Baakiyalakshmi :கழுத்தை பிடித்து வெளியில் தள்ளும் ஈஸ்வரி.. அவமானத்தில் கூனிக் குறுகும் ராதிகா!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமியின் இன்றைய எபிசோட் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளது.

இனியா மற்றும் மயூவை பள்ளிக்கு அழைத்து செல்வதில் துவங்கும் தகராறு ஈஸ்வரி மற்றும் ராதிகாவிடம் முற்றுகிறது.

ராதிகா தன்னை கொலை செய்ய முயற்சி செய்வதாக ஈஸ்வரி அவர் மீது குற்றம் சாட்டுகிறார். தொடர்ந்து அவர் செய்யும் செயல், ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Vijay TVs Baakiyalakshmi serial new episodes makes fans more thrilling

பாக்கியலட்சுமி தொடரில் முற்றும் ராதிகா -ஈஸ்வரி சண்டை : விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை ஒளிபரப்பி வருகின்றன. இந்த தொடரில் கோபியை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டு வரும் ராதிகா, சந்தர்ப்ப சூழ்நிலைகளால், பாக்கியா வீட்டிற்கு வந்து கோபி மற்றும் மயூவுடன் தங்குகிறார். இதனால் அடுத்தடுத்து பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவரது வருகை கோபியின் அம்மா ஈஸ்வரிக்கு பிடிக்காத நிலையில், ராதிகாவை வீட்டை விட்டு துரத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறார்.

இவர்களது சண்டையால், ஏற்கனவே சண்டைக் கோழிகளாக இருந்த கோபி மற்றும் ராதிகாவிடையே மேலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் நிம்மதி இல்லாமல் தவிக்கும் கோபி, ஒருகட்டத்தில் குடிக்கு அடிமையாகிறார். ஆனால் குடும்பத்தினரின் பரிதவிப்பு மற்றும் இனியாவின் வேண்டுகோள் அவரை திருத்துகிறது. ஆனாலும் ஈஸ்வரி -ராதிகாவின் தொடர் சண்டை அவரை குழப்பத்திலேயே வைத்திருக்கிறது.

இந்நிலையில் தேர்வுக்கு கிளம்பும் இனியாவை பள்ளியில் விடுவதற்காக சீக்கிரமே கிளம்புகிறார் கோபி. இருவரும் கிளம்பும் நேரத்தில் அங்கு வரும் ராதிகா, தனக்கு அலுவலகத்தில் முக்கியமான மீட்டிங் உள்ளதாகவும், மயூவை கோபிதான் ட்ராப் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். இதனால் இனியாவை யார் பள்ளிக்கு அழைத்து செல்வது என்ற குழப்பம் ஏற்படுகிறது. இதனால் கோபப்படும் ஈஸ்வரி, ராதிகாவிடம் மல்லுக்கு நிற்கிறார்.

ஆனால், பாக்கியா இடையில் நுழைந்து, இனியாவை எழிலை வைத்து பள்ளியில் டிராப் செய்ய சொல்வதால் அந்த பிரச்சினை அத்துடன் முடிகிறது. ஆனாலும் மயூவை கோபி பள்ளிக்கு அழைத்து சென்றவுடன் மீண்டும், பிரச்சினைகளை துவக்குகிறார் ஈஸ்வரி. காபி குடிக்க வரும் ராதிகாவின் காபியை தட்டி விடுகிறார். இதனால் அவர்களின் வாக்குவாதம் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் தனக்கு மீட்டிங்கிற்கு நேரமாவதாக ஈஸ்வரியை அவர் தள்ள, அவர் கீழே கொட்டிய காபியில் காலை வைத்து தடுமாறி விழுகிறார்.

இதனால் கடுமையான கோபத்தில், தன்னை ராதிகா கொலை செய்ய முயல்வதாக குற்றம் சாட்டுகிறார் ஈஸ்வரி. இந்நிலையில், தொடர்ந்து இருவரும் மாற்றி மாற்றி பேச, இந்த வீடு தன்னுடைய கணவன் கோபியினுடையது என்று கூறும் ராதிகா, ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியேறுமாறு கோபத்துடன் கூறுகிறார். இதைக் கேட்டு ஏற்கனவே கோபமாக இருக்கும் ஈஸ்வரி, மேலும் கோபமடைந்து ராதிகாவை கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியில் துரத்துகிறார்.

அவரிடம் இருந்து தன்னை விடுவிக்க போராடும் ராதிகா, தப்பிக்க முயன்று தோற்கிறார். இதையடுத்து ராதிகாவை வீட்டை விட்டு வெளியில் துரத்தும் ஈஸ்வரி, கேட்டை சாற்றுகிறார். ரோட்டில் கீழே விழும் ராதிகா, அவமானத்தில் கூனிக் குறுகி போகிறார். இவ்வாறாக இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. இதையடுத்து மேலும் மேலும் அடுத்தடுத்த ட்விஸ்ட்களுடன் ரைசிகர்களை கவர இந்தத் தொடர் காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X