ராதிகா வீட்டில் இனியா.. கலக்கத்தில் பாக்கியா செய்த செயல்.. பாக்கியலட்சுமி சீரியலில் ட்விஸ்ட்!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முதன்மையான தொடரான பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் அரங்கேறி வருகின்றன.

திருமணமான கோபி வீட்டில் தற்போது அவரது தந்தை மற்றும் மகள் இருவரும் தங்கியுள்ளனர். இதனால் ராதிகா -கோபி இடையில் பிரச்சினை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அடுத்தடுத்த ட்விஸ்ட்களால் சீரியல் களைகட்டி வருகிறது. ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

பாக்கியலட்சுமி தொடர்

பாக்கியலட்சுமி தொடர்

விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி தொடரில் அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தொடராக பாக்கியலட்சுமி மாறியுள்ளது. பாக்கியாவை விவாகரத்து செய்த கோபி, உடனடியாக ராதிகாயை சமாதானம் செய்து அவரை திருமணமும் செய்துக் கொண்டார். இவர்களது திருமணத்தை நிறுத்த கோபி குடும்பத்தினர் செய்த முயற்சிகள் பலிக்காமல் திருமணம் நடந்து முடிந்தது.

தள்ளாட்டத்தில் கோபி

தள்ளாட்டத்தில் கோபி

இதையடுத்து அவர் ஹனிமூனுக்கு சென்றதும், அங்கு மகா சங்கமத்தில் மூர்த்தி குடும்பத்தினர் அவர்களை வைத்து செய்ததும் தனிக்கதை. ஹனிமூன் சென்றும் கோபிக்கு அது தனிமூனாக மாறிய நிலையில், வீட்டிற்கு திரும்பி வந்தாவது சந்தோஷமாக இருக்கலாம் என்று கோபி போட்ட கணக்கு எல்லாம் பொய்யாகியது. பாக்கியாவின் கைப்பக்குவத்தில் சிறப்பான உணவை சாப்பிட்டு பழகிய கோபிக்கு ராதிகாவின் இன்ஸ்டண்ட் சமையல் கடுப்பையே ஏற்படுத்தியது.

 கடுப்பாகும் ராதிகா

கடுப்பாகும் ராதிகா

இதனிடையே தற்போது கோபியின் அப்பா மற்றும் மகள் இனியா இருவரும் கோபி -ராதிகா வீட்டிற்கு வந்துள்ளனர். முன்னதாக ராதிகா செய்த சாம்பாரை கோபியின் அப்பா சாம்பாரில் பருப்பே இல்லையே என்று செய்த கலாய்ப்பில் ராதிகா கடுப்பாக, தொடர்ந்து பல சங்கடங்களை கோபி சந்திக்க வேண்டி வந்தது. ஆனாலும் தன்னுடைய அப்பா மற்றும் மகளை அவர் மகிழ்ச்சியாகவே எதிர்கொண்டு வருகிறார்.

அடுத்தடுத்த ப்ரமோக்கள்

அடுத்தடுத்த ப்ரமோக்கள்

இதனிடையே தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ள ப்ரமோக்களில், கோபியின் அப்பா ராமமூர்த்தி, தன்னுடைய மருமகள் பாக்கியா கையால் சாப்பிடுவதற்காக அவரது வீட்டிற்கு வருகிறார். அங்கு பாக்கியா கொடுக்கும் உணவை சாப்பிடும் அவர், பேத்தி இனியாவிற்கும் அதை கொண்டு வருகிறார். அதை சாப்பிடும் இனியா, அம்மா முழுமனதுடன் அந்த உணவை கொடுத்தாரா என்று கேட்கிறார்.

நெகிழ்ச்சியில் இனியா

அதற்கு பதிலளிக்கும் அவர், இனியா கோபியுடன் இருக்க வந்த நாள் முதல் பாக்கியா அவரையே நினைத்து வருந்துவதாக தெரிவிக்கிறார். இதனால் இனியா மிகுந்த கவலை அடைகிறார். பாக்கியா தனக்கு கொடுத்த உணவை ரசித்து சாப்பிடும் இனியா, அந்த உணவு தனக்கு பிடிக்கும் என்பது பாக்கியாவிற்கு நன்கு தெரியும் என்றும் கூறுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X