விவாகரத்தே கிடைச்சிடுச்சு.. பாக்கியாவின் அடுத்த மூவ் என்ன.. ரசிகர்கள் ஆவலுடன் வெயிட்டிங்
சென்னை : விஜய் டிவியின் பிரதான சீரியலாக மாறியுள்ளது பாக்கியலட்சுமி தொடர்.
இந்தத்தொடரில் அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக மாறியுள்ளது.
இந்நிலையில் முக்கியமான கட்டத்தை தொடர் தற்போது எட்டியுள்ளது.

பாக்கியலட்சுமி தொடர்
விஜய் டிவியின் பிரதான தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியல் தொடர்ந்து டிஆர்பியில் சிறப்பான இடத்தில் உள்ளது. கடந்த வாரத்தில் முதலிடத்தில் இருந்த நிலையில், இந்த வாரத்தில் சற்றே கீழிறங்கி இரண்டாவது இடத்தில் உள்ளது. சன் டிவியின் கயல் தொடர் தற்போது முதலிடத்தில் உள்ளது.

காதலில் கோபி
பாக்கியலட்சுமி தொடரில் கோபி, அவரது மனைவி பாக்கியா மற்றும் காதலி ராதிகா என மூன்று கதாபாத்திரங்களே முதன்மை படுத்தப்பட்டுள்ளன. இவர்கள் மூவரை சுற்றியே தற்போது கதைக்களம் காணப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய முன்னாள் காதலியை சந்திக்கும் கோபி அவருடன் மீண்டும் காதலை புதுப்பித்துக் கொள்கிறார்.

தேன்கூட்டில் கல்லெறிந்த கோபி
ஆனால் திருமணமான ஒரு மகன், மேலும் ஒரு மகன், மகள், மனைவி அப்பா, அமமா என அவரது பெரிய குடும்பத்தை அவர் நினைத்துக்கூட பார்க்கவில்லை. தேன்கூடு போல அழகான தன்னுடைய குடும்பத்தில் தானே கல்லெறிந்து அதை எட்டிநின்று பார்க்கிறார் கோபி. ஆனால் அதனால் தானும் பாதிக்கப்பட போகிறோம் என்று தெரிந்தும் அவர் அதை தொடர்கிறார்.

சுயநலமாக செயல்பட்ட கோபி
தன்னுடைய மனைவிக்கு தெரியாமலேயே விவாகரத்திற்கு அவரிடமிருந்து கையெழுத்து வாங்கி, அதை நடத்துகிறார். தன்னுடைய மனைவி மற்றும் காதலி இருவருக்கும் எந்த விஷயமும் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார். இதன்மூலம் சுயநலமாக செயல்படும் கோபியின் குட்டு வெளிப்பட்டபோது, அதனால் அவர் அதிகமான பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வந்தது.

கணவனுக்கு விவாகரத்து கொடுத்த பாக்கியா
காதலி ராதிகா மும்பை போவதாக கூறுகிறார். மனைவி பாக்கியாவோ தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறுகிறார். தொடர்ந்து தன்னுடைய கணவன் தன்னிடம் கேட்ட விவாகரத்தை கொடுக்கும் முடிவிற்கு வருகிறார். அப்போது அவரை சமாதானப்படுத்த குடும்பத்தினர் எவ்வளவோ சொல்லியும் தன்னுடைய முடிவில் அவர் உறுதியாக உள்ளார்.

விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்
இதையடுத்து இன்று வெளியாகியுள்ள புதிய ப்ரமோவில் அவருக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்குவதாக காட்சிகள் காணப்படுகின்றன. ஜட்ஜ் இருவரையும் கவுன்சிலிங் செல்கிறார்களா என்று கேட்கிறார். அதற்கு பதில் சொல்லும் பாக்கியா, கணவனாக இருந்தாலும் சுயமரியாதையை விட்டுவிட்டு அண்டி பிழைப்பது அவமானம் என்றும் உழைத்து பிழைக்க ஆயிரம் வழிகள் உள்ளதாகவும் தன்னுடைய கணவனுக்கு விவாகரத்து வழங்க தான் தயாராக உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.


Click it and Unblock the Notifications











