சினிமாவிலும் என்ட்ரி கொடுக்கும் பாக்கியா.. பிரபல ஹீரோவுடன் இணைந்து நடிக்கிறார்.. விரைவில் சூட்டிங்!

சென்னை : விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர்ந்து டிஆர்பியில் முன்னிலை பெற்று வருவதற்கு அதன் நாயகி பாக்கியாவும் முக்கிய காரணம்.

Recommended Video

Bakyalakshmi | பிரபல Hero-வுடன் இணைந்து நடிக்கிறார், ஆர்வத்தில் ரசிகர்கள்! *TV | Filmibeat Tamil

இந்தத் தொடர் பல வாரங்களை கடந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

மாட்டிக் கொள்வாரா என்றும் மாட்டிக் கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தொடரின் கோபி, மாட்டிக் கொண்டது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பாக்கியலட்சுமி தொடர்

பாக்கியலட்சுமி தொடர்

விஜய் டிவியின் முக்கிய தொடராக டிஆர்பியில் முக்கியமான இடத்தை பிடித்துள்ள தொடர் பாக்கியலட்சுமி. கடந்த வாரத்தில் சன் டிவி தொடர்களை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்திருந்த இந்தத் தொடர் இந்த வாரம் இரண்டாவது இடத்தில் பின்தங்கியுள்ளது. ஆனாலும் இந்தத் தொடர் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

அப்பாவி கேரக்டர்

அப்பாவி கேரக்டர்

இந்தத் தொடர் விஜய் டிவியின் முதன்மை தொடராக தொடர்ந்து இருந்து வருவதற்கு தொடரின் முதன்மை கேரக்டரில் நடித்துவரும் பாக்கியாதான் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். அப்பாவித்தனமாக தன்னுடைய குடும்பமே உலகம் என்றும், அதன் வளர்ச்சிக்காக, குடும்ப உறுப்பினர்கள் நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கும் கேரக்டரில் நடித்து வருகிறார் நடிகை சுசித்ரா.

ஏராளமான ரசிகர்கள்

ஏராளமான ரசிகர்கள்

இந்தத் தொடர் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது. குறிப்பாக தன்னுடைய கணவன் மற்றும் ராதிகாவின் உறவு குறித்து அறிய நேரும்போது உடைந்துப் போகும் சூழலில் சுசித்ரா அந்த கேரக்டர் பாக்கியலட்சுமியாகவே ரசிகர்களால் பார்க்கப்பட்டார். அவருக்காக ரசிகர்கள் அதிகமாக அனுதாபப்பட்டனர்.

வாழ்க்கைக்கு அர்த்தம்?

வாழ்க்கைக்கு அர்த்தம்?

தான் இத்தனை காலங்களாக வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தெரியாமல் தன்னுடைய கணவனை நிற்க வைத்து கேள்வி கேட்பதிலாகட்டும், துணிச்சலாக வீட்டைவிட்டு வெளியேறும் முடிவை எடுத்ததிலாகட்டும், ராதிகாவை நேரில் சந்தித்து அவர்மீது தான் வைத்த நம்பிக்கைக்கு அவர் செய்த துரோகத்தை சொன்னதிலாகட்டும் சுசித்ரா சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளார்.

சினிமாவிலும் என்ட்ரி

சினிமாவிலும் என்ட்ரி

இந்த சீரியல் சுசித்ராவிற்கு ஏராளமான ரசிகர்களை மட்டுமில்லாமல் தற்போது படவாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளது. தமிழ், கன்னடத்தில் உருவாகிவரும் புதிய படத்தில் பிரபுதேவாவின் அம்மாவாக பாக்கியலட்சுமி தற்போது கமிட்டாகியுள்ளார். இதன் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X