முடிந்தது கோபி -ராதிகாவின் கல்யாணம்.. ஈஸ்வரியின் பேச்சால் அவமானப்பட்ட கோபி!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி தொடர் பரபரப்பான எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.

பாக்கியாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற கோபி, சில தினங்களிலேயே ராதிகாவை திருமணம் செய்ய ஏற்பாடுகளை செய்கிறார்.

அவரது கல்யாணம் குடும்பத்தினருக்கு தெரியவரும் நிலையில், எத்தகைய சூழல்களை சந்திக்க நேர்கிறது என்பதை அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.

பாக்கியலட்சுமி தொடர்

பாக்கியலட்சுமி தொடர்

விஜய் டிவியின் முக்கியமான சீரியலான பாக்கியலட்சுமி அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்தத் தொடரில் கோபியின் காதல் குறித்து தெரிந்த பாக்கியலட்சுமி, அவருக்கு விவாகரத்து கொடுக்கிறார். தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய கோபி, ராதிகாவிடம் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்குகிறார்.

திருமண ஏற்பாடுகள்

திருமண ஏற்பாடுகள்

தன்னுடைய மனைவி பாக்கியா குறித்து பொய்யான விஷயங்களை சொல்லி அவளுடன் தான் இதுவரை சந்தோஷமாக இல்லை என்று கூறி திருமணத்திற்கு ராதிகாவிடம் சம்மதம் வாங்குகிறார். தொடர்ந்து சில தினங்களிலேயே இவர்களின் திருமணம் நடைபெறுவதற்கும் ஏற்பாடுகளை செய்கிறார்.

கோபி -ராதிகா திருமணம்

கோபி -ராதிகா திருமணம்

திருமணம் குறித்துக் கேள்விப்படும் கோபியின் தந்தை, அம்மா, அவரது மகன்கள் மற்றும் மகள் என அனைவரும் திருமணத்தை நிறுத்த படாத பாடு படுகின்றனர். ஆனால் தான் நினைத்ததை சாதித்தே விடுகிறார் கோபி. ராதிகாவுடன் அவரது திருமணம் நடந்து விடுகிறது. திருமணத்தை நிறுத்துவதற்காக அங்குவரும் ஈஸ்வரி இதைக்கண்டு அதிர்ச்சி அடைகிறார்.

ஆத்திரத்தில் ஈஸ்வரி

ஆத்திரத்தில் ஈஸ்வரி


அவர்கள் நன்றாக இருக்க மாட்டார்கள் என்று ஈஸ்வரி, அவரது கணவர் கூற, அம்மா என்று கோபி அவரிடம் ஏதோ கூற முற்படுகிறார். ஆனால் அதுபோல தன்னை இனிமேல் அழைக்க வேண்டாம் என்று கோபத்துடன் கூறும் ஈஸ்வரி, இனிமேல் தன்னுடைய மருமகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் தாங்கள் இருப்பதாக கோபத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார். இதனால் கோபி அவமானத்தில் கூனிக் குறுகுகிறார்.

சமையல் கான்டிராக்ட்

சமையல் கான்டிராக்ட்

இதனிடையே தன்னுடைய கணவனின் திருமணத்திற்கு தானே சமையல் கான்டிராக்டை எடுத்து செய்துவரும் பாக்கியா, அதை மனதில் ஆயிரம் குழப்பங்கள், வருத்தங்களுடன் செய்து முடிக்கிறார். தன்னுடைய மாமனாரை, கோபி அவமானப்படுத்தும்போது அங்குவந்து அவரை அங்கிருந்து கூப்பிட்டு செல்கிறார்.

என்ன பிரயோஜனம்?

என்ன பிரயோஜனம்?

ஆனாலும் இந்த களேபரங்களுக்கு இடையிலும் கான்டிராக்ட் உரிமையாளரிடம் விளக்கத்தை கொடுத்து இந்த கான்டிராக்ட் தனக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்த்தி, கான்டிராக்டை முடித்துக் கொடுக்கிறார். இடையிடையே, கோபியின் திருமணத்தை நிறுத்த வருபவர்களிடமும், செல்வியிடமும் இந்த திருமணத்தை நிறுத்துவதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதையும் புரிய வைக்கிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X