வாட்டி வதைக்கும் திருமணம்.. முழி பிதுங்கும் கோபி.. பிரியாணிக்கு ஆசைப்பட்டா கஞ்சி வருதே!
சென்னை : விஜய் டிவியின் பிக்பாஸ் ஒரு பக்கம் களைகட்டிவரும் நிலையில் சீரியல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
விஜய் டிவியின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சீரியல்களில் பாக்கியலட்சுமி முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்த சீரியல் பரபரப்பான எபிசோட்களை தொடர்ந்து ஒளிபரப்பி டிஆர்பியிலும் முன்னணியில் உள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த 18 நாட்களாக சிறப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. விஜய் டிவியில் மட்டுமில்லாமல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் தனது ஒளிபரப்பை வழங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்த டாஸ்க்குகள், சண்டைகள், வாக்குவாதங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

சீரியல்களுக்கும் முக்கியத்துவம்
நிகழ்ச்சிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போலவே விஜய் டிவி சீரியல்களுக்கும் தொடர்ந்து முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறது. அந்த வகையில் சேனலில் பல தொடர்கள் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இதனிடையே சேனலின் முக்கியமான தொடராக இருந்துவரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களை தொடர்நது கவர்ந்து வருகிறது.

திண்டாட்டத்தில் கோபி
தனக்கு படித்த, அழகான மனைவி வேண்டும் என்று 25 வருடங்களாக தனக்கு தேவையானவற்றை பார்த்து பார்த்து செய்த பாக்கியாவை வெறுத்து ஒதுக்கினார் கோபி. தொடர்ந்து தான் காதலித்த ராதிகாவையும் திருமணம் செய்துக் கொண்டார். இதையடுத்து கொடைக்கானலில் நடைபெற்ற மகா சங்கமத்தில் அவர் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.

காபிக்காக போராட்டம்
படித்த மனைவி வேண்டும் என்று நினைத்த அவருக்கு தொடர்ந்து பல ஆப்புகள் காத்திருந்தன. ஒரு காபிக்காக அவர் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. இதனிடையே தற்போதைய எபிசோடில் ஆபிசிலிருந்து வீட்டிற்கு வரும் கோபி, ராதிகாவிடம் காபி கேட்கிறார். ஆனால் அவரோ ஆர்டர் செய்து கொள்ளும்படி கூறுகிறார்.

பிரியாணிக்காக காத்திருக்கும் கோபி
இதனால் வெறுத்துப் போகும் கோபி, சாப்பிடவாவது ஏதாவது கிடைக்குமா என்று ராதிகாவிடம் கேட்கிறார். இதையடுத்து அவர் சமைக்க போகிறார். பக்கத்து வீட்டில் பாக்கியா பிரியாணி சமைக்கிறார். அந்த வாசனை ஈர்க்க, ராதிகாதான் பிரியாணி சமைக்கிறார் என்று நப்பாசையுடன் கோபி காத்திருக்கிறார்.

என்னது கஞ்சியா?
ஆனால் கஞ்சி போன்ற எதையோ ஒன்றை ராதிகா கொண்டு வந்து கொடுக்கிறார். இதனால் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகும் கோபி நம்பி ஏமாந்துட்டியே கோபி என்று மனதிற்குள் நொந்து நூடுல்ஸ் ஆகிறார். அவர் கேட்டதையெல்லாம் கொடுத்து சிறப்பான மனைவியாக செயல்பட்ட பாக்கியாவை ஜஸ்ட் லைக் தட் விவாகரத்து செய்ய நினைத்த அவர் இதுபோல கஷ்டப்பட வேண்டும் என்றே ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications











