twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராதிகாவுடன் கோபிக்கு திருமணம்? பாக்கியலஷ்மி சீரியலில் காத்திருக்கும் அடுத்தடுத்த ட்விஸ்ட்கள்

    |

    சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக காணப்படுகிறது பாக்கியலஷ்மி சீரியல்.

    தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு இந்தத் தொடர் ஒளிப்பரப்பாகி வருகிறது. ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தொடராகவும் உள்ளது.

    தொடரில் அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் காணப்படும் நிலையில், தொடர்ந்து ரசிகர்களை பரபரப்பிற்குள்ளாக்கும் வகையில் பல திருப்பங்கள் வரும் வாரத்திலும் தொடர உள்ளதாம்.

    தலைவர் படத்தில் சர்ப்பிரைஸ் கொடுக்க காத்திருக்கும் 2 ஸ்டார்கள்? தலைவர் படத்தில் சர்ப்பிரைஸ் கொடுக்க காத்திருக்கும் 2 ஸ்டார்கள்?

    விஜய் டிவி தொடர்கள்

    விஜய் டிவி தொடர்கள்

    விஜய் டிவி எவ்வளவிற்கு எவ்வளவு வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி ரசிகர்களை குஷியாக்கி வருகிறதோ அதே போல அந்த டிவியின் தொடர்களும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய சீரியல்களாகவே காணப்படுகின்றன. இந்த சீரியல்களுக்கு பெண்களை போலவே ஆண்களும் ரசிகர்களாக உள்ளனர்.

    பரபரப்பான சீரியல்

    பரபரப்பான சீரியல்

    விஜய் டிவியின் பிரைம் ஸ்லாட்டில் வெளியாகி வருகிறது பாக்கியலஷ்மி தொடர். இந்தத் தொடரில் முன்னாள் காதலியுடனான நெருக்கம், 2வது திருமணம் செய்துக் கொள்ளும் ஆசை மற்றும் அதற்காக தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்யும் முடிவு என்று லீட் கதாபாத்திரத்தின் அடுத்தடுத்த மூவ்கள் சீரியலை மிகவும் பரபரப்பாக்கி வருகிறது.

    விவாகரத்து பேப்பரில் கையெழுத்து

    விவாகரத்து பேப்பரில் கையெழுத்து

    தன்னுடைய காதலியை திருமணம் செய்யும் நோக்கத்தில் கோபி, தனது மனைவி பாக்கியலஷ்மியை ஏமாற்றி விவாகரத்து பேப்பரில் கையெழுத்து வாங்குகிறார். என்ன விவரம் என்று தெரியாமல் கணவன்மீது இருக்கும் நம்பிக்கையில் இந்த விவாகரத்து பேப்பரில் பாக்கியலஷ்மியும் கையெழுத்து போடுகிறார்.

    ரசிகர்கள் அதிர்ச்சி

    ரசிகர்கள் அதிர்ச்சி

    விஷயம் தெரியாமல் அவர் செய்யும் இந்த செயல் ரசிகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதையடுத்து தனது காதலியை திருமணம் செய்யவிருக்கிறார் கோபி. அவர்களுக்கு திருமணம் நடைபெறுவதாக கதை நகரவுள்ளதாக கூறப்படுகிறது.

    கோபி -ராதிகா திருமணம்

    கோபி -ராதிகா திருமணம்

    இதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வரும் வாரத்தில் இந்த திருமணம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. மேலும் வரும் வாரத்தில் சீரியலில் அடுத்தடுத்த ட்விஸ்டுகளை இயக்குநர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    உண்மை தெரியவருமா?

    உண்மை தெரியவருமா?

    ஒரு பக்கம் கோபியின் அப்பா முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவராலும் உண்மை வெளிப்படுத்த முடியாத நிலையில், பாக்கியாவிற்கு உண்மை தெரியவருமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். கோபியின் திருமணம் நடைபெறுமா, நடைபெற்றால் பாக்கியலஷ்மியின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்ற கோணத்தில் தொடர் நகரவுள்ளது.

    English summary
    Bhagyalaxmi serial in Vijay TV -more twists in coming week
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X