600 எபிசோட்களை நிறைவு செய்த பாக்கியலட்சுமி தொடர்.. டீம் என்ன செஞ்சாங்கன்னு பாருங்க!

சென்னை : விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி பரபரப்பான எபிசோட்களுடன் தினந்தோறும் ரசிகர்களை சந்தித்து வருகிறது.

Recommended Video

Bakyalakshmi | ஆரம்பிச்சுட்டாங்கப்பா, அடுத்து என்ன நடக்க போகுது தெரியுமா? *Tv

இந்தத் தொடர் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தொடராக தொடர்ந்து டிஆர்பியின் முன்னணியில் உள்ளது.

இந்தத் தொடருக்கும் சன் டிவியின் கயல் தொடருக்கும் தொடர்ந்து போட்டி நிலவி வருகிறது. மாறி மாறி இந்த இரு தொடர்களும் முதலிடத்திற்கு போட்டியிட்டு வருகின்றன.

விஜய் டிவியின் முன்னணி தொடர்

விஜய் டிவியின் முன்னணி தொடர்

விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முன்னணி தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி. இந்தத் தொடரில் பாக்கியாவாக நடித்துவரும் சுசித்ரா, கோபியாக நடித்துவரும் சதீஷ் மற்றும் ராதிகாவாக நடித்துவரும் ரேஷ்மா ஆகியோரின் ஒரிஜினல் பெயர்களை ரசிகர்கள் மறந்து விட்டார்கள் என்றே சொல்லலாம். அந்த வகையில் அந்தக் கேரக்டராகவே மாறியுள்ளனர்.

கேரக்டராகவே மாறிய சதீஷ்

கேரக்டராகவே மாறிய சதீஷ்

கோபி கேரக்டரை செய்துவரும் சதீஷ், சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதளத்தில் இதுகுறித்து குறைகொட்டிக் கொண்டார், தன்னைத் திட்டி, ஏன் மிரட்டல் விடுத்துக்கூட போன் கால்கள் வருவதாக அவர் கூறினார். இதை ஒரு கேரக்டராக பாருங்கள் என்று ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

சூழ்நிலையை பயன்படுத்திய கோபி

சூழ்நிலையை பயன்படுத்திய கோபி

ஆனாலும் மனிதர் கோபி கேரக்டரில் கொஞ்சமான ஆட்டமா ஆடுகிறார். தன்னுடைய மனைவி, அழகான 3 பிள்ளைகள் மற்றும் பெற்றோர் என குடும்பம் இருந்தும், ராதிகாவுடன் தனது பழைய காதலை புதுப்பித்துக் கொண்டார். கணவருடன் பிணக்கு இருந்த ராதிகாவிற்கு ஆறுதல் தேவைப்பட்ட நிலையில், அதை பயன்படுத்திக் கொண்டார் கோபி.

ராதிகாவின் கேள்வி

ராதிகாவின் கேள்வி

தற்போது உண்மை தெரிந்து கோபியிடம் ராதிகா கேட்கும் கேள்வி ஒன்றுதான். தான் நட்புடன் பழகிவந்த பாக்கியாதான் கோபியின் மனைவி என்பதை ஏன் அவர் மறைத்தார் என்ற நியாயமான கேள்வி ராதிகாவிடம் உள்ளது. இதற்கு பதில் சொல்ல முடியாமல் திருட்டு முழி முழிக்கிறார் கோபி.

வீட்டை விட்டு வெளியேறிய கோபி

வீட்டை விட்டு வெளியேறிய கோபி

தற்போது பாக்கியாவுடன் விவாகரத்தான நிலையில், அவரை வீட்டை விட்டு துரத்த கோபி முயற்சித்த நிலையில், கோபியின் நிலை கந்தல் கோலமானது. அவர்தான் வீட்டை விட்டு வெளியேறி தற்போது போக்கிடம் இல்லாமல் சுற்றி வருகிறார். இதனிடையே அப்பாவின் இந்த நிலைக்கு காரணம் பாக்கியாதான் என்று நினைத்து செழியன் மற்றும் இனியா அவரை வெறுத்து வருகின்றனர்.

600 எபிசோட்களை கடந்த பாக்கியலட்சுமி

600 எபிசோட்களை கடந்த பாக்கியலட்சுமி

இதனிடையே கோபி வீடில்லாமல் வெளியில் வந்து புலம்புவதும், ராதிகாவை பாக்கியாவின் மாமனார், மாமியார் சென்று திட்டிவிட்டு வருவதுமாக எபிசோட்கள் போகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் இந்த சீரியல் 600 எபிசோட்களை கடந்ததாக பாக்கியா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

கொண்டாட்டத்தில் பாக்கியலட்சுமி டீம்

கொண்டாட்டத்தில் பாக்கியலட்சுமி டீம்

இதையொட்டி பாக்கியலட்சுமி டீம் அனைவரும் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோவையும் அவர் பகிர்ந்துள்ளார், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரையும் தனித்தனியாக குறிப்பிட்டு வாழ்த்தியுள்ள அவர், ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X