Baakiyalakshmi serial :வீட்டை விட்டு கிளம்பும் ராதிகா.. என்ன ஆச்சு.. அப்பாவியாய் காரணம் கேட்ட கோபி!
சென்னை : விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி. அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது.
இந்த தொடரின் லீட் கேரக்டர்களான கோபி, பாக்கியா மற்றும் ராதிகா கேரக்டர்களில் சதீஷ், சுசித்ரா மற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

தொடர் பெண்ணின் வைராக்கியம், உழைப்பு, முன்னேற்றம் ஆகியவற்றை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. வெளியில் தன்னுடைய சாதனையை வெளிப்படுத்தினாலும் வீட்டிற்கு அடங்கியவராகவே இந்தக் கேரக்டர் காட்டப்படுகிறது.
பாக்கியலட்சுமி தொடர் : விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரின் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்கள் ரசிகர்களை கவரும் வகையில் ஒளிப்பரப்பாகி வருகிறது. ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ள இந்தத் தொடர் டிஆர்பியிலும் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. கோபி, பாக்கியா மற்றும் ராதிகா என்ற மூன்று கேரக்டர்களை முன்னிறுத்தி மற்ற துணை கேரக்டர்களையும் சிறப்பாக இவர்களுடன் இணைத்து இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
கதையில் ரசிகர்களை தொடர்ந்து என்கேஜ் செய்யும் வகையில் ஒவ்வொரு விஷயமாக புகுத்தி வருகிறார் இயக்குநர். ராதிகா மீது கொண்ட காதலால் தன்னுடைய மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்யும் கோபி, தற்போது அவரை திருமணம் செய்தும் நிம்மதி இல்லாமல் தவித்து வருகிறார். தன்னுடைய முன்னாள் மனைவியை நினைத்து தற்போது வாடி வருகிறார். தன்னுடன் இருந்த மகளும் அம்மாவுடன் சென்றுவிட, அதிகமாக குடிக்கவும் துவங்கியுள்ளார்.

குடித்துவிட்டு வந்தால் வாய் சும்மா இருக்குமா, தன்னுடைய மகள் தன்னைவிட்டு பிரிய, தன்னுடைய இரண்டாவது மனைவி ராதிகா தான் காரணம் என்றும் தன்னுடைய நிம்மதி பறிபோனதற்கு அவர்தான் காரணம் என்றும் பலவாறாக உளறி வைக்கிறார். மேலும் தன்னுடைய முதல் மனைவி பாக்கியா குறித்தும் புகழாரம் பாடுகிறார். இதனால் ராதிகா கடுப்பாகிறார். தொடர்ந்து கோபியை விட்டு விலகும் முடிவை அவரும் எடுக்க வேண்டிய சூழலை உருவாக்குகிறார் கோபி.
இதனிடையே குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடந்த கோபியை, பாக்கியா மீட்டெடுத்து, ராதிகாவிடம் கொண்டுவந்து சேர்த்து, அவரை ஒழுங்காக பார்த்துக் கொள்ளும்படி அட்வைஸ் செய்வது, ராதிகாவிற்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து கோபியும், அவரை திட்டுகிறார். இதனால் கடுப்பான ராதிகா, மறுநாள் காலை தன்னுடைய மகள் மயூவை கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். இதையடுத்து அவர்களை கோபி தடுக்கிறார்.
இரவு என்ன நேர்ந்தது, தான் என்ன செய்தேன், எப்படி வீட்டிற்கு வந்தேன் என எதுவுமே தெரியாமல் குழப்பத்திற்கு உள்ளாகும் கோபி, ராதிகாவின் இந்த செயலால் மேலும் அதிர்ச்சி அடைகிறார். அவரது காலில் விழாத குறையாக அவரை தடுக்கிறார். ஆனாலும் வெளியில் வந்த ராதிகா, காரில் புறப்பட எத்தனிக்க, மீண்டும் சாலையென்றும் பார்க்காமல் கோபி அவரது காலில் விழுந்து போக வேண்டாம் என்று கெஞ்சுகிறார். ஆனால் தன்னுடைய முடிவில் ராதிகா தீர்க்கமாக இருக்கிறார்.
ராதிகா காலில் அவர் விழுந்து கெஞ்சுவதை, தெருவே வேடிக்கை பார்க்கிறது. மேலும் அவருடைய அப்பா, அம்மா, இனியா, எழில், செழியன் என அவரது குடும்பத்தினரும் இதை வருத்தத்துடனும் அவமானத்துடனும் பார்க்கின்றனர். அவர்கள் பார்ப்பதை குறிப்பாக கோபியின் அம்மா ஈஸ்வரி பார்ப்பதை கோபியும் பார்த்துவிட, அவருக்கும் அவமானமாக போய்விடுகிறது. இவ்வாறு புதிய ப்ரமோ காணப்படுகிறது. குடித்துவிட்டு, அதை ஈடுகட்ட, ராதிகாவின் காலில் விழுகிறார் கோபி. அன்பான, அழகான குடும்பத்தை தன்னுடைய பேராசையால் விட்டுவிட்டு, தற்போது தொடர்ந்து அவமானங்களையும் பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறார் கோபி


Click it and Unblock the Notifications











