Don't Miss!
- News
உடைந்து கிடந்த வீட்டு ஜன்னல்.. வீட்டுக்குள் வந்த ஓனர் அம்மா.. பாத்டப்பில் கண்ட காட்சி.. கொடுமையே
- Sports
விராட் கோலியின் வீக்னஸ் இதுதான்.. ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஜாம்பவான் கூறிய பலே ஐடியா.. தப்பிப்பாரா??
- Lifestyle
இந்த 4 ராசிக்காரர்களால் காதலில் ஏமாற்றாமல் இருக்க முடியாதாம்... இவங்கள காதலிக்கிறவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பாக்கியாவிற்கு எதிராக சதி.. ராதிகாவையும் தூண்டிவிடும் கோபி!
சென்னை : பாக்கியலட்சுமி தொடரின் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
இந்தத் தொடரில் தன்னுடைய மனைவி பாக்கியா தன்னைவிட அதிகமாக முன்னேறிவிடக்கூடாது அவர் விட்ட சவாலில் ஜெயிக்கக்கூடாது என்ற மனநிலையில் கோபி காணப்படுகிறார்.
இதனிடையே பாக்கியாவிற்கு கிடைக்கவுள்ள கேன்டீன் கான்டிராக்டை குலைக்கும்படி ராதிகாவிடம் சொல்கிறார்.
ராதிகா வீட்டில் இனியா.. கலக்கத்தில் பாக்கியா செய்த செயல்.. பாக்கியலட்சுமி சீரியலில் ட்விஸ்ட்!

பாக்கியலட்சுமி தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி தொடரில் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்கிறார் கோபி. முன்னதாக தான் வீட்டை விட்டு வெளியேற காரணமான தன்னுடைய மனைவி பாக்கியலட்சுமியிடம் தான் வீட்டை கட்ட செலவழித்த 40 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுக்க கேட்கிறார்.

சவாலை ஏற்கும் பாக்கியா
பாக்கியலட்சுமியும் அந்த சவாலை ஏற்கிறார். ஒரு வருடத்திற்குள் அந்த பணத்தை கோபியிடம் திருப்பி கொடுப்பதாக கூறுகிறார் பாக்கியா. தன்னுடைய மாமனார், மாமியார், மகன்கள் என குடும்பத்தினர் அனைவரையும் கவனிக்கும் பொறுப்புடன் இந்த 40 லட்சம் ரூபாயை திருப்பி கொடுக்கும் பொறுப்பும் அவருக்கு சேர்கிறது. இதையொட்டி தனக்கு தெரிந்த சமையலை வைத்தே தன்னுடைய குடும்பத்தை முன்னேற்றுகிறார்.

பாக்கியாவின் சமையல் கான்டிராக்ட்
சமையல் கான்டிராக்ட் செய்து அதன்மூலம் குடும்பத்தை பராமரிக்கிறார் பாக்கியா. தொடர்ந்து ராதிகாவின் அலுவலகத்தின் கேன்டீன் கான்டிராக்டும் அவருக்கு கிடைக்கிறது. ஆனால் முன்பணமாக 7 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என்று அந்த நிறுவனத்தின் எம்டி கூறுகிறார். இதனால் மனமுடைந்தாலும் தன்னுடைய மருமகள் கொடுக்கும் தைரியத்தால் அதை ஒப்புக் கொள்கிறாள் பாக்கியா.

கேன்டீன் கான்டிராக்ட்
இந்த அலுவலகம் ராதிகாவின் அலுவலகம் என்பது தெரியாமல் அந்த கேன்டீன் கான்டிராக்ட்டை எடுக்கிறார் பாக்கியா. இதுகுறித்து கேள்விப்படும் ராதிகா, தன்னுடைய கணவன் கோபியிடம் இதை கூறுகிறார். ஆனால் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கக்கூடாது என்றும் அதை குலைக்க வேண்டியவற்றை செய்யுமாறும் கோபி கூறுகிறார். ராதிகாவும் இதற்கு உடன்படுகிறார்.

பாக்கியாவிற்கு எதிராக கோபி சதி
பாக்கியாவிற்கு அந்த கான்டிராக்ட் கிடைப்பது குறித்து முன்னதாக எம்டியிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளும் ராதிகா, அந்த கான்டிராக்ட் அவருக்கு பொருத்தமாக இருந்தால் கொடுத்துவிடலாம் என்பதாகத்தான் கூறியிருந்தார். இந்நிலையில் தன்னுடைய மனைவி பாக்கியாவிற்கு எதிரான மனநிலையை ராதிகாவிற்கு கோபி கொடுக்கிறார். இதன்மூலம் பாக்கியா எந்தவகையிலும் தன்னை முந்திவிடக்கூடாது என்ற அவரது மனநிலை வெளிப்படுகிறது.