Baakiyalakshmi:வழுக்கி விழுந்த ஜெனி.. மருத்துவமனையில் சேர்த்த ராதிகா.. ஏடாகூடமாக கேள்வி கேட்ட ஈஸ்வரி
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமியில் செழியனின் மனைவி ஜெனி கர்ப்பமாக உள்ள நிலையில் வீட்டில் வழுக்கி விழுந்து விடுகிறார்.
அவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில், அவரை மீட்டு மருத்துவமனையில் ராதிகா சேர்க்கிறார்.
ஆனால் அவரது உதவியை பொருட்படுத்தாத பாட்டி ஈஸ்வரி, அவர்தான் ஜெனியை தள்ளி விட்டாரா என்று கேள்வி எழுப்பி அவரை கடுப்பேற்றுகிறார்.

ரசிகர்களை கடுப்பேற்றிய ஈஸ்வரி : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி சீரியலில் செழியனின் மனைவி ஜெனி கர்ப்பமாக உள்ள நிலையில், அவர் வீட்டில் தனியாக இருக்கும்போது தரையில் கொட்டிய பாலில் வழுக்கி விழுந்து விடுகிறார். இதனால் அவர் மிகவும் பயந்த நிலையில் காணப்படுகிறார். வீட்டில் உள்ள மற்றவர்களை அவர் ரீச் செய்ய முற்படுகிறார். ஆனால் யாரும் அவரது காலை எடுக்காத நிலையில், மிகவும் பயத்துடன் அவர் காணப்படுகிறார்.
இதையடுத்து அங்குவரும் கோபியின் இரண்டாவது மனைவி ராதிகா, ஜெனியை மீட்டு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்க்கிறார். வீட்டில் யாரும் அவரை ஏற்றுக் கொள்ளாத நிலையில், ராதிகா ஜெனியின் நிலையை கருத்தில் கொண்டு மருத்துவமனையில் சேர்ப்பதுடன் அவரது பில்லையும் கட்டுகிறார். தொடர்ந்து பாக்கியா உள்ளிட்ட மற்றவர்களுக்கும் அவர் தகவல் தெரிவிக்கிறார். அவர்கள் மருத்துவமனைக்கு வந்தவுடன் அங்கிருந்து ராதிகா சென்று விடுகிறார்.
இதையடுத்து பதறும் செழியன் மற்றும் பாக்கியா ஆகியோர் மருத்துவமனையில் டாக்டர்களிடம் ஜெனியின் நிலை குறித்து கேட்டறிகின்றனர். அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அவரது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிந்தவுடன்தான் அவர்களுக்கு நிம்மதி ஏற்படுகிறது. இதையடுத்து ஜெனியை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்துவிட்டு வீட்டிற்கு அழைத்து வருகின்றனர்.

அங்கு குடும்பத்தில் ஈஸ்வரி உள்ளிட்டவர்கள் மிகவும் பதட்டத்துடன் ஜெனியை எதிர்கொள்கின்றனர். தாத்தா மற்றும் பாட்டி இருவரும் தங்களது பதட்டத்தை அதிகமாக காட்டுகின்றனர். தொடர்ந்து ஜெனியை ஓய்வெடுக்க சொல்லி அனுப்புகின்றனர். இதனிடையே, அங்குவரும் ராதிகா, ஜெனி தனியாக இருந்ததால், தான் அவரை மருத்துவமனையில் சேர்த்ததாக குடும்பத்தினரிடம் கூறுகிறார். இதையடுத்து அவரை நன்றியுடன் பாக்கியா உள்ளிட்டவர்கள் பார்க்கின்றனர்.
ஆனால் எப்போதும் ராதிகா மீது தீயை வாரி வீசும் ஈஸ்வரி, தனியாக இருந்த ஜெனியை ராதிகாதான் தள்ளி விட்டாரா என்று கேட்கிறார். இதனால் ராதிகா மட்டுமில்லாமல் பாக்கியா, அமிர்தா உள்ளிட்டவர்களும் அதிர்ச்சியுடன் ஈஸ்வரியை பார்க்கின்றனர். இப்படிக்கூட யோசிக்க முடியுமா என்ற வகையில் ஈஸ்வரி வீட்டில் உள்ளவர்களை மட்டுமில்லாமல் சீரியலை பார்க்கும் ரசிகர்களையும் கடுப்பேற்றியுள்ளார்.


Click it and Unblock the Notifications











