Baaakiyalakshmi :என் புருஷன் இப்படி செஞ்சிருந்தா.. பொங்கிய செல்வி.. அடக்கி வாசித்த பாக்கியா!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக மாறியுள்ள பாக்கியலட்சுமி தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

இந்தத் தொடரில் கோபி, பாக்கியா, ராதிகா என லீட் கேரக்டர்களும் ஜெனி, அமிர்தா, செல்வி, ஈஸ்வரி, இனியா, ராமமூர்த்தி என துணை கேரக்டர்களும் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகின்றன.

இந்தத் தொடரின் வில்லனாக இருந்தபோதிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் சதீஷ், தொடரிலிருந்து விலகவுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vijay TVs Baakiyalakshmi serial new promo makes its fans more thrilling

பொங்கிய செல்வி : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் முதன்மையான தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி. தொடர்ந்து டிஆர்பியிலும் இந்தத் தொடர் சிறப்பாக அமைந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்துவரும் இந்தத் தொடர் குடும்ப சென்டிமெண்ட் மூலமாக மட்டுமே ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட முடியும் என்பதை உலகிற்கு உரக்க சொல்லி வருகிறது.

கோபி அவரது திருமண வாழ்க்கை மற்றும் காதல் போன்றவற்றை மையமாக வைத்து அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. திருமணமாகி திருமணமான இரண்டு மகன்களின் தந்தையாக இருந்த போதிலும் தன்னுடைய காதல் மற்றும் தான் வாழ மறந்த வாழ்க்கையை முக்கியமாக கருதி, தன்னுடைய மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்துக் கொள்கிறார் கோபி. இதனால் அவரது வாழ்க்கையில் ஏற்படும் முக்கியமான திருப்பங்களை இந்தக் கதை, கதைக்களமாக கொண்டுள்ளது.

Vijay TVs Baakiyalakshmi serial new promo makes its fans more thrilling

கோபியின் இரண்டாவது திருமணத்தால், முதல் குடும்பத்தினர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தந்தை பாசத்தால் அவருடன் இனியா தங்க, ராதிகாவுடன் அவருக்கு ஏற்படும் பிரச்சினையை அடுத்து அவர், தறகொலைக்கு முயற்சி செய்கிறார். தொடர்ந்து தன்னுடைய அம்மாவுடனேயே அவர் வந்துவிட, இதனால் அதிகமான குடிப்பழக்கத்திற்கு கோபி ஆளாகிறார். இதையடுத்து அவரை தன்னுடைய வீட்டிலேயே தங்க ஈஸ்வரி கூறுகிறார்.

ஒரு இரவு அவர், தன்னுடைய முதல் மனைவியின் வீட்டிலேயே தங்க, கொதித்தெழும் ராதிகா, அங்கேயே வந்து, தன்னுடைய கணவனுடன் தங்குவதாக அழிச்சாட்டியம் செய்கிறார். அது தன்னுடைய கணவனின் வீடு என்றும் நியாயம் பேசுகிறார். இதனால், பாக்கியா உள்ளிட்டவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். தொடர்ந்து அவரை வெளியேற்றும் வழி தெரியாமல் தவிக்கின்றனர். கூடி கூடி பேசுகின்றனர். செல்வி ஒரு கட்டத்தில் கோபத்தில் பொங்குகிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new promo makes its fans more thrilling

தன்னுடைய கணவன் இப்படி செய்திருந்தால், இருவரையும் அரிவாளால் வெட்டிப் போட்டுவிட்டு தான் ஜெயிலுக்கு சென்றிருப்பேன் என்றும் பாக்கியா சும்மா இருப்பதாகவும் செல்வி, கோபத்துடன் பேசுகிறார். போலீஸ் ஸ்டேஷனில் சென்று தன்னுடைய கணவன் மற்றும் ராதிகாமீது, பாக்கியா புகார் அளிக்க வேண்டும என்றும் கூறுகிறார். தானும் கூட வருவதாகவும் பேசுகிறார். அவரை சும்மா விட்டுவைக்கவே ஓவராக ஆடுவதாகவும் கூறுகிறார். ஆனால் வழக்கம்போல பாக்கியா, அமைதியாகவே காணப்படுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X