பாரதி கண்ணம்மா 2 தொடரில் ஒரே மாதத்தில் முக்கிய நடிகை மாற்றம்.. ரசிகர்கள் அதிருப்தி!
சென்னை : விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடர் மிகச்சிறந்த வரவேற்பை ரசிகர்களிடையே பெற்ற நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறப்பான க்ளைமாக்சுடன் நிறைவு பெற்றது.
இந்நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா 2 தொடர் வினுஷா, சிபு சூர்யன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்க சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது.
இந்தத் தொடருக்கும் முந்தைய தொடரை போலவே ரசிகர்கள் தங்களது ஏகோபித்த ஆதரவை அளித்து வருகின்றனர்.

விஜய் டிவி சீரியல்கள்
விஜய் டிவியின் அடுத்தடுத்த தொடர்கள் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், முன்னணியில் பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ஈரமான ரோஜாவே போன்ற தொடர்கள் இடம்பெற்றுள்ளன. இந்தத் தொடர்கள் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் உள்ளன. இதில் பாரதி கண்ணம்மா தொடர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறப்பான க்ளைமாக்சுடன் நிறைவு பெற்றது.

பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடர்
தொடர் நிறைவடைந்த இரு தினங்களிலேயே இரண்டாவது பார்ட் துவங்கப்பட்டது. இதில் கதைக்களம் மாறுபட்டு இருந்தாலும் பாரதி, கண்ணம்மா, சவுந்தர்யா, அஞ்சலி என அந்த தொடரின் கேரக்டர்கள் பெயரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தத் தொடரின் அஞ்சலி கேரக்டரில் நடித்துவந்த பிரியங்கா தாஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

முக்கிய நடிகை மாற்றம்
பிரியங்கா தாசிற்கு பதிலாக தற்போது அஞ்சலி கேரக்டரில் சாய் ரித்து கமிட்டாகியுள்ளார். ஒரு மாதத்திற்குள்ளாகவே இந்த மாற்றம் சீரியலில் நடந்துள்ளது. அஞ்சலியாக பிரியாங்காவை பார்த்து பழகிய ரசிகர்கள் புதிதாக களமிறங்கியுள்ள சாய் ரித்துவிற்கு எந்தமாதிரியான வரவேற்பை கொடுப்பார்கள் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு சீரியலிலும் அதிகமான கேரக்டர்களை வைத்து வேலை வாங்கும் சூழல் உள்ளதால், இத்தகைய கேரக்டர்கள் மாற்றம் தவிர்க்க முடியாததாகியுள்ளது.

ரசிகர்கள் அதிருப்தி
இதுபோன்ற சைடு கேரக்டர்களின் மாற்றங்களைகூட ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள தயாராகவே உள்ளனர். ஆனால் லீட் கேரக்டர்களின் மாற்றங்களை ஏற்றுக் கொள்வது ரசிகர்களுக்கு சிரமமாகவே உள்ளது. இதே சீரியலின் முந்தைய பாகத்தில் கண்ணம்மாவாக நடித்துவந்த நடிகை ரோஷினி திடீரென விலகிய நிலையில் வினுஷா அந்தக் கேரக்டரில் இணைந்தார். அவர் ரசிகர்களை தன்னை கண்ணம்மாவாக ஏற்றுக் கொள்ள பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது.

சிறப்பாக பொருந்திய சிபு சூர்யன்
அதேபோல கடந்த சீசனில் பாரதியாக நடித்த அருண் விலகியுள்ள நிலையில், தற்போது பாரதியாக சிபு சூர்யன் இணைந்துள்ளார். இது அடுத்த சீசன் என்பதால், இதை ரசிகர்கள் எளிதாக ஏற்றுக் கொண்டுள்ளனர். கிராமத்து கெட்டப்பில் சிபு சூர்யன் சிறப்பாகவே பொருந்தியுள்ளார். சிறையில் இருந்து வெளியில் வந்த சித்ரா, கண்ணம்மாவாக மாறிய தருணத்தை இந்தத் தொடர் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











