Divya :பாக்கியலட்சுமி சூட்டிங்கில் நிஜமாகவே கீழே விழுந்து அடிபட்ட ஜெனி.. வெளியான ஷாக்கிங் வீடியோ!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை ஒளிரப்பி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்த தொடரில் கோபி -ராதிகா -பாக்கியா என லீட் கேரக்டர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைச்சூழலை மையமாக கொண்டு கதைக்களம் அமைந்துள்ளது.

திருமணமான 2 மகன்கள் மற்றும் வயதுக்கு வந்த ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு கோபி, இரண்டாவது திருமணம் செய்ய, அதன்மூலம் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், ரசிகர்களை கவரும்வகையில் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.

Vijay TVs Baakiyalakshmi serial Actress Divya ganesh shared one video that makes fans shocking

நிஜத்தில் கீழே விழுந்து அடிபட்ட ஜெனி : விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலான பாக்கியலட்சுமி தொடர், மூன்று லீட் கேரக்டர்களை வைத்துக் கொண்டு கதக்களி ஆடிக் கொண்டிருக்கிறது. கோபி, அவரது முன்னாள் மனைவி பாக்கியா மற்றும் இந்நாள் மனைவி ராதிகா என மூன்று கேரக்டர்களையும் அவர்களையொட்டிய மற்ற துணை கேரக்டர்களும் இந்த சீரியலுக்கு சிறப்பான கதைக்களத்தை கொடுத்துள்ளது. தன்னுடைய சுயநலத்திற்காக, தான் வாழ முடியாத வாழ்க்கைக்காக தன்னுடைய மனைவி பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து பெற நினைக்கிறார்.

ஆனால் ராதிகாவுடனான காதலை தெரிந்துக் கொள்ளும் பாக்கியா, கோபி கேட்கும் விவாகரத்தை தானே முன்வந்து கொடுக்கிறார். தொடர்ந்து தன்னுடைய பிசினசை சிறப்பாக முன்னேற்றுகிறார். தொடர்ந்து அடுத்தடுத்த சமையல் கான்டிராக்ட்களை எடுக்கிறார். ராதிகாவின் அலுவலகத்திலேயே அவரின் எதிர்ப்பையும் மீறி, கேன்டீன் கான்டிராக்டையும் எடுத்து அவரது பல்வேறு இன்னல்களையும் சமாளித்து சிறப்பாக செயல்படுகிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial Actress Divya ganesh shared one video that makes fans shocking

வீட்டிலும் கோபி மற்றும் ராதிகா வந்து டேரா போடுகின்றனர். இதையடுதது அவர்களையும் சமாளிக்கும் நிலை பாக்கியாவிற்கு ஏற்படுகிறது. இடையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செழியனின் மனைவி ஜெனி, தரையில் கொட்டிய பாலில் வழுக்கி விழுகிறார். இதையடுத்து வீட்டில் இருக்கும் ராதிகா அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்து மருத்துவமனை பில்லையும் கட்டுகிறார். ஆனால் அவர்தான் தள்ளி விட்டாரா என்று ஈஸ்வரி கேள்வி எழுப்ப அதிர்ச்சிக்குள்ளாவதாக எபிசோட் காணப்பட்டது.

இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் ஜெனி கீழே விழுவதாக காட்டப்பட்ட அந்தக் காட்சியில் நிஜமாகவே அவருக்கு கீழே விழுந்ததில் கையில் வளையல் குத்தி காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு கையில் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு டீம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோவை ஜெனி கேரக்டரில் நடித்துவரும் திவ்யா கணேஷ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பாக்கியலட்சுமி தொடரில் அனைவரையும் கவரும்வகையில் குடும்ப குத்துவிளக்காக புடவையில் ஜொலித்துவரும் திவ்யா கணேஷ், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்த கவர்ச்சி புகைப்படங்களையும் நவீன உடைகளில் அடுத்தடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். இதையடுதது அவரை தற்போது 5 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். சீரியலிலும் அவரது நடிப்பு பாராட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X