ராதிகாவுடன் கல்யாணம் குறித்து அம்மாவிடம் சொன்ன கோபி.. கொந்தளித்த ஈஸ்வரி அம்மாள்!

சென்னை : விஜய் டிவியின் முன்னணி மற்றும் முக்கியமான தொடராக உள்ள பாக்கியலட்சுமி தொடர் அடுத்தடுத்த ட்விஸ்ட்களுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்தத் தொடரில் காலத்தை கடந்த காதலை விடவும் முடியாமல் குடும்பத்தினரையும் விட்டுக் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார் கோபி.

கோபி கேட்ட விவாகரத்தை கொடுத்த அவரது மனைவி பாக்கியா, தொடர்ந்து குடும்பத்தின் பாரத்தை சுமக்கத் துவங்கியுள்ளார்.

விஜய் டிவி தொடர்கள்

விஜய் டிவி தொடர்கள்

விஜய் டிவியின் தொடர்கள் எப்போதுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருபவை. பல தொடர்களை ரூம் போட்டு யோசித்து வித்தியாசமான கொடுத்து வருகிறது இந்த சேனல். அந்த வகையில் இந்த சேனலின் பல தொடர்கள் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகின்றன. புத்தம் புதிய கதைக்களத்துடன் சீரியல்களை களமிறக்கி வருகிறது.

பாக்கியலட்சுமி தொடர்

பாக்கியலட்சுமி தொடர்

இந்த சேனலின் முக்கியமான மற்றும் முதன்மையான தொடராக மாறியுள்ள பாக்கியலட்சுமி, தொடர்ந்து பல ட்விஸ்ட்களுடன் சிறப்பான கதைக்களத்துடன் ரசிகர்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் ராதிகாவுடனான கோபியின் காதல் குறித்து அறியவரும்போது மிகவும் உடைந்து போகிறார் அவரது மனைவி பாக்கியா.

கணவனுக்கு விவாகரத்து

கணவனுக்கு விவாகரத்து

தொடர்ந்து தன்மீது விருப்பமில்லாமல் இருக்கும் தனது கணவனுக்கு விவாகரத்தும் கொடுக்கிறார். முன்னதாக வீட்டை விட்டு வெளியேறும் இவர், வெளியில் போய் உழைத்து முன்னேறுவார், குடும்பத்திற்கு வழிகாட்டுவார் என்று பார்த்தால், அந்த இடத்தில் தான் ட்விஸ்ட். அவர் வெளியேறுவதற்கு மாறாக கோபி வீட்டை விட்டு வெளியேறும் சூழல் உருவாகிறது.

2வது திருமணத்திற்கு திட்டம்

2வது திருமணத்திற்கு திட்டம்

அப்பொழுதாவது கோபி அடங்குவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வெளியில் போன கோபி, அதையே சாதகமாக்கிக்கொண்டு ராதிகாவின் கரிசனத்தை சம்பாதிக்கிறார். திருமணத்திற்கும் அடித்தளம் போடுகிறார். இதனிடையே தான் ராதிகாவை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக கோயிலில் வைத்து தன்னுடைய அம்மா ஈஸ்வரியிடம் கூறுகிறார்.

பாக்கியாவை கரித்துக் கொட்டும் ஈஸ்வரி

பாக்கியாவை கரித்துக் கொட்டும் ஈஸ்வரி

தன்னுடைய மகன் வீட்டை விட்டு போனதற்கு பாக்கியாதான் காரணம் என்று கரித்துக் கொட்டிக் கொண்டிருந்த ஈஸ்வரி, இதனால் அதிர்ச்சி அடைகிறார். கோபியை திட்டித் தீர்க்கிறார். வீட்டிற்கு வருமாறு அவரது கையை பிடித்து இழுத்து செல்கிறார். ஆனால் கோபி ஆத்திரத்துடன், தனக்கு எதிராக செயல்பட்ட பாக்கியா இருக்கும் வீட்டிற்கு தான் வரமாட்டேன் என்று கூறுகிறார்.

கோபி மீது ஆத்திரம்

கோபி மீது ஆத்திரம்

இதனால் ஈஸ்வரியின் கோபம் எல்லை மீறுகிறது. தன்னை மீறி, குடும்பத்தை மீறி கோபி திருமணம் செய்துக் கொள்ள முடியுமா என்று கோபத்துடன் கேட்கிறார். தொடர்ந்து இந்தத் திருமணம் எப்படி நடக்கிறது என்று தான் பார்ப்பதாகவும் கூறுகிறார். இதனால் கோபி செய்வதறியாமல் திகைக்கிறார். இவ்வாறு இந்தத் தொடரின் கதைக்களம் காணப்படுகிறது.

பாக்கியாவிடம் கோபம்

பாக்கியாவிடம் கோபம்

தன்னுடைய குடும்பத்தின் செலவுகளை சமாளிக்கும்வகையில் கல்யாண கான்ட்டிராக்டை எடுக்கும் பாக்கியா, அதுகுறித்து குடும்பத்தினரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அங்குவரும் ஈஸ்வரி, இங்கு குடியே மூழ்கிப் போகும் அளவில் நடவடிக்கைகள் நடக்கும் நிலையில், சமையல் கான்டிராக்டை பற்றி பாக்கியா பேசுவதை கண்டிக்கிறார்.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

கோபி இல்லாத தன்னுடைய குடும்ப செலவுகளை சுகமான சுமையாகவே ஏற்கிறார் பாக்கியா. கரண்ட் பில், இனியாவின் பள்ளிக் கட்டணம் என அவர் பரிதவிக்கும் நிலையில், தொடர்ந்து என்ன மாதிரியாக இந்தத் தொடர் செல்லும் என்று அறிய ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X