Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
பெரியவங்க சண்டையில் குழந்தை பாதிக்கப்படக்கூடாது.. ராமமூர்த்தி அட்வைஸ்.. ராதிகா கப்சிப்!
சென்னை : விஜய் டிவியின் முன்னணி மற்றும் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி தொடர் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.
இந்தத் தொடரில் ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டால் தன்னுடைய வாழ்க்கை பூஞ்சோலையாக மாறும் என்று எதிர்பார்த்த கோபிக்கு ரணகளமாக மாறியுள்ளது.
நித்தம் ஒரு போராட்டம், சண்டை என அவரது வாழ்க்கை மாறியுள்ள நிலையில், தனக்கேயுரிய அப்பாவித்தனமான முகபாவத்துடன் அவற்றையெல்லாம் சமாளித்து வருகிறார்.
DSP படத்தின் 'நல்லா இரும்மா' பாடலின் அமோக வெற்றி, மகிழ்ச்சியில் பாடலாசிரியர் விஜய் முத்துப்பாண்டி!

பாக்கியலட்சுமி தொடர்
விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முதன்மை தொடரான பாக்கியலட்சுமி தொடர் அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. தொடர்ந்து டிஆர்பியில் முன்னணியில் உள்ளது. தன்னுடைய வீட்டி அனைவரையும் அதிகாரம் செய்துக் கொண்டிருந்த கோபி தற்போது ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டு எல்லாவற்றிற்கும் முட்டி மோதிக் கொண்டிருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மாறிய கோபி.. மாற்றிய ராதிகா
பாக்கியாவை எளிதாக விவாகரத்து செய்துக் கொண்டு, ராதிகாவை சமாதானப்படுத்தி உடனடியாக திருமணம் செய்துக் கொண்ட கோபி, தொடர்ந்து ஒவ்வொரு வேலை சாப்பாட்டிற்கும் கஷ்டப்படுகிறார். லைட் ஃபுட் என்று சொல்லி அவருக்கு ஓட்ஸ் கஞ்சி, நூடுல்ஸ் என கொடுக்கிறார் ராதிகா. அவரிடம் சண்டை போட முடியாமல் அவற்றையெல்லாம் சாப்பிடுகிறார்.

ராதிகாவை மதிக்காத இனியா
ஒரு கட்டத்தில் தப்பான முடிவை எடுத்து விட்டோமோ என்று அவரே யோசிக்கும் அளவிற்கு சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. இதனிடையே, கோபியின் அப்பா மற்றும் மகள் இருவரும் அவரது வீட்டிற்கே வந்து விட, இதனால் ஏற்படும் மன கசப்புகள் தற்போது அடுத்தடுத்த எபிசோட்களை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ராதிகாவை மதிக்காத இனியா, இதனால் கோபத்திற்குள்ளாகும் ராதிகா, இடையில் சிக்கித் தவிக்கும் கோபி என அத்தடுத்த எபிசோட்கள் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன.

தொடர்ந்து சண்டையில் கோபி -ராதிகா
சத்துமாவு கஞ்சியை இனியாவிற்கு ராதிகா பறிமாற, அதையெல்லாம் சாப்பிட முடியாது என்று கோபத்துடன் கூறுகிறார் இனியா. இதனால் கோபமடையும் ராதிகா, கோபியிடம் சண்டைக்கு வருகிறார். என்ன பிடிக்கும் என்று வாய் திறந்து சொன்னால் தானே தனக்கு தெரியும் என்று ராதிகா கோபத்துடன் கூறுகிறார். இந்த சண்டை மறுநாளும் தொடர்கிறது. இதனால் கோபியை அங்கிருந்து செல்லுமாறு கூறுகிறார் ராதிகா.

வெடிக்கும் சண்டை
தொடர்ந்து தன்னுடைய மகள் மயூவை அடிக்க பாய்கிறார் ராதிகா. தன்னுடைய மகளை கண்டிக்க தனக்கு உரிமை இல்லையா என்று கோபியிடம் மீண்டும் சண்டையிடுகிறார். ஏன் பிரித்து பேசுகிறாய் என்று கோபி கேட்க, அவர்களுக்குள் சண்டை வெடிக்கிறது. இதனிடையே இனியாவை பள்ளியில் டிராப் செய்ய அங்கிருந்து புறப்பட்டு சென்று விடுகிறார் கோபி.

ராமமூர்த்தி அட்வைஸ்
இதையடுத்து மயூவை தன்னுடைய பக்கத்தில் அமர வைக்கும் ராமமூர்த்தி, பெரியவர்கள் சண்டை குழந்தைகளை பாதிக்கக்கூடாது என்றும் அதை இருவரும் புரிந்துக் கொண்டால் நல்லது என்றும் கூறுகிறார். இதனால் சமாதானமடையும் ராதிகா, சாந்தமாக மயூவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து செல்வதாக இன்றைய தினம் வெளியாகியுள்ள ப்ரமோவில் காணப்படுகிறது.