Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 04 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்...
- News
விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வீடு கட்டிய பணத்தை திரும்ப கேட்கும் கோபி.. சவாலை ஏற்கும் பாக்கியா.. ரூ40 லட்சத்தை எப்படி கொடுப்பார்?
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரை ரசிகர்கள் விரும்ப அதிகமான காரணங்கள் உள்ளன.
Recommended Video
இந்தத் தொடரின் அடுத்தடுத்த பரபரப்பான சம்பவங்கள் லோடிங்கில் உள்ளது முக்கியமான காரணமாக காணப்படுகிறது.
இதையடுத்து இந்தத் தொடரில் கோபியின் கேரக்டர் நெகட்டிவ்வாக இருந்தாலும் அவரது நடிப்பிற்கு சிறப்பான வரவேற்பையும் ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.
ஆவேசம்.. கண்ணீர்.. கேள்விகள்.. பாக்கியலட்சுமி தொடரில் அடுத்து என்ன நடக்கும்.. ரசிகர்கள் வெயிட்டிங்!

பாக்கியலட்சுமி தொடர்
விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முதன்மையான தொடராக பாக்கியலட்சுமி காணப்படுகிறது. கோபி, பாக்கியா மற்றும் ராதிகா என மூன்று கேரக்டர்கள் மற்றும் அவர்களுக்கிடையில் சிக்கித் தவிக்கும் காதல் என இந்த சீரியலின் கதைக்களம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

சிறப்பான காட்சி அமைப்புகள்
மனைவிக்கு தெரியாமல் தன்னுடைய பழைய காதலை தொடரவும் திருமணத்தில் முடிக்கவும் நினைக்கும் கணவன் என்ற சாதாரணமான கதைதான் என்றாலும், அடுத்தடுத்த சிறப்பான காட்சி அமைப்புகளின்மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் இந்த தொடரின் இயக்குநர்.

பாக்கியாவின் தியாகங்கள்
குறிப்பாக இந்தத் தொடரில் தன்னுடைய குடும்பத்திற்காக தொடர்ந்து தியாகங்களை மட்டுமே தந்துவரும் பாக்கியா அனைவரையும் ஈர்த்து வருகிறார். இந்நிலையில் ராதிகாவுடனான தன்னுடைய காதலுக்காக பாக்கியாவை விவாகரத்து செய்ய முன்னதாக காய் நகர்த்திய கோபியின் குட்டு தற்போது வெளிப்பட்டுள்ளது.

விவாகரத்து கொடுத்த பாக்கியா
அவரது காதல் லீலைகளையும் அறிந்துக் கொண்ட பாக்கியா, கோபி கேட்ட விவாகரத்தையும் கொடுக்கிறார். தொடர்ந்து வீட்டிற்கு வரும் பாக்கியா, தன்னுடைய துணிமணிகளை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார் என்று பார்த்தால், கோபியின் துணிகளை பெட்டியில் அடைத்து வைக்கிறார். கோபி அந்த பெட்டியை தூக்கி விசிறியடிக்க, இந்த விஷயம் அனைவருக்கும் தெரிகிறது.

கோபியிடம் ஆத்திரமடையும் அப்பா
தொடர்ந்து அது தான் கட்டிய வீடு என்றும் வீட்டை விட்டு வெளியேறுமாறும் பாக்கியாவிடம் கோபம் மற்றும் ஆத்திரத்துடன் கூறுகிறார் கோபி. அதைக் கேட்டு ஆத்திரமடையும் கோபியின் அப்பா, வீட்டை விட்டு வெளியேற வேண்டியது பாக்கியா இல்லையென்றும் கோபி தான் என்றும் கூறுகிறார்.

வெறித்தனமாக கத்திய கோபி
இதைக்கேட்டு ஆத்திரம் உச்சிக்கு ஏறுகிறது கோபிக்கு. தொடர்ந்து இந்த வீட்டை விட்டு வெளியேறுமாறு தன்னுடைய அப்பாவே தன்னைப் பார்த்து கூறும் அளவிற்கு பாக்கியா நாடகமாடுவதாகவும் வெறித்தனமாக கத்துகிறார். இதையடுத்து தான் கட்டிய அந்த வீட்டை விட்டு வெளியேற தான் ஒன்றும் இளிச்சவாயன் இல்லை என்றும் கூறுகிறார்.

பணத்தை கேட்கும் கோபி
அந்த வீட்டிற்காக தான் செலவழித்த தொகையை பாக்கியா திருப்பிக் கொடுத்தால் தான் வீட்டை விட்டு வெளியேறத் தயார் என்றும் ஆத்திரத்துடன் கூறுகிறார். ஒரு கட்டத்தில் இதை பொறுக்க முடியாத பாக்கியா, தான் அவருக்கு 40 லட்சம் ரூபாயை தருவதாக சவால் விடுகிறார். இந்த வகையில் இந்த வாரத்தின் ப்ரமோ காணப்படுகிறது.

சவாலை ஏற்கும் பாக்கியா
கோபிக்கு விவாகரத்து கொடுத்துள்ளார் பாக்கியா. அவரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், சிறிதாக அவர் செய்யும் பிசினசை மட்டுமே வைத்துக் கொண்டு கோபிக்கு அவர் 40 லட்சம் ரூபாய் தருவதாக கூறுவது ரசிகர்களிடையே கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்த எபிசோட்கள் தான் இதற்கு பதிலளிக்க வேண்டும்.