நெத்தியிலயும் அடி வாங்கியாச்சு.. லட்டுலயும் அடி வாங்கியாச்சு.. திண்டாட்டத்தில் கோபி!
சென்னை : விஜய் டிவியின் முதன்மையான தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி. அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப கொடுத்து வருகிறது.
இந்தத் தொடரில் கோபி -பாக்கியா மற்றும் ராதிகாவை சுற்றியே அடுத்தடுத்து கதைக்களம் காணப்படுகிறது. வயதுக்கு மீறிய காதலால் கதையின் நாயகன் படும் அவதிகளை இந்தத் தொடர் சுட்டிக் காட்டுகிறது.
ராதிகா மீது கொண்ட காதலால் தன்னுடைய மனைவி, குடும்பத்தினரை பிரிந்து, அவரை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொள்ளும் கோபிக்கு தான் விரும்பும் வாழ்க்கை கிடைத்ததா என்பதை சுவாரஸ்யமாக இந்தத் தொடர் சொல்கிறது.

பாக்கியலட்சுமி தொடர்
விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக பாக்கியலட்சுமி பல மாதங்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தத் தொடரில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் அடுத்தடுத்த விறுவிறுப்பான எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. கோபி -பாக்கியா மற்றும் ராதிகா ஆகியோரை முதன்மை கேரக்டர்களாக கொண்டுள்ள போதிலும், அவர்களின் மற்ற உறவுகளுக்கும் தொடரில் முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.

கோபியின் இரண்டாவது திருமணம்
கதையின் நாகயன் கோபியின் வயதுக்கு மீறிய காதல் மற்றும் திருமணத்தை மையமாக கொண்டு கதைக்களம் காணப்படுகிறது. முன்னதாக அவர் கேட்ட விவாகரத்தை கொடுத்து, அவர் வீட்டை விட்டு வெளியேறவும் காரணமாக இருந்த பாக்கியா, தன்னுடைய குடும்பத்திற்காக செலவுகளுக்காக போராடினாலும், அதனூடே தன்னுடைய திறமைகளையும் வளர்த்துக் கொள்ளும்படியாக காட்சி அமைப்புகள் காணப்படுகின்றன. பாக்கியாவை பார்த்து கோபியின் இரண்டாவது மனைவி ராதிகாவும் பொறாமைப்படும் அளவிற்கு அவர் தன்னை உயர்த்திக் கொண்டு வருகிறார்.

பாக்கியாவின் கேன்டீன் கான்டிராக்ட்
ராதிகாவின் அலுவலகத்திலேயே கேன்டீன் ஆர்டரை பெறும் பாக்கியா, ஆங்கிலம் தெரியாததால் ராதிகாவால் அவமானப்படுத்தப்படுகிறார். இதை சவாலாக ஏற்கும் பாக்கியா, ஆங்கிலம் கற்றுத்தரும் வகுப்பிற்கு செல்கிறார். அங்கு பழனிச்சாமி என்பவரை சந்திக்கிறார். இந்தக் கேரக்டரில் புதிதாக நடிகர் ரஞ்சித் களமிறங்கியுள்ளார். இதனிடையே கேன்டீன் துவக்கவிழாவும் நடக்கிறது. அதையொட்டி கதைக்களம் காணப்படுகிறது.

கேன்டீன் துவக்கவிழாவில் கோபி
அங்கு தன்னுடைய மகளை போகக்கூடாது என்று கூறும் கோபி, இறுதியில் அவளது விருப்பத்திற்காக நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார். அங்கு தன்னுடைய மனைவியை, பழனிச்சாமி புகழ்வதை பார்த்து அவருக்கு கோபம் வருகிறது. பாக்கியா மிகவும் இளமையாக காணப்படுவதாக பழனிச்சாமி பாராட்டுகிறார். என்னதான் விவாகரத்து செய்தாலும் தன்னுடைய மனைவியை ஒருவன் பாராட்டுவதை கோபியால் ஏற்க முடியவில்லை.

கோபியிடம் கோபப்படும் ராதிகா
இதையடுத்து அங்குவரும் ராதிகா, நிகழ்ச்சிக்கு கோபி வந்ததை பார்த்து மிகுந்த கோபமடைகிறார். முன்னதாக தன்னை பாக்கியா கேள்வி கேட்டதை பொறுத்துக் கொள்ள முடியாமல் கோபமடையும் ராதிகா, நிகழ்ச்சிக்கு கோபி வந்ததையும் பார்த்து மிகுந்த கோபத்துடன் அவரிடம் கத்துகிறார். கோபியின் நெற்றியில் வைத்திருந்த சந்தனத்தை அடித்து துடைக்கிறார். மேலும் கையில் வைத்திருக்கும் லட்டை வாங்கி அவரது வாயில் திணிக்கிறார்.

திண்டாட்டத்தில் கோபி
இத்தனை நேரமாக கோபியின் அப்பா -அம்மா பாக்கியாவை தூக்கி வைத்து பேசியதை கோபத்துடன் சுட்டிக் காட்டும் ராதிகா, அவர்கள் எல்லாம் ஒன்றாகிவிட்டதாகவும் அப்பொழுது அவர்களுக்கு தான் யார் என்றும் கோபியிடம் கேள்வி எழுப்புகிறார். மேலும் வீட்டுக்கு வாங்க உங்களுக்கு இருக்கிறது என்றும் குத்தியபடி கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார். இனியாவை அழைப்பதற்காக அங்குவரும் கோபி, ராதிகாவின் இந்த செயலால் திண்டாடுகிறார்.


Click it and Unblock the Notifications











