கட்டாயக் கல்யாணத்துக்கு நோ சொல்லுங்க.. போர்க்கொடி தூக்கும் பாக்கியா!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ரசிகர்களை கவர்ந்த பாக்கியலட்சுமி சீரியல் முதலிடத்தில் உள்ளது.
இந்தத் தொடரில் அப்பாவியான தன்னுடைய மனைவி பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்துவிட்டு மறுமணம் செய்கிறார் கோபி.
இதையடுத்து, தனி ஆளாக தன்னுடைய குடும்பத்தை எப்படி பாக்கியா சமாளிக்கிறார் என்பதை மையமாக கொண்டு இந்தத் தொடர் அடுத்தடுத்த எபிசோட்களை தந்து வருகிறது.

பாக்கியலட்சுமி தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் முதன்மையான இடத்தை பிடித்துள்ள தொடர் பாக்கியலட்சுமி. இந்தத் தொடர் கோபி -பாக்கியா மற்றும் ராதிகா மற்றும் அவர்களது மற்ற உறவுகளை மையமாக கொண்டு அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. தன்னுடைய மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற கோபி தற்போது மறுமணம் செய்துக் கொண்டுள்ளார்.

கோபியின் மறுமணம்
தன்னுடைய நீண்ட நாள் காதலி ராதிகாவை திருமணம் செய்த கோபி, அதற்கு தான் விரும்பிய வாழ்க்கை தனக்கு கிடைக்கவில்லை, அதனால் தானே தேடிக் கொண்டதாக அதற்கு விளக்கமும் அளிக்கிறார். இதையடுத்து தன்னுடைய புதிய வாழ்க்கையை ராதிகாவுடன் துவங்கும் அவர், அதையொட்டி பல்வேறு சிக்கல்களையும் சந்திக்கிறார்.

பாக்கியா சந்திக்கும் பிரச்சினைகள்
மாறாக, தன்னுடைய கணவன், தன்னை விட்டுவிட்டு மறுமணம் செய்ததால், தன்னுடைய மாமனார் -மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினரை காப்பாற்றும் பொறுப்பை கையில் எடுக்கிறார் பாக்கியா. இதையொட்டி அவர் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக கொண்டு சீரியல் ஒளிபரப்பானது.

கோபியின் சவால்
இதனிடையே, தன்னுடைய வீட்டை, திருப்பிக் கொடுக்க, பாக்கியாவிடம் சவால் விடுகிறார் கோபி. இதையொட்டி, எழில் மற்றும் வர்ஷினியின் திருமணத்தை முடித்து, அதன்மூலம் வர்ஷினியின் தயாரிப்பாளர் அப்பாவிடம் காசு வாங்க திட்டமிடும் பாட்டி ஈஸ்வரி, இந்த திட்டத்திற்கு குடும்ப சூழலை காரணம் காட்டி, எழிலையும் பணிய வைக்கிறார்.

அமிர்தாவிடம் மன்னிப்பு கேட்கும் எழில்
இந்த திருமணத்திற்கு வரும் வர்ஷினி, திருமணத்தை நிறுத்தி விடுவாரோ என்ற பயத்தில் அவரை திட்டி அனுப்பி விடுகிறார் ஈஸ்வரி. இதையடுத்து, அவரிடம் தன்னுடைய சூழலை கூறி, மன்னிப்பு கேட்கிறார் எழில். இதைப் பார்த்து, தன்னுடைய மகன் காசுக்காக மட்டுமே இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதை அறிந்துக் கொள்கிறார் பாக்கியா.

போர்க்கொடி தூக்கும் பாக்கியா
இதையடுத்து, மனதிற்கு பிடிக்காமல் தன்னுடைய திருமணம் நடந்ததால், தன்னுடைய வாழ்க்கை சின்னாபின்னமானது போல இல்லாமல், மனசுக்கு பிடித்த வாழ்க்கையை தன்னுடைய மகன் வாழ வேண்டும் என்றும், அதனால் அவன், அமிர்தாவுடன் இணையவேண்டும் என்றும் நினைக்கும் பாக்கியா, எழில் -வர்ஷினி திருமணத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்குகிறார்.

கட்டாய கல்யாணத்திற்கு நோ சொல்லுங்க
ஒரு பெண்ணும் ஆணும் புரிந்துக் கொண்டு வாழ வேண்டுமென்றால் அவர்களது திருமணம் அவர்கள் இருவரின் சம்மதத்துடன்தான் நடக்க வேண்டும் என்று தற்போது புதிய ப்ரோமோவில் அவர் கூறுகிறார். கட்டாய கல்யாணத்திற்கு நோ சொல்லுங்கள் என்றும் தன்னுடைய எழிலுக்கு எதிரான திருமணத்தை நிறுத்த கைக்கொடுக்கவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











