கோபியை வெளியில் துரத்திய ராதிகா... புலம்பலில் கோபி.. அடுத்தடுத்த ட்விஸ்ட்டில் பாக்கியலட்சுமி தொடர்

சென்னை : விஜய் டிவியின் முன்னணி தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி. இந்தத் தொடர் அடுத்தடுத்த ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தத் தொடரில் திருமணமான மகனின் தந்தையாக இருக்கும் கோபி, தன்னுடைய காதலுக்காக குடும்பத்தினரை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்.

இதனால் அவரது குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை கதைக்களமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது தொடர்.

பாக்கியலட்சுமி தொடர்

பாக்கியலட்சுமி தொடர்


விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முதன்மையான தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி. இந்தத் தொடர் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து முன்னேறி தற்போது சேனலின் முன்னணி தொடராக மாறியுள்ளது. இதையடுத்தே பாரதி கண்ணம்மா உள்ளிட்ட தொடர்கள் வரிசைக்கட்டி வருகின்றன.

காதலுக்காக போராடும் கோபி

காதலுக்காக போராடும் கோபி

இந்தத் தொடரில் பாக்கியலட்சுமி, கோபி, ராதிகா என்ற மூன்று கேரக்டர்களை சுற்றியே கதை நகர்ந்து வருகிறது. திருமணமான மகனை வைத்துக் கொண்டு கோபி இந்தத் தொடரில் தன்னுடைய காதலிக்காக மெனக்கெடுவது கதையில் அழுத்தமான காட்சிகள் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

கோபி மீது குடும்பத்தினர் சந்தேகம்

கோபி மீது குடும்பத்தினர் சந்தேகம்

தன்னுடைய காதல் மற்றும் காதலி ராதிகா குறித்த விஷயங்களை தன்னுடைய மனைவி பாக்கியா மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து மறைக்க கோபி போராடினாலும் அவரது நடவடிக்கைகளால் குடும்பத்தினருக்கு அவர்மீது சந்தேகம் எழுகிறது. பாக்கியலட்சுமிக்கும் கணவன்மீது சந்தேகம் ஏற்பட்டாலும் அதையெல்லாம் நம்பாமல் அவர் அப்பாவியாக காணப்படுகிறார்.

மறுமணத்திற்காக போராட்டம்

மறுமணத்திற்காக போராட்டம்

அந்த அப்பாவித்தனத்தை பயன்படுத்தி அவரிடமிருந்து டைவர்ஸ் பெற்று, ராதிகாவை திருமணம் செய்துக் கொள்ளவே கோபி பிரயத்தனப்படுகிறார். ஆனால் அவரது முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிகிறது. ஆனாலும் தன்னுடைய முயற்சியில் சிறிதும் மனம் தளராத விக்ரமாதித்தன் போல அவர் தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் இருக்கிறார்.

மகா சங்கமம்

மகா சங்கமம்

கடந்த சில நாட்களில் சீரியலில் கோபியின் தந்தையின் பிறந்தநாளையொட்டி மகா சங்கமம் நடத்தப்பட்டது. இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோபியின் காதல் கதையை தெரிந்து அதை குடும்பத்தினரிடம் கூறாமல் ராதிகாவிடம் தெரிவிக்கின்றனர்.

கோபியிடம் ராதிகா வாக்குவாதம்

கோபியிடம் ராதிகா வாக்குவாதம்

இதையடுத்து கோபியின் வீட்டை அவரது குடும்பத்தினரை தான் பார்த்தே ஆக வேண்டும் என்று கோபியிடம் வாக்குவாதம் செய்கிறார் ராதிகா. அவரை எப்படி எப்படியோ சமாதானப்படுத்த முயற்சிக்கிறார் கோபி. தன்னுடைய குடும்பத்தினரிடம் ராதிகாவை அறிமுகப்படுத்த முடியாது என்று கோபி கூறுகிறார். இதையடுத்து அவரை வீட்டை விட்டு வெளியில் செல்லுமாறு ஆத்திரத்துடன் கூறுகிறார் ராதிகா.

கோபி புலம்பல்

கோபி புலம்பல்

இதையடுத்து தன்னுடைய காரில் வீடு திரும்பும் கோபி, வழியில் காரை நிறுத்திவிட்டு புலம்பித் தள்ளுகிறார். யாரோ ஒரு மூர்த்தியின் பேச்சைக் கேட்டு தன்னிடம் ராதிகா இப்படி நடந்துக் கொள்வது குறித்து அவர் புலம்பலை வெளிப்படுத்துகிறார். இதுபோல தொடரின் புதிய ப்ரமோ காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X