என்னோட நம்பிக்கை வைராக்கியமாக மாறி நிற்குது.. பாக்கியா சொல்லும் சொல்ல மறந்த கதை!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி தொடர் அடுத்தடுத்த ட்விஸ்ட்களுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Recommended Video

Bakyalakshmi | ஆரம்பிச்சுட்டாங்கப்பா, அடுத்து என்ன நடக்க போகுது தெரியுமா? *Tv

இந்தத் தொடரில் ராதிகாவையும் பாக்கியாவையும் மாற்றி மாற்றி கோபியின் அம்மா ஈஸ்வரி குறைக்கூறி வருகிறார். குறிப்பாக தன்னுடைய மருமகள் பாக்கியாவை தொடர்ந்து குற்றவாளி கூண்டில் நிறுத்தி வருகிறார்.

கோபி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அடுத்ததாக குடும்பத்தை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள பாக்கியா தொடர்ந்து வேலையை தொடர வேண்டிய கட்டாயத்தை செல்வியிடம் கூறுகிறார்.

பாக்கியலட்சுமி தொடர்

பாக்கியலட்சுமி தொடர்

விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முதன்மையான தொடராக மாறியுள்ள பாக்கியலட்சுமி தொடர் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து வருகிறது. ஒவ்வொரு எபிசோடும் ரசிகர்களின் நாடித்துடிப்பை எகிற வைக்கும் வகையில் சிறப்பான காட்சிகளுடன் நகர்ந்து வருகிறது. இன்றைய எபிசோடிலும் பல சுவாரஸ்யங்கள் காணப்படுகின்றன.

அவமானமடைந்த செழியன்

அவமானமடைந்த செழியன்

பாக்கியலட்சுமி மற்றும் கோபி விவாகரத்து செய்த விஷயத்தை கேள்விப்பட்டு வீட்டிற்கு வந்து கேட்கிறார் செழியனின் மாமியார். இதனால் அவருக்கு அவமானமாகி விடுகிறது. தொடர்ந்து தன்னுடைய அம்மா தான் இதற்கு காரணம் என்று அவரிடம் மல்லுக்கு நிற்கிறார். கூடவே ஈஸ்வரியும் இதில் சேர்ந்துக் கொண்டு மருமகளை திட்டித் தீர்க்கிறார்.

சூழ்நிலையை சாதகமாக்கும் ஜெனி அம்மா

சூழ்நிலையை சாதகமாக்கும் ஜெனி அம்மா

தொடர்ந்து செழியனின் மாமியார், அவரையும் தன்னுடைய மகளையும் தன்னுடைய வீட்டிற்கு வந்துவிடுமாறு கூறுகிறார். இதையடுத்து ஜெனி கோபப்படுகிறார். சூழ்நிலையை சாதகமாக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் தன்னுடைய அம்மாவிடம் கூறுகிறார். இந்த நேரத்தில் என்ன சொல்வது என்று தெரியாமல் செழியன் முழிக்கிறார்.

 நகர வேண்டிய அடுத்தக்கட்டம்

நகர வேண்டிய அடுத்தக்கட்டம்

தொடர்ந்து செல்வியிடம் பேசும் பாக்கியா, அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டிய அவசியத்தை கூறுகிறார். மீண்டும் தன்னுடைய பிசினசை துவக்க வேண்டும் என்றம் கூறுகிறார். இந்த உலகத்தில் பிழைப்பதற்கு வழியா இல்லை என்று கேள்வி கேட்கிறார். செல்வியும் எப்படி குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு, 40 லட்சம் ரூபாயையும் பாக்கியா கொடுப்பார் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறாள்.

வைராக்கியமாக மாறிய தன்னம்பிக்கை

வைராக்கியமாக மாறிய தன்னம்பிக்கை

தொடர்ந்து இந்த விஷயத்தில் தான் எதையும் யோசித்து பேசவில்லை என்றும் ஆனால் தனக்கு எல்லாவற்றையும் கடந்துவிடலாம் என்ற நம்பிக்கை இருப்பபதாகவும், அந்த தன்னம்பிக்கை தற்போது வைராக்கியமாக மாறி நிற்பதாகவும் பாக்கியலட்சுமி செல்வியிடம் கூறுகிறாள். தொடர்ந்து தந்தையில்லாமல் கதறும் மகள் இனியாவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைக்கிறார்.

மகனிடம் குறைக்கொட்டிக்கொள்ளும் பாக்கியா

மகனிடம் குறைக்கொட்டிக்கொள்ளும் பாக்கியா

தன்னுடைய கணவன் இப்போதும் தன்னுடனேயே இருப்பது போன்ற உணர்வை கட்டுப்படுத்த முடியவில்லை என்று மகன் எழிலிடம் குறை கொட்டிக் கொள்கிறார் பாக்கியா. அவருக்கும் சேர்த்தே தான் சமைத்து வைத்திருப்பதாகவும் கூறுகிறார். ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததை போன்ற வாழ்க்கையை நினைத்து பார்க்கிறாள்.

நடுத்தர குடும்பத்து பிரதிநிதி

நடுத்தர குடும்பத்து பிரதிநிதி

இப்படியாக பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. நடுத்தர குடும்பத்தின் சாதாரண குடும்பத்தலைவியை நினைவுப்படுத்துகிறாள் பாக்கியா. கணவனின் துரோகத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் அவனை விலக்கி வைக்கவும் முடியாமல் படும் அவதியை சரியாக வெளிப்படுத்தி வருகிறாள் பாக்கியா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X