் ஒளிபரப்பாகி ஹிட்டடித்த ஸ்ரீமோயி என்ற தொடரின் தமிழ் ரீமேக்காக உருவாகி அடுத்தடுத்த எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரின் கதைக்களம் மற்றும் வசனங்களை லீனா மற்றும் சங்கீதா என இருவர் சிறப்பாக கவனித்து வருகின்றனர்.

கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்தத் தொடர் துவங்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தத் தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. முக்கியமாக பாக்கியா, கோபி மற்றும் ராதிகா கேரக்டர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர். கோபி கேரக்டர் நெகட்டிவ் ஷேடில் இருந்தாலும் அதிகமாக ரசிகர்களை கவர்ந்த கேரக்டராக உள்ளது. சமீபத்தில் இவர் சீரியலை விட்டு விலகவுள்ளதாக அறிவித்த நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

Vijay TVs Baakiyalakshmi serial Actor Sathish says that he dont want Radhika and Iniya

இந்நிலையில் சில தினங்கள் கழித்து தான் சீரியலை விட்டு விலகவில்லை என்று அறிவித்து அவர் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். இந்நிலையில் சீரியலில் இவர் ராதிகா மற்றும் அவரது குடும்பத்தினரிடையே மாட்டிக் கொண்டு விழிக்கும் அடுத்தடுத்த சீன்கள், மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. சமீபத்தில் பாக்கியாவின் நடத்தையை சந்தேகித்து தன்னுடைய குடும்பத்தினரிடையே சண்டை போட, அவரது மகன்கள் எழில் மற்றும் செழியன் இருவரும் அவரை அடிக்கப் போக, இதனால் அவர் மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்.

சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படுகிறார் கோபி. முன்னதாக மற்ற சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்திருந்தாலும், பாக்கியலட்சுமி தொடரில் சதீஷ், ஏற்று நடித்துள்ள கோபி கேரக்டர் அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. இந்நிலையில், கேட்டரிங்கிற்கு சாப்பாடு சப்ளை செய்வது போன்ற புகைப்படம் ஒன்றை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனால் அவர் ராதிகாவை விட்டுவிட்டு மீண்டும் பாக்கியாவுடன் இணைந்து விட்டாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

Vijay TVs Baakiyalakshmi serial Actor Sathish says that he dont want Radhika and Iniya

இதனிடையே தற்போது மீண்டும் அவர் பதிவிட்டுள்ள புதிய புகைப்படத்தில் தனக்கு ராதிகாவும் வேண்டாம், என் செல்லம் இனியாவும் வேண்டாம் என்று கூறியுள்ளார். இட்லி பாத்திரத்தை கையில் கெட்டியாக பிடித்துள்ள கோபி, தனக்கு இட்லியும் வடையும் மட்டும் போதும் என்றும் கூறியுள்ளார். காமெடி கலந்த அவரது இந்தப் போஸ்ட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் லைக்ஸ்களையும் குவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X