Baakiyalakshmi :இனியாவிற்கு பாடம்.. ராதிகாவிடம் அடி வாங்கும் கோபி.. அடி பலமா!
சென்னை : விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்த சுவாரஸ்யமான எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
அந்த வகையில் சீரியலின் ப்ரமோக்களும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடர் ரீமேக் தொடராக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்காக கதையில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
ராதிகாவிடம் அடி வாங்கும் கோபி : விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முன்னணி தொடராக உள்ள பாக்கியலட்சுமி தொடர், பேமிலி சென்டிமெண்டை மையமாக வைத்து அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. சேனலின் டிஆர்பியில் இந்தத் தொடர் அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. பெங்காலியில் புகழ்பெற்ற ஸ்ரீமோயி என்ற தொடரை தமிழிற்காக ரீமேக் செய்து இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் கோபி, பாக்கியா மற்றும் ராதிகா என முன்னணி கேரக்டர்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.
இந்த தொடரில் பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு, ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொள்கிறார் கோபி. ஆனால் அவர் எதிர்பார்த்த அழகான, இனிமையான வாழ்க்கை அவருக்கு அமையவில்லை. முதல் மனைவி பாக்கியாவே பெட்டர் என்னும்விதமாக ராதிகாவின் செயல்பாடுகள் காணப்படுகின்றன. அவருக்கு கோபியுடன் வாழும் வாழ்க்கை பாதுகாப்பு உணர்வை கொடுக்காததால் அவர், தொடர்ந்து கோபியை சண்டைக்கு இழுக்கிறார்.
இந்நிலையில், பாக்கியாவின் வீட்டிலேயே கோபி மற்றும் அவரைத் தொடர்ந்து ராதிகா இருவரும் வசிக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால் ராதிகா, ஈஸ்வரியின் கோபத்திற்கு ஆளாகிறார். தொடர்ந்து ராதிகாவின் மகள் மயூவும் அங்கே வருவதால், அடுத்தடுத்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் கோபியின் நிம்மதி பறிபோகிறது. முன்னதாக குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் கோபி, இனியா கேட்பதால் அதை நிறுத்துகிறார்.
இந்நிலையில், மயூ, இனியா இருவரும் ஒரே வீட்டில் இருப்பதால் கோபிக்கு பிரச்சினை வேறு ரூபத்தில் வருகிறது. மயூவிற்கு கோபி, பாடம் சொல்லிக் கொடுக்க, கோபத்துடன் அங்கு இனியாவை கூப்பிட்டுவரும் ஈஸ்வரி, மயூவை துரத்திவிட்டு, இனியாவிற்கு பாடம் சொல்லிக் கொடுக்கும்படி கூறுகிறார். கோபியும் இது என்னடா புதிய குழப்பம் என்ற நினைப்பிலேயே இனியாவிற்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார். மயூ ஒரு பக்கம் தூங்க முயற்சி செய்கிறார்.

இதையடுத்து அங்குவரும் ராதிகா, குழந்தை தூங்காமல் இருப்பதை பார்த்து, லைட்டை நிறுத்தும்படி கூறுகிறார். ஆனால் கோபி, இனியா பாடம் படிப்பதால், லைட்டை அணைக்க முடியாது என்று கூறுகிறார். இதனால் கோபமடையும் ராதிகா, தானும் தூங்குவதாக பாவனை செய்கிறார். இடையில் ஓங்கி ஒரு உதை கொடுக்கிறார். கோபி அலறி அடித்துக் கொண்டு, அவரை பார்க்க, தெரியாமல் கை பட்டு விட்டதாக கூறுகிறார். அவர் வேண்டுமென்றே செய்ததை அறிந்து கோபி ஆதங்கப்படுகிறார். அவரால் செய்ய முடிந்தது அதுதான்.


Click it and Unblock the Notifications











