Baakiyalakshmi :கோபிக்கு நடைபழக கற்றுத்தரும் மகன்கள்.. விரக்தியின் உச்சியில் பெற்றோர்!

சென்னை : விஜய் டிவியின் முன்னணி தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி சீரியல். அடுத்தடுத்த சுவாரஸ்யமான சம்பவங்களால் இந்தத் தொடர் களைகட்டியுள்ளது.

தொடரில் திருமணமான மகன்களையும் வயதுக்கு வந்த பெண்ணையும் வைத்துக் கொண்டு கோபி, தான் விரும்பியபடி இரண்டாவது திருமணம் செய்துக் கொள்கிறார்.

தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்வதால், தன்னுடைய வாழ்க்கை சொர்க்கமாக மாறும் என்ற அவரது கனவு, திருமணத்திற்கு பிறகு தகர்ந்து போகிறது.

Vijay TVs Baakiyalakshmi serial new episodes makes everyone more thrilling

கோபிக்கு நடைபழக கற்றுத்தரும் மகன்கள் :

விஜய் டிவியின் முக்கியமான மற்றும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த தொடர்களில் முன்னணியில் உள்ளது பாக்கியலட்சுமி தொடர். தினந்தோறும் சுவாரஸ்யமான எபிசோட்களை இந்தத் தொடர் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. கோபி, பாக்கியா, ராதிகா மற்றும் அவர்களை சார்ந்த உறவுகளை மையமாக கொண்டு இந்தத் தொடர் அடுத்தடுத்த எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது. வயதுக்கு மீறிய காதல் மற்றும் அது சார்ந்த பிரச்சினைகளால் தற்போது கோபி குடிபோதைக்கு அடிமையாகியுள்ளார்.

பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்ட கோபி, தான் வாழ முடியாத கனவு வாழ்க்கை தனக்கு கிடைக்கும் என்று திட்டமிடுகிறார். ஆனால் அவர் ஏற்கனவே வாழ்ந்துவந்த ராஜ வாழ்க்கை அவருக்கு பறிபோகிறது. ராதிகாவுடன் நித்தம் ஒரு சண்டை என அவரது வாழ்க்கை கழிகிறது. இதனால் விரக்தியடையும் அவர், குடிபோதைக்கு அடிமையாகிறார். இதனால் மேலும் பிரச்சினைகள் நீளுகிறது.

தன்னுடைய வீட்டை விட்டுவிட்டு கோபியுடன் அவரது வீட்டிலேயே குடியேறுகிறார் ராதிகா. இதனால் ஈஸ்வரியின் கோபத்திற்கு ஆளாகிறார். மேலும் கோபியின் குடி பழக்கத்திற்கும் ராதிகாதான் காரணம் என்று ஈஸ்வரி தொடர்ந்து அவர்மீது பழி போடுகிறார். இதுமட்டுமில்லாமல் பாக்கியாவின் வளர்ச்சியும் ராதிகாவிற்கு மன உளைச்சலை கொடுக்க, அவரது வளர்ச்சியை தடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார். இதனால் அலுவலகத்திலும் வீட்டிலும் அவருக்கு அவமரியாதை ஏற்படுகிறது. இரண்டு இடங்களிலும் பாக்கியாவிற்கே சப்போர்ட் கிடைக்கிறது.

Vijay TVs Baakiyalakshmi serial new episodes makes everyone more thrilling

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகும் ராதிகா, கோபிக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுக்கிறார். இதனாலும் கோபி, அதிகமாக குடிக்கத் துவங்குகிறார். அவ்வாறு குடித்துவிட்டு, தள்ளாட்டத்துடன் தன்னை வந்து கூப்பிட்டு போகும்படி எழிலுக்கு கால் செய்கிறார். ஆனால் அவரோ, தன்னால் வர முடியாது என்று கண்டிப்புடன் கூறுகிறார். இதையடுத்து, ஈஸ்வரி, புலம்பித் தள்ள, பாக்கியா, தன்னுடைய மகன் செழியனை அழைத்து, கோபியை மீட்டுக் கொண்டுவர அறிவுறுத்துகிறார்.

செழியனும் ஈஸ்வரியும் போய், கோபி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். ஆனால், அவரோ, குடிபோதையில் தள்ளாட்டத்துடன் விழுகிறார். இதையடுத்து எழில் மற்றும் செழியன் இருவரும் கோபியை கைத்தாங்கலுடன் தூக்கிக் கொண்டு அவரது அறைக்கு செல்கின்றனர். இதைப் பார்க்கும் கோபியின் அப்பா, சின்ன வயதில், தன்னுடைய குழந்தைகளுக்கு கோபி நடைபழக சொல்லிக் கொடுத்த நிலையில், தற்போது அவனுக்கு அவர்கள் நடைபழக சொல்லிக் கொடுப்பதாக ஆதங்கப்படுகிறார். ஈஸ்வரியும் நடப்பதையெல்லாம் பார்த்து வருத்தத்தில் கண்ணீர் வடிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X