Baakiyalakshmi serial :தற்கொலை செய்து கொள்வேன்... மிரட்டும் ராதிகா.. விபரீத முடிவெடுக்கும் பாக்கியா!

சென்னை : பாக்கியலட்சுமி தொடரில் தன்னுடைய மனைவி பாக்யாவை விவாகரத்து செய்யும் கோபி, இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்துக் கொள்கிறார்.

அதுவரை ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்த கோபிக்கு, ஒவ்வொரு விஷயமும் காயத்தை ஏற்படுத்துகிறது. நிதி நெருக்கடிக்கும் உள்ளாகிறார்.

இதனால் அவர் தொடர்ந்து குடித்துவிட்டு வர, ராதிகாவை விட்டுவிட்டு, தன்னுடனேயே இருக்கும்படி ஈஸ்வரி ஆலோசனை கூறுகிறார்.

Vijay TVs Baakiyalakshmi serial new promos makes everyone stunning

விபரீத முடிவெடுக்கும் பாக்கியா : விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய சீரியலாக காணப்படுவது பாக்கியலட்சுமி. இந்தத் தொடரில் கோபி, பாக்கியா மற்றும் ராதிகா என முக்கியமான கேரக்டர்களை கொண்டு, அவர்களின் வாழ்க்கையில் நிகழும் முக்கியமான சம்பவங்களை அடிப்படையாக வைத்து அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறார் இயக்குநர். தன்னுடைய முதல் மனைவி மற்றும் அவளுடன் பொருந்தாத வாழ்க்கை என காரணம் கூறி, இரண்டாவதாக திருமணம் செய்கிறார் கோபி.

முதல் மனைவியுடன் வாழ்ந்து 3 வயதுக்கு வந்த பிள்ளைகளுக்கு தகப்பனாக இருக்கிறார் கோபி. அவர்களில் இருவருக்கு திருமணம் நடந்து முடிந்த நேரத்தில் அதை பொருட்படுத்தாமல், தன்னுடைய இரண்டாவது திருமணத்தை ராதிகாவுடன் முடித்துக் கொள்கிறார். அந்த திருமணம் நினைத்ததை போன்ற நிறைவை கொடுக்காத நிலையில், மன நெருக்கடி, நிதி நெருக்கடி என அடுத்தடுத்த பிரச்சினைகளை சந்திக்கிறார். முதல் திருமணமே பெட்டரோ என்று நினைக்கும் அளவிற்கு சூழ்நிலைகள் அவரை ஆட்டுவிக்கின்றன.

Vijay TVs Baakiyalakshmi serial new promos makes everyone stunning

இதனால் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார் கோபி. இதையடுத்து வருத்தப்படும் அவரது அம்மா ஈஸ்வரி, தங்களுடனேயே கோபியை தங்கும்படி கூறுகிறார். ராதிகாவை விட்டுவிட்டு வரும்படியும் கூறுகிறார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகும் ராதிகா, அவர்கள் வீட்டிற்கே வந்து உட்கார்ந்துக் கொள்கிறார். அது தன்னுடைய கணவன் வீடு என்றும் தான் அங்குதான் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். இதையடுத்து அவரை சமாளிக்க கோபி முயற்சிக்கிறார். ஆனால், தான் தற்கொலை செய்துக் கொள்வேன் என்று மிரட்டுகிறார்.

மேலும் தன்னுடைய சாவிற்கு கோபி மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுத்த டார்ச்சர்தான் காரணம் என்று எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறுகிறார். இதனால் அச்சமடையும் கோபி, ராதிகா அங்குதான் தங்குவார், அது தன்னுடைய வீடு என்று கூறுகிறார். இன்னும் சில லட்சங்கள்தானே அதை தான் தருகிறேன் என்று செழியன் சபதமேற்கிறார். குடும்பத்தினர் அனைவரும் ராதிகாவை வெளியேற்ற கோபியிடம் சண்டையிடுகின்றனர்.

Vijay TVs Baakiyalakshmi serial new promos makes everyone stunning

இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கே தங்க என்ன உரிமை இருக்கிறது என்று பாக்கியா கேள்வி எழுப்புகிறார். தொடர்ந்து பேசும் ராதிகா, டைவர்ஸ் ஆன கணவன் வீட்டில் தங்குவதற்கு பாக்கியாதான் அசிங்கப்பட வேண்டும் என்று கூறுகிறார். இதையடுத்து கோபமடையும் பாக்கியா, தான் கௌரவமாகவே வாழ்ந்து வருவதாக தெரிவிக்கிறார். தொடர்ந்து குடும்பத்தினரிடம் தான் ராதிகாவை பார்த்துக் கொண்டு அந்த வீட்டில் எப்படி இருப்பது என்றும் தான் அந்த வீட்டை விட்டு வெளியேறுவதாகவும் கூறுகிறார்.

இதையடுத்து எழில், செழியன், பாக்கியா, ராமமூர்த்தி என அனைவரும் அவரை போக விடாமல் தடுக்கின்றனர். யார் எந்த விஷயத்தை செய்தாலும் அந்த வீட்டை விட்டு வெளியேற பாக்கியா யோசிப்பது ஏன் என எழில் கண்ணீருடன் கேட்கிறார். இதேபோல ராமமூர்த்தியும் வெளியில் செல்வதாக கூறி தங்களை சங்கடப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார். இதற்கெல்லாம் ஒருபடி மேலே போகும் ஈஸ்வரி, தன்னுடைய தலைமீது அடித்து அவர், எந்த சூழலிலும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொள்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X