விபத்துக்குள்ளாகும் இனியா சென்ற வேன்.. தவிப்பில் கோபி மற்றும் பாக்கியா!

சென்னை : விஜய் டிவியின் முதன்மை தொடரான பாக்கியலட்சுமி தொடர்ந்து சிறப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.

இந்தத் தொடரின் அடுத்தடுத்த ட்விஸ்ட்களுடன் கூடிய எபிசோட்கள் மற்றும் அதையொட்டி வெளியாகிவரும் ப்ரமோக்கள் ரசிகர்களை ஈர்த்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது கோபியுடன் தங்கியிருக்கும் இனியா, ராதிகாவை தொடர்ந்து எடுத்தெறிந்து பேசுவதும் இதனால் கோபி சங்கடத்திற்கு உள்ளாவதுமாக எபிசோட்கள் வெளியாகி வருகின்றன.

பாக்கியலட்சுமி தொடர்

பாக்கியலட்சுமி தொடர்

விஜய் டிவியின் முதன் தொடராக அமைந்துள்ளது பாக்கியலட்சுமி. இந்தத் தொடரில் தனது மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்யும் கோபி, தனது மனதுக்கு பிடித்தமான படித்த மற்றும் தனது ஸ்டேடஸிற்கு பொருத்தமாக இருப்பார் என்று எதிர்பார்ப்புடன் ராதிகாவை திருமணம் செய்துக் கொள்கிறார். கோபி வீட்டை விட்டு வெளியேற தான் காரணமாக மாறிவிட்டதாக நினைக்கும் ராதிகாவும் கோபியை திருமணம் செய்துக் கொள்கிறார்.

ராதிகாவை திருமணம் செய்த கோபி

ராதிகாவை திருமணம் செய்த கோபி

பல்வேறு ட்விஸ்ட்களுடன் ஒருவழியாக இவர்களது திருமணம் நடந்து முடிகிறது. இதையடுத்து தன்னுடைய வாழ்க்கை மிகவும் இனிமையாக அமையும் என்று எதிர்பார்ப்பு மற்றும் கனவுகளுடன் தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கும் கோபிக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. நித்தம் ஒரு பிரச்சினை அதையொட்டிய சண்டை என ராதிகாவுடனான அவரது வாழ்க்கை அவருக்கு கசப்பையே கொடுக்கிறது.

கோபியுடன் தங்கும் இனியா, ராமமூர்த்தி

கோபியுடன் தங்கும் இனியா, ராமமூர்த்தி

இதனிடையே கோபியின் மகள் இனியா மற்றும் அப்பா ராமமூர்த்தி இருவரும் கோபியுடன் வந்து தங்குகின்றனர். பாக்கியாவின் கைவண்ணத்தில் வாய்க்கு ருசியாக சாப்பிட்டு பழகும் ராமமூர்த்திக்கு இன்ஸ்டண்டாக சமைத்துப் போடும் ராதிகாவின் சமையல் பிடிக்காமல் போக, தன்னுடைய மருமகள் கையாலேயே சாப்பிடுகிறார். ராதிகாவின் சமையலை தொடர்ந்து கலாய்த்து அதனால் கோபிக்கும் சங்கடத்தை ஏற்படுத்துகிறார்.

விபத்துக்குள்ளாகும் இனியா

விபத்துக்குள்ளாகும் இனியா

இதனிடையே, ராதிகாவிடம் முகம் கொடுத்தும் பேசாமல் இருக்கிறார் கோபியின் மகள் இனியா. இதனால் அவர்கள் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட இதுவும் கோபிக்கு சங்கடத்தையே ஏற்படுத்துகிறது. இனியாவிற்கு சப்போர்ட் செய்வதால் ராதிகாவின் கோபத்திற்கும் ஆளாகிறார் கோபி. இதனிடையே இனியா பிக்னிக் செல்கிறார். அவர் செல்லும் வாகனம் விபத்துக்குள்ளாவதாக கோபி மற்றும் பாக்கியாவிற்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.

பாக்கியாவிற்கு எதிராக கோபி சதி

பாக்கியாவிற்கு எதிராக கோபி சதி

இதையடுத்து தவிப்புடன் இருவரும் பள்ளிக்கு புறப்பட்டு செல்வதாக தற்போதைய ப்ரமோவில் காட்டப்படுகிறது. முன்னதாக பாக்கியாவிற்கு, ராதிகா அலுவலகத்தின் கேன்டீன் கான்டிராக்ட் கிடைக்கக்கூடாது என்று கோபி கூறுகிறார். அதை குலைக்கவும் ராதிகாவிற்கு அறிவுறுத்துகிறார். ஆனால் இதை ராதிகா ஏற்க மறுக்கிறார். இவ்வளவு நல்ல பெண்ணாக இருந்தால் உனக்கென்ன சிலையா வைக்கப் போகிறார்கள் என்று கேட்கிறார் கோபி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X