மகனின் விவாகரத்து முடிவு... பொங்கிய பாக்கியலட்சுமி... அலறிய கோபி!

சென்னை : விஜய் டிவி சீரியல்களில் ஜெட் வேகத்தில் ரசிகர்களை கொண்டாட வைத்து வரும் தொடராக பாக்கியலட்சுமி மாறியுள்ளது. இந்தத் தொடரில் கோபியின் தகிடுதத்தங்கள், அப்பாவித்தனமான பாக்கியலட்சுமி என கேரக்டர்களை சிறப்பாக கொண்டு செல்கிறார் இயக்குநர்.

விஜய் டிவி தொடர்கள்

விஜய் டிவி தொடர்கள்

விஜய் டிவி சீரியல்களில் முக்கியமான தொடராக பாரதி கண்ணம்மா இருந்தது. இந்தத் தொடரில் கண்ணம்மாவின் மாற்றத்திற்கு பிறகு சீரியலில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாரதி கண்ணம்மாவின் இடத்தை தற்போது பாக்கியலட்சுமி தொடர் கைப்பற்றியுள்ளது.

முதலிடங்களில் தொடர்கள்

முதலிடங்களில் தொடர்கள்

விஜய் டிவியின் சீரியல்கள் எப்போதுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருபவை. தொடர்ந்து டிஆர்பியில் முதலிடத்தை தக்க வைத்து வருபவை. விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொடர்கள் தொடர்ந்து முதலிடங்களை தக்க வைத்து கொண்டிருந்தன.

டிஆர்பியில் இறங்கிய தொடர்கள்

டிஆர்பியில் இறங்கிய தொடர்கள்

இந்நிலையில் சன் டிவியின் கயல் உள்ளிட்ட தொடர்கள் தற்போது டிஆர்பியில் முதலிடத்தை பிடித்துள்ளன. விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக நடித்துவந்த ரோஷினி விலகிய நிலையில் அந்த தொடரின் டிஆர்பி இறங்கியது. இதையடுத்து அந்த இடத்தை தற்போது பாக்கியலட்சுமி கைப்பற்றியுள்ளது.

விறுவிறுப்பான பாக்கியலட்சுமி தொடர்

விறுவிறுப்பான பாக்கியலட்சுமி தொடர்

இந்தத் தொடர் விறுவிறுப்பாக சென்று வருகிறது. சீரியலில் கோபியின் காதல் மற்றும் அதை தொடர்ந்த அவரது நடவடிக்கைகள் பாக்கியலட்சுமியை வெகுவாக யோசிக்க வைத்துள்ளது. அவர் இரவு நேரங்களில் ராதிகா வீட்டில் தங்குவது, பாக்கியலட்சுமியிடம் கோபம் கொள்வது என அவரது நடவடிக்கைகளில் எப்போதும் இல்லாத மாற்றத்தை பாக்கியலட்சுமி உணர்கிறார்.

பாக்கியாவை திட்டும் கோபி

பாக்கியாவை திட்டும் கோபி

அவரது பணத்தேவைக்காக சமையல் ஆர்டரை செய்து அந்த பணத்தை அவரிடம் கொடுக்க பாக்கியலட்சுமி முற்படும்போது, ராதிகா வீட்டிலிருந்து வரும் கோபி, பாக்கியாவை திட்டித் தீர்க்கிறார். அக்கறை இருப்பதாக நடிக்காதே என்றும் கூறுகிறார். இதனால் பாக்கியா மனம் புண்படுகிறார்.

கன்னம் பழுத்த செழியன்

கன்னம் பழுத்த செழியன்

இதனிடையே, செழியன் மற்றும் ஜெனி விஷயம் குறித்து இன்றைய ப்ரமோவில் காட்சிகள் வெளியாகியுள்ளன. தன்னுடைய வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்றும் விவாகரத்து செய்துவிடலாம் என்று தான் கருதுவதாகவும் செழியன் கூற, அவரது கன்னம் பாக்கியாவின் அடியால் பழுக்கிறது.

கோபத்தில் கொதித்தெழும் பாக்கியா

கோபத்தில் கொதித்தெழும் பாக்கியா

விவாகரத்து என்றால் அவ்வளவு எளிதான விஷயமா என்றும் செழியனை தொலைத்துவிடுவேன் என்றும் அவர் கோபத்தில் கொதித்தெழுகிறார். டைவர்ஸ் செய்வதற்கு எதற்கு திருமணம் என்றும் கேள்வி எழுப்புகிறார். இதைப் பார்க்கும் கோபி திகைப்புடன் பாக்கியலட்சுமியை பார்க்கிறார்.

டிஆர்பியில் முன்னிலை

டிஆர்பியில் முன்னிலை

திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடர் டிஆர்பி ரேட்டிங்கில் கடந்த வாரங்களில் சிறப்பான வகையில் முன்னேறியுள்ளது. தொடர்ந்து விறுவிறுப்பான காட்சிகளுடன் செல்லும் இந்த தொடருக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X