மனைவி -காதலிக்கிடையில் முழிபிதுங்கும் கோபி... விரைவில் மாட்டுவாரா ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி. இந்தத் தொடரில் அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் காணப்படுகின்றன. மனைவி மற்றும் காதலியிடம் சிக்கித் தவிக்கும் கோபி அனைவரையும் கவர்ந்து வருகிறார். இந்த வாரத்தில் பல மேலும் பல ட்விஸ்ட்கள் காணப்படும் என்று புதிய ப்ரமோவில் தெரியவருகிறது.

பாக்கியலட்சுமி தொடர்

பாக்கியலட்சுமி தொடர்

விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முன்னணி தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி. இதன் டிஆர்பி ரேட்டிங் தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்படுகிறது. இதையடுத்தே பாரதி கண்ணம்மா உள்ளிட்ட தொடர்கள் இருந்து வருகின்றன. இதையடுத்தே பாரதி கண்ணம்மாவின் கதைக்களம் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

காதலை மறைக்கும் கோபி

காதலை மறைக்கும் கோபி

பாக்கியலட்சுமி தொடரில் தொடர்ந்து தன்னுடைய காதலை மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து மறைக்க கோபி படாத பாடு பட்டு வருகிறார். மனைவியை விவாகரத்து செய்ய இவர் மேற்கொண்ட செயல்களும் அதையொட்டிய சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்தின.

கோபி அப்பாவின் பிறந்தநாள்

கோபி அப்பாவின் பிறந்தநாள்

இந்நிலையில் தற்போது கோபியின் அப்பாவின் 75வது பிறந்தநாளையொட்டி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்கள் தற்போது மகா சங்கமத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி அடுத்தடுத்த ட்விஸ்ட்களுடன் கதை படு வேகமாக சென்று வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் கதாபாத்திரங்களின் இயல்பான செயல்பாடுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கோபி திணறி வருகிறார்.

ராதிகாவிற்கு அழைப்பு

ராதிகாவிற்கு அழைப்பு

இதனிடையே இந்த விழாவிற்கு தனத்துடன் சென்று ராதிகாவிற்கு அழைப்பு விடுத்து வருகிறார் பாக்கியலட்சுமி. இந்த நிகழ்ச்சிக்கு கோபி கண்டிப்பாக வரவேண்டும் இல்லையென்றால் தான் அவருடன் பேச மாட்டேன் என்று ராதிகா அடம்பிடிக்க தன்னுடைய வீட்டின் நிகழ்ச்சிக்கு தான் எப்படி விருந்தாளியாக போவது என்று கோபி முழிக்க அடுத்தடுத்த பிரமோக்கள் களைகட்டி வருகின்றன.

கோபத்தில் கோபி

கோபத்தில் கோபி

இந்த வாரம் சிறப்பான தரமான பல சம்பவங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ராதிகாவின் இந்த பிடிவாதத்தை அடுத்து, அவரை ஏன் அழைத்தாய் என்று பாக்கியலட்சுமியிடம் சண்டை பிடிக்கிறார் கோபி. அவரின் இந்த செயல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் உள்ளிட்டவர்களுக்கு சந்தேகத்தை எழுப்புகிறது.

விஷயத்தை யூகிக்கும் தனம்

விஷயத்தை யூகிக்கும் தனம்

இந்நிலையில் இந்த விழாவை நடக்க விடமாட்டேன் என்று சபதம் செய்கிறார் கோபி. அவர் ராதிகா மற்றும் அவரது நண்பருடன் போனில் பேசுவதை கேட்டுவிடுகிறார் செழியன். தனத்திற்கும் இந்த விஷயம் தெரியவருகிறது. இதையடுத்து வரும் வாரங்களில் பல சுவாரஸ்யங்களுடன் கதை நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்நிலையில் தொடர்ந்து ராதிகா விஷயத்தில் கோபி தன்னுடைய குடும்பத்தினரிடம் இருந்து எஸ்கேப் ஆவது குறித்து ரசிகர்கள் மிகவும் கோபம் கொண்டு வருகின்றனர். அவர் விரைவில் குடும்பத்தினரிடம் மாட்டிக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டி வருகின்றனர். அந்த அளவில் கோபி கேரக்டர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X