என் கடைசி மூச்சுவரைக்கும் ராதிகாதான் என்னோட பொண்டாட்டி.. கல்யாண ரிஷப்ஷனில் ஆக்ரோஷமாக பேசிய கோபி!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்மியில் பரபரப்பான எபிசோட்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றன.
இந்தத் தொடரில் பாக்கியா, தனது கணவர் கோபிக்கு விவாகரத்து கொடுத்த நிலையில் இதுதான் சான்ஸ் என்று அவரும் ராதிகாவை திருமணம் செய்ய காய் நகர்த்துகிறார்.
இதனிடையே, இந்த திருமணத்திற்கு சமைக்கும் சான்ஸ் பாக்கியாவிற்கு கிடைக்கிறது. தனது கணவனின் திருமணத்திற்கே அவர் சமைக்கும் நிலை ஏற்படுகிறது.

பாக்கியலட்சுமி தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி தொடர் மீண்டும் பரபரப்பான காட்சிகளை ஒளிபரப்பி வருகிறது. தனது கணவனின் காதல் குறித்த விஷயம் தெரிந்தவுடன் அவர் கேட்ட விவாகரத்தை கொடுக்கிறார் பாக்கியா. மனமுடைந்த நிலையில், அவர் தனியாக சென்று வாழ்க்கையில் முன்னேறுவார் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

கோபியின் ரிஷப்ஷன்
ஆனால் அவரோ மீண்டும் வீட்டிற்குள் புகுந்து, தனது கணவன் கோபி வீட்டைவிட்டு வெளியேற காரணமாக அமைகிறார். இதுதான் சாக்கு என்று கோபியும், ராதிகாவின் மனதை மாற்றி அவரை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார். அவர்களது திருமணமும் நிச்சயிக்கப்பட்டு ரிஷப்ஷன் வரை வந்து விட்டது.

சமையல் கான்டிராக்ட்
இந்நிலையில் தனது கணவனின் திருமணம் என்று தெரியாமலேயே அதன் சமையல் கான்டிராக்டை மேற்கொள்கிறார் பாக்கியா. தன்னுடைய குடும்பத்தை வழிநடத்த அவருக்கு இந்த கான்டிராக்ட் உதவியாக இருக்கும் என்று திட்டமிடுகிறார். இதனிடையே கோபிக்குத்தான் திருமணம் என்பது அவருக்கும் செல்விக்கும் தெரியவருகிறது.

வெளுத்து வாங்கிய செல்வி
அந்த இடத்திலும்போய் அமைதியாக கோபமான பார்வையை மட்டுமே வீசுகிறார் பாக்கியா. ஆனால் இந்த விஷயத்தில் கொந்தளிக்கிறார் செல்வி. சபையில் கோபியை லெப்ட் ரைட் வாங்குகிறார். வெட்கமில்லாமல் கோபி மேடையில் மணக்கோலத்தில் நிற்பதாக வெளுத்து வாங்குகிறார்.

ராதிகாதான் மனைவி
பதிலுக்கு பேசும் கோபி, தனக்கு விவாகரத்து கொடுத்து வீட்டை விட்டு வெளியேற்றிய பாக்கியா தனது மனைவி இல்லை என்றும் ராதிகாதான் இனி காலத்துக்கும் தன்னுடைய மனைவி என்றும் அவர் கூறுகிறார். இதனால் ராதிகா நெகிழ்ச்சியும் பாக்கியா கோபமும் கொள்கின்றனர். தொடர்ந்து கொந்தளிக்கும் செல்வியை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்து செல்கிறார் பாக்கியா.
தன்னுடைய கணவனின் காதல் விவகாரம் தெரிந்தவுடன் அவருக்கு உடனடியாக விவாகரத்து கொடுத்த பாக்கியலட்சுமி ஏதோ செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இதுவரை அதுபோல எதுவும் நடக்கவில்லை என்பது ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. தனியாக வந்து சாதிப்பார் என்று பார்த்தால் மறுபடியும் குடும்பத்திற்கு சென்று அவர்களுக்காக தியாகம் செய்கிறார் பாக்கியா.


Click it and Unblock the Notifications











