என்னது பெரியப்பாவா.. கடுப்படிக்கும் ஜெனி.. ஆத்திரப்படும் செழியன்!
சென்னை : பாக்கியலட்சுமி தொடரின் மிகப்பெரிய ட்விஸ்டாக எழிலுக்கும் அமிர்தாவிற்கும் திருமணம் நடைபெறுகிறது.
இதையடுத்து அமிர்தாவின் மகளான நிலாவும் குடும்பத்தின் ஒரு அங்கமாக மாறுகிறார்.
அந்த குழந்தையை ஏற்பதில் குடும்ப உறுப்பினர்களுக்குள் குழப்பம் ஏற்படுகிறது. செழியனுக்கும் நிலாவை ஏற்பதில் தடுமாற்றம் காணப்படுகிறது.

பாக்கியலட்சுமி தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரில் திருமணமாகி குழந்தைக்கு தகப்பனாகும் நிலையில் தன்னுடைய மகன் இருக்க, தனக்கு ஏற்பட்ட காதலையும் அதையொட்டிய திருமணத்தையும் நடத்தி காரியம் சாதிக்கும் கேரக்டரில் கோபி காணப்படுகிறார்.

காலந்தவறிய கோபியின் காதல்
தன்னுடைய காதலுக்காக மூன்று வளர்ந்த பிள்ளைகளுக்கு தந்தையான கோபி, தன்னுடைய மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு, ராதிகாவை திருமணம் செய்துக் கொள்கிறார். இதையடுத்து தன்னுடைய வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் என்று கனவு காண்கிறார் கோபி. ஆனால் அவருக்கு எல்லாமே தாறுமாறாக நடைபெறுகிறது.

அடுத்தடுத்த பிரச்சினைகள்
ராதிகாவிற்கும் தன்னுடைய வீட்டில் தங்கவரும் தன்னுடைய அப்பா மற்றும் மகளுக்கும் இடையில் ஏற்படும் தகராறு முதல்கொண்டு, நிதி நெருக்கடி என அடுத்தடுத்த பிரச்சினைகளில் சிக்கி தவிக்கிறார் கோபி. இதையடுத்து தன்னுடைய வீட்டை தன்னிடம் திருப்பி கொடுக்குமாறு பாக்கியாவிடம் சவால் விடுகிறார்.

மகனின் காதலை நிறைவேற்றிய பாக்கியா
இதனிடையே அமிர்தாவை எழில் காதலிப்பது தெரிந்தும், பணக்கார வீட்டு பெண்ணான வர்ஷினியை எழிலுக்கு திருமணம் செய்து வைக்க பாட்டி ஈஸ்வரி காய் நகர்த்துகிறார். ஆனால் கடைசி நேரத்தில் மகனின் காதல் குறித்து தெரிந்துக் கொள்ளும் பாக்கியா, அமிர்தாவை குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி எழிலுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.

பெரியப்பா செழியன்
இதனால் அமிர்தாவின் குழந்தை நிலாவும் அந்த குடும்பத்திற்கு வருகிறார். அந்த குழந்தையை ஏற்பதில் செழியன் உள்ளிட்டவர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. இதனிடையே, நிலாவை தன்னுடைய ரூமிற்கு அழைத்துவரும் ஜெனி, செழியனை பெரியப்பா என்று அறிமுகப்படுத்துகிறார்.

கடுப்பாகும் செழியன்
இதைக்கேட்டு கடுப்பாகிறார் செழியன். எழில் யாரை அழைத்து வந்தாலும் அந்த உறவை அப்படியே ஏற்றுக் கொள்கிறாயே என்று ஜெனியை ஆச்சர்யமாக பார்க்கிறார். இனிமேல் நிலாவை தன்னுடைய ரூமிற்கு அழைத்து வரவேண்டாம் என்றும் கூறுகிறார். இதையடுத்து செழியனை பிபி பார்ட்டி என்று கூறுகிறார் ஜெனி.


Click it and Unblock the Notifications











