மாமியாருடன் குத்தாட்டம் போட்ட மருமகள்.. பாக்கியலட்சுமி சீரியலில் புது ட்விஸ்ட்!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி தொடர்ந்து சுவாரஸ்யமான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.
தற்போது பாக்கியாவின் இரண்டாவது மகனான எழிலின் திருமணத்தையொட்டிய எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
தன்னுடைய மகன் விரும்பிய அமிர்தாவுடன் திருமணத்தை குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி நடத்தி முடித்துள்ளார் பாக்கியா.

பாக்கியலட்சுமி தொடர்
விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முதன்மையான சீரியலாக மாறியுள்ளது பாக்கியலட்சுமி. இந்தத் தொடரில் கோபி -பாக்கியா மற்றும் ராதிகா ஆகியோரை முதன்மை கேரக்டர்களாக வைத்து அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறார் இயக்குநர். திருமணமாகி ஒரு குழந்தைக்கு அப்பாவாகவுள்ள தன்னுடைய மகனை வைத்துக் கொண்டு, மற்றொரு திருமணத்தை செய்துக் கொள்கிறார் கோபி.

2வது திருமணம் செய்த கோபி
இதையடுத்து ஏற்படும் நிகழ்வுகளை மையமாக வைத்து இந்த சீரியல் நடைபோட்டு வருகிறது. தான் விரும்பிய வாழ்க்கையை தான் ஏற்றுக் கொள்வதன்மூலம் தன்னுடைய வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள முடியும் என்று கோபி நினைத்து காய் நகர்த்தி வருகிறார். ஆனால், இரண்டாவது திருமணம் செய்தபின்புதான் அவரது வாழ்க்கையில் அதிகமான பிரச்சினைகளை அவர் சந்தித்து வருகிறார்.

மண்டை குழம்பும் கோபி
கோபியின் தந்தை ராமமூர்த்தி மற்றும் மகள் இனியா இருவரும் அவருடன் வந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவரது இரண்டாவது மனைவி ராதிகா மற்றும் அவர்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகளையும் மையமாக வைத்து சீரியல் நடைபோட்டு வருகிறது. அடுத்தடுத்த பிரச்சினைகளால் மண்டைக் குழம்பி போகிறார் கோபி.

எழிலின் திருமண கலாட்டா
இதனிடையே கோபி -பாக்கியாவின் இரண்டாவது மகன் எழிலின் திருமணத்தையொட்டிய பிரச்சினையை மையமாக வைத்து அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகின. தான் விரும்பிய அமிர்தாவை திருமணம் செய்ய முடியாமல், குடும்ப சூழலுக்காக வர்ஷினியை திருமணம் செய்யும் நிலைக்கு எழில் தள்ளப்படுகிறார்.

மாமியாரின் எதிர்ப்பை சந்திக்கும் பாக்கியா
அவர் கட்டாயத்திற்காகத்தான் இந்த திருமணத்தை ஒப்புக் கொள்கிறார் என்பதை தெரிந்துக் கொண்ட பாக்கியா, அந்த திருமணத்தை நிறுத்தி அவர் விரும்பியது போலவே அமிர்தாவை குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார். தொடர்ந்து தன்னுடைய மாமியார் ஈஸ்வரியின் எதிர்ப்பையும் கோபத்தையும் சம்பாதிக்கிறார்.

புது மருமகளுடன் ஆட்டம்
இதனிடையே தன்னுடைய புது மருமகள் அமிர்தாவுடன் இணைந்து பாக்கியா செய்யும் ரீல்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மால டம்டம் பாடலுக்கு இருவரும் இணைந்து ஆடியுள்ள நடனம் சிறப்பாக அமைந்துள்ளதாக கமெண்ட்ஸ் எழுந்துள்ளது. இந்த நடனத்திற்கு பாக்யாவின் ரியாக்ஷனும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











