Baakiyalakshmi :அப்பாவையே கலாய்த்த எழில்.. அலறியடித்து ஓடிய கோபி!

சென்னை : விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடரில் கோபி கேரக்டர் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

தன்னுடைய முதல் மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ஏதேதோ கனவுகளுடன் ராதிகாவை கன்வின்ஸ் செய்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார் கோபி.

ஆனால் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டாலும் செய்துக் கொண்டார், மனிதர் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

Vijay TVs Baakiyalakshmi serial new promo makes fans more fun

ராதிகா பேரைக் கேட்டு அலறிய கோபி :

விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக பாக்கியலட்சுமி தொடர் முன்னிலை வகித்து வருகிறது. சேனலின் டிஆர்பி ரேட்டிங்கிலும் அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்தத் தொடரில் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தொடரை முதலிடத்தில் வைத்துள்ளது. இந்த தொடரில் கோபி கேரக்டர் நெகட்டிவ் ஷேடிலிருந்தாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர் இரண்டு குடும்பத்திற்கும் இடையில் சிக்கி தவிப்பதும் காமெடியாக அமைந்துள்ளது.

திருமணமான இரண்டு மகன்களையும் அவர்களது மனைவிகள், வயதுக்கு வந்த மகள், பெற்றோர் என இவ்வளவு பேரையும் யோசிக்காமல் தன்னுடைய மனதிற்கு பிடித்த வாழ்க்கையை, தான் வாழ முடியாத வாழ்க்கையை தேர்ந்தெடுத்து சுயநலமாக யோசித்த கோபி, பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்துக் கொள்கிறார். இதையடுத்து அவரது கனவு வாழ்க்கை அவருக்கு கைக்கூடியதா என்பதை மையமாக வைத்து அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

ராதிகாவை திருமணம் செய்வதற்கு முன்னதாக பாக்கியாவை பிடிக்கவில்லை என்று அவர் கூறினாலும், வீட்டிற்கு சம்பாதித்து போடுபவர் என்ற வகையில் அவரை ராஜாவாக நடத்துகின்றனர் குடும்பத்தினர். குறிப்பாக பாக்கியா. வெளியுலகம் குறித்த அறிவு அதிகமாக இல்லாத காரணத்தால், தன்னுடைய கணவன்தான் முக்கியம் என்ற வகையில் அவரை மிகவும் சிறப்பாக நடத்துகிறார். ஆனால் பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்யும் கோபி, பல்வேறு டார்ச்சர்களை அனுபவிக்கிறார்.

இதனால் குடிப்பழக்கத்திற்கும் அடிமையாகிறார். இதனிடையே, தானும் கோபியின் வீட்டில்தான் இருப்பேன் என்று ராதிகாவும் அனைவருடனும் இணைந்து இருக்கிறார். இதனால் ராதிகாவிற்கும் கோபிக்கும் சண்டை சச்சரவுகள் மேலும் அதிகமாக நடக்கின்றன. தொடர்ந்து இருவரும் சண்டையிட்டுக் கொள்வது அவர்களது குடும்பத்தினரிடையே மேலும் கடுப்பை ஏற்படுத்துகிறது. இதனால், ராதிகாவை வீட்டை விட்டு வெளியில் போகும்படி கோபியே சொல்லும்படியான சூழல் ஏற்படுகிறது.

Vijay TVs Baakiyalakshmi serial new promo makes fans more fun

இதனிடையே, தற்போது தன்னுடைய குடும்பத்தினரின் முக்கியத்துவத்தையும், பாக்கியாவின் முக்கியத்துவத்தையும் மீண்டும் உணர்கிறார் கோபி. இந்த வார ப்ரமோவில், தன்னுடைய குடும்பத்தினர் அனைவரும் இணைந்து சந்தோஷமாக சிரித்து பேசிக் கொண்டிருக்க, அங்கே வரும் கோபி, அவர்களின் சந்தோஷத்திற்கான காரணத்தை கேட்கிறார். அதை வெளிப்படுத்தினால் தானும் சந்தோஷமடைவேன் என்று கூறுகிறார்.

இதை கேட்கும் எழில், தன்னுடைய கண்ணை காண்பித்து, ராதிகா அந்த இடத்தில் உள்ளதாக கூறுகிறார். இதை கேட்கும் கோபி, மற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு, தான் காபி குடிக்கவில்லை என்றும் ஒன்றுமே செய்யவில்லை என்றும் சும்மா உட்கார்ந்துக் கொண்டிருப்பதாகவும் அலறியடித்துக் கொண்டு எழுகிறார். இதையடுத்து அங்கே இருக்கும் பாக்கியா உட்பட அனைவரும் சிரிக்கின்றனர். இதனால் கோபிக்கு அவமானமாக போகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X