சித்ரா கண்ணம்மாவாக மாறிய தருணம்.. பாரதி கண்ணம்மா தொடரில் ட்விஸ்ட்!
சென்னை : விஜய் டிவியில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பாரதி கண்ணம்மா தொடர் கடந்த வாரத்தில் எண்ட் கார்ட் போட்டது.
இதையடுத்து இரண்டு தினங்களிலேயே அடுத்த சீசனையும் துவங்கியுள்ளது. இந்தத் தொடரில் கண்ணம்மாவாக வினுஷாவே நடித்து வருகிறார்.
பாரதியாக சன் டிவியின் ரோஜா சீரியலில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த சிபு சூரியன் களமிறங்கியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை இந்தத் தொடர் ஏற்படுத்தியுள்ளது.

பாரதி கண்ணம்மா தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடராக ஆண்டுகளை கடந்து ஒளிபரப்பாகி வந்தது பாரதி கண்ணம்மா. அருண் மற்றும் ரோஷினி நடிப்பில் இந்தத் தொடர் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தொடராக இருந்தது. கணவன் -மனைவிக்குள் ஏற்படும் சந்தேகம் என்னும் தீ எப்படி அவர்களது வாழ்க்கையை சிதைக்கும் என்பதை மையமாக கொண்டு இந்தத் தொடர் ஒளிபரப்பானது.

ரசிகர்களிடம் சலிப்பை ஏற்படுத்திய தொடர்
இந்நிலையில் இந்தத் தொடர் ஒரே மாதிரியான கதைக்களத்தில் பயணித்ததால் ரசிகர்கள் சலிப்படைந்தனர். மேலும் சிறப்பாக அனைவரது மனதிலும் கண்ணம்மாவாகவே வாழ்ந்துவந்த ரோஷினியும் தொடரிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக வினுஷா தொடரில் கண்ணம்மாவாக இணைந்தார். அவர் ரசிகர்களை கவர்ந்த போதிலும் தொடரின் ஒரேமாதிரியான கதைக்களம் தொடர் எப்போது நிறைவடையும் என்ற எண்ணத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது.

நிறைவடைந்த பாரதி கண்ணம்மா தொடர்
இதையடுத்து தொடரில் வெண்பாவின் சூழ்ச்சி, பாரதிக்கு தெரியவந்தது. தொடர்ந்து அவர் கண்ணம்மா எந்தவிதமான களங்கமும் இல்லாதவர் என்றும், ஹேமா மற்றும் லஷ்மி தன்னுடைய குழந்தைகள் தான் என்றும் தெரிந்துக் கொள்கிறார். இதையடுத்து பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்கும் மீண்டும் திருமணத்தை நடத்தி தொடரை சீரியல் குழு முடித்து வைத்தது.

பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடர்
இந்நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா இரண்டாவது சீசன் துவங்கியுள்ளது. இதில் கண்ணம்மாவாக வினுஷாவே நடித்து வருகிறார். பாரதியாக சன் டிவியின் ரோஜா தொடர் புகழ் சிபு சூரியன் களமிறங்கியுள்ளார். கடந்த சில தினங்களாக இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் சித்ராவாக நடித்து வருகிறார் வினுஷா.

சித்ரா கண்ணம்மாவாக மாறிய தருணம்
சிறையில் தண்டனை அனுபவித்துவரும் அவர், சிறுவயதிலேயே வீட்டை விட்டு ஓடிவந்த கண்ணம்மாவை சந்திக்கிறார். அவர்களுக்கு நல்ல நட்பு ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் கண்ணம்மா கொல்லப்படுகிறார். இதையடுத்து கண்ணம்மாவாக மாறி அவரது வீட்டிற்கு வருகிறார் சித்ரா.

அடிதடி ஆசாமியாக பாரதி
இதனிடையே முதல் சீசனில் டாக்டராக, மிகவும் மெச்சூர்டான நடிப்பை அருண் வெளிப்படுத்திய நிலையில், இந்த சீசனில் அடிதடிகளில் ஈடுபடுபவராக சிபு சூர்யன் நடித்துள்ளார். இதனால் அவரது திருமணம் தடைபடுவதாக காட்சிகள் காணப்படுகின்றன. இதனிடையே அவருக்கு கண்ணம்மா எப்படி ஜோடியாவார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











