பக்கத்து வீட்டிலிருந்துதான் பிரியாணி வாசனை வந்ததா.. ஓட்ஸ் கஞ்சி குடிக்கும் கோபி!
சென்னை : விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் சிறப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு தந்து வருகிறது.
இந்தத் தொடரில் காலம் கடந்த காதல், வயதானாலும் தன்னுடைய வாழ்க்கையை வாழ நினைக்கும் ஆண், இரண்டாவது திருமணத்தால் அவர் சந்திக்கும் பிரச்சினைகள் என கதைக்களம் அமைந்துள்ளது.
மாறாக தன்னுடைய கணவன் கேட்ட விவாகரத்தை கொடுக்கும் பாக்கியா, அவரது அப்பா -அம்மாவையும் சேர்த்து கவனிப்பதற்காக போராடுவதும் இந்த சீரியலில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

பாக்கியலட்சுமி தொடர்
விஜய் டிவியின் முன்னணி தொடராக ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடர் ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகிவரும் நிலையில், ரசிகர்கள் இந்தத் தொடரை கொண்டாடி வருகின்றனர். சிலபல அபத்தங்களையும் இந்தத் தொடரில் பார்க்க முடிகிறது. கோபி -பாக்கியா -ராதிகா என மூன்று கேரக்டர்களையும் அவர்களின் வாழ்க்கை, காதல், பாசம், அன்பு, பரிவு, சிக்கல்கள், அதை தீர்க்கும் போராட்டம் என அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை இயக்குநர் தந்து வருகிறார்.

காலம் கடந்த திருமணம்
திருமணமான மகனை வைத்துக் கொண்டு கோபிக்கு ஏற்படும் காதல், அதை திருமணத்தில் முடிக்க அவர் செய்த தகிடுதத்தங்கள், ஒருகட்டத்தில் அவருடைய காதல் பாக்கியாவிற்கு தெரியவர அவர் எடுக்கும் அதிரடி முடிவு என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரடி திருப்பங்களுடன் தொடர் நடைபோட்டது. தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறும் பாக்கியா, ஒரு கட்டத்தில் தன்னுடைய கணவன் வீட்டை விட்டு வெளியேறும்படி செய்கிறார்.

சிக்கித் தவிக்கும் கோபி
ஆனால் இந்த பிரச்சினையையும் தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறார் கோபி. ராதிகாவை மனமாற்றம் செய்து தன்னுடைய இரண்டாவது திருமணத்தை முடித்துக் கொள்கிறார். ஆனாலும் அவரது திருமண வாழ்க்கை அவர் நினைத்தபடி கொண்டாட்டங்களை மட்டுமே தந்துவிடவில்லை. மாறாக சாப்பிடும சாப்பாட்டிலிருந்து அனைத்திலும் அவருக்கு அடியே கிடைக்கிறது. தொடர்ந்து இரு குடும்பங்களுக்கு இடையில் சிக்கித் தவிக்கிறார்.

கோபியின் அதிருப்தி
முக்கியமாக சாப்பாட்டு விஷயத்தில் பாக்கியாவின் கைமணத்தில் விரட்டிக் கொண்டே விதவிதமான உணவுகளை சாப்பிட்டு பழகிய அவருக்கு, ராதிகா கொடுக்கும் ஓட்ஸ் கஞ்சி உள்ளிட்டவை அதிருப்தியையே தருகிறது. ஆனாலும் காலம் கடந்தாலும் காதல் படுத்தும் பாட்டில் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சலிப்புடன் அந்த கஞ்சியையும் குடித்து வைக்கிறார். முன்னதாக பிரியாணி சமைக்கும் வாசனை வந்ததையொட்டி பிரியாணி கனவுடன் காத்திருந்த அவருக்கு காதல், ஓட்ஸ் கஞ்சியையே கொடுத்தது.

மாற்றத்திற்கு உள்ளாகும் கேரக்டர்கள்
இடையில் ராதிகாவின் பொறாமையால் தன்னுடைய மனைவியின் கேன்டீன் திறப்பு விழாவிற்கு மகள் இனியாவை போகவிடாமல் செய்துவிட்டு, பின்பு அவரே அந்த நிகழ்ச்சிக்கு இனியாவை டிராப் செய்வதாக தற்போது வெளியாகியுள்ள ப்ரமோ காணப்படுகிறது. இதையடுத்து ராதிகாவின் கோபத்திற்கும் ஆளாகிறார். ஒருபக்கம் குடும்பத்தையே சார்ந்திருந்த பாக்கியா, தன்னுடைய வளர்ச்சிப்பாதையில் நடைபோட, குடும்பத்தை தவிர மற்ற எல்லாவற்றிலும் கவனம் செலுத்தி மகிழ்ச்சியாக இருந்த கோபி தற்போது குடும்பத்தை மட்டுமே சிந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











