Baakiyalakshmi serial :மாலையுடன் தயாரான கோபி.. எதுக்காக தெரியுமா.. அவரே சொன்னது இதுதான்!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முதன்மையான தொடரான பாக்கியலட்சுமி தொடர்ந்து டிஆர்பியில் மாஸ் காட்டி வருகிறது.
இந்தத் தொடரில் தன்னுடைய வாழ்க்கையே சொர்க்கமாக மாறிவிடும் என்ற நினைப்பில் தன்னுடைய முதல் மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்தார் கோபி.
ஆனால் நினைத்ததற்கு மாறாக அவரது வாழ்க்கை மாறியுள்ளது. இதனால் வேதனை அடைந்துள்ள அவர், தொடர்ந்து குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

நடிகர் சதீஷின் புதிய இன்ஸ்டாகிராம் பதிவு : விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடரில் முன்னணி கேரக்டர்களாக கோபி, பாக்கியா மற்றும் ராதிகா ஆகியோர் நடித்து வருகின்றனர். வயதை கடந்த காதல், அதையொட்டிய அடுத்தடுத்த தகிடுதத்தங்கள், துரோகங்கள் என இந்த சீரியலின் கோபி கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலின் அடுத்தடுத்த காட்சிகள், எபிசோட்கள் ரசிகர்களை கவரும் வகையில் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆசை, ஆசையாக தான் இரண்டாவதாக செய்த திருமண வாழ்க்கை கோபிக்கு அடுத்தடுத்த சிக்கல்களையே கொடுத்து வருகிறார். இதனால் மனதளவில் மிகப்பெரிய சஞ்சலத்திற்கு உள்ளாகியுள்ளார் கோபி. ஒரு கட்டத்தில் தான் எடுத்த முடிவு தவறோ என்ற எண்ணமும் அவருக்கு ஏற்பட்டுள்ளது. தன்னுடைய முதல் மனைவியுடன் பிடிக்காத வாழ்க்கையை தான் வாழ்ந்ததாக தொடர்ந்து கூறிவந்த கோபி, தற்போது தான் ராதிகாவை திருமணம் செய்ததுதான் தவறு என்ற முடிவுக்கு வருகிறார்.
தான் கொடுக்கும் சம்பளத்தை குடும்பத்தின் அனைத்து நபர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்துவிட்டு, சேமிக்கவும் செய்த பாக்யாவுடன், ராதிகாவை கம்பேர் செய்து பார்க்கிறார் கோபி. ராதிகா, தன்னுடைய சம்பாத்தியத்தையும் சேர்த்து செலவழிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதையும் அவர் யோசிக்கிறார். மேலும் தன்னுடைய நிம்மதி கெடுவதற்கு ராதிகா காரணமாக இருப்பதையும், பாக்கியா தொடர்ந்து தன்னுடைய தொழிலில் முன்னேறுவதையும் யோசித்து மண்டை குழம்புகிறார்.

ராதிகாவால் தன்னுடைய மகள் இனியாவும் தன்னைவிட்டு விலக, அதனால் மனஉளைச்சலுக்கு உள்ளாகும் கோபி, தினந்தோறும் குடித்துவிட்டு வருவதை வாடிக்கையாக கொள்கிறார். மேலும் குடித்துவிட்டு போனால், ராதிகாவின் குடைச்சல் அதிகமாக இருப்பதால், ஒரு கட்டத்தில் பாக்கியா வீட்டிற்கே அவர் வருவதும் நடைபெறுகிறது. இந்நிலையில் தான் ராதிகா வீட்டிற்கு செல்ல மாட்டேன் என்று அவர் போதையிலேயே மிகவும் தெளிவாக கூறுகிறார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் கோபி, தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலையுடன் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதையடுத்து ராதிகாவையும் டைவர்ஸ் செய்துவிட்டு மூன்றாவது திருமணம் செய்யப் போகிறாரா என்று அவரே கேள்வி எழுப்பி அதற்கு பதிலும் அளித்துள்ளார். இல்லைங்க, என்னோட சாவுக்கு நானே மாலையோட தயாராகிட்டேன் என்று காமெடியாக பதிலளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications