Baakiyalakshmi :ராதிகாவுடன் வந்த மயூ.. வறுத்தெடுக்கும் ஈஸ்வரி.. புதிய சிக்கலில் கோபி!

சென்னை : விஜய் டிவியின் முன்னணி மற்றும் முதன்மை தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரில் கோபி, பாக்கியா மற்றும் ராதிகா என முன்னணி கேரக்டர்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

பாக்கியலட்சுமி தொடரில் கோபி கேட்ட விவாகரத்தை கொடுக்கும் பாக்யா, தன்னுடைய கேரியரை சிறப்பானதாக்கிக் கொண்டுள்ளார்.

இதனால் மிகவும் போல்டான, சந்தோஷமானவராக பாக்கியாவிற்கே உதாரணமாக இருந்த ராதிகா, தற்போது கோபியிற்காக அவருடைய குடும்பத்தினரிடம் மல்லுக் கட்டி வருகிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new promo makes fans more happy

புதிய சிக்கலில் கோபி : விஜய் டிவியின் முக்கியமான தொடராகவும் முதன்மையான தொடராகவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரில் கோபி, பாக்கியா மற்றும் அவரது இரண்டாவது மனைவி ராதிகா என முன்னணி கேரக்டர்களையும் அவர்களின் உறவுகளையும் வைத்து அடுத்தடுத்த எபிசோட்களை இயக்குநர் கொடுத்து வருகிறார். ரிமேக் தொடராக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றாற் போல இந்தத் தொடரில் அடுத்தடுத்த கதைக்களங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோபியின் மனைவியாக வீட்டிற்கு அடங்கிய மருமகளாக இருந்துவந்த பாக்கியாவுடன் தான் மனதிற்கு பிடித்த வாழ்க்கையை வாழவில்லை என்று தன்னுடைய விவாகரத்திற்கு காரணம் சொல்கிறார் கோபி. 25 ஆண்டுகளாக தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தெரியாமல் தவிக்கும் பாக்கியாவிற்கு, கோபி -ராதிகா உறவு குறித்தும் தெரியவர, அவர் தனது கணவன் கோபி கேட்கும் விவாகரத்தை கொடுகிறார். இதனால் வீட்டில் புயல் வெடிக்கிறது.

Vijay TVs Baakiyalakshmi serial new promo makes fans more happy

தொடர்ந்து ராதிகாவை கன்வின்ஸ் செய்து இரண்டாவதாக திருமணம் செய்துக் கொள்கிறார் கோபி. தான் விரும்பிய, தான் வாழத் தவறிய வாழ்க்கை தனக்கு வசமாகும் என்று கணக்கு போடும் கோபிக்கு, அடுத்தடுத்த டார்ச்சரே பரிசாக கிடைக்கிறது. ராதிகாவுடன் நித்தம் ஒரு சண்டை என அவரது வாழ்க்கை கழிகிறது. இதனால் குடிப்பழக்கத்திற்கும் அடிமையாகிறார். இதனிடையே, கோபி தன்னை கைநழுவி விடுவாரோ என்ற பயத்தில் ராதிகாவும் காணப்படுகிறார்.

இதனிடையே, கோபியுடன், பாக்கியா வீட்டிற்கே வருகிறார் ராதிகா. இதனால் ஈஸ்வரியின் கோபத்திற்கு ஆளாகிறார். அவர்கள் இருவரும் அடிக்கடி சண்டைப் போட்டுக் கொள்கின்றனர். யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் கோபி முழிக்கிறார். இதனிடையே, ராதிகாவை பிரிந்திருந்த மயூவையும் அவரது அம்மா, அவருடனேயே அழைத்து வந்து விட்டு செல்கிறார். இதனாலும் ஈஸ்வரியின் கோபம் அதிகரிக்கிறது.

Vijay TVs Baakiyalakshmi serial new promo makes fans more happy

தொடர்ந்து ராதிகாவையும் மயூவையும் மாறி மாறி திட்டுகிறார். மயூவை அரவணைக்க முயலும் பாக்கியாவிற்கும் திட்டு விழுகிறது. இந்நிலையில், மயூவிற்கு கோபி, மேத்ஸ் சொல்லிக் கொடுக்கிறார். அப்போது அங்கே வரும் இனியா, இதனால் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகி, தன்னுடைய அம்மா மற்றும் பாட்டியிடம் சொல்கிறார். இதை தொடர்ந்து, அவரை அழைத்துக் கொண்டு, கோபி ரூமிற்கு செல்லும் ஈஸ்வரி, மயூவை கட்டிலைவிட்டு இறங்க சொல்லிவிட்டு, இனியாவிற்கு பாடம் சொல்லித்தரும்படி கோபியிடம் கோபமாக கூறுகிறார். இது என்னடா புதிய குழப்பம் என்று கோபி குழம்புகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X